Published:Updated:

நெதர்லாந்து: வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்களுக்கான நாடு! - நாடுகளின் கதை - 10

நாடுகளின் கதை 10- நெதர்லாந்து
News
நாடுகளின் கதை 10- நெதர்லாந்து

நாளுக்கு நாள் விலையேறும் பெட்ரோல் பற்றி நாம் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம்?! ஆனால், அங்குள்ளவர்கள் ஜாலியாக சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஒருகாலத்தில் நிலவிய எண்ணெய் பஞ்சமும், வாகன விபத்தின் அதிகமான எண்ணிக்கையும் அந்நாட்டை சைக்கிளை கையிலெடுக்கத் தூண்டியிருக்கிறது.

Published:Updated:

நெதர்லாந்து: வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்களுக்கான நாடு! - நாடுகளின் கதை - 10

நாளுக்கு நாள் விலையேறும் பெட்ரோல் பற்றி நாம் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம்?! ஆனால், அங்குள்ளவர்கள் ஜாலியாக சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஒருகாலத்தில் நிலவிய எண்ணெய் பஞ்சமும், வாகன விபத்தின் அதிகமான எண்ணிக்கையும் அந்நாட்டை சைக்கிளை கையிலெடுக்கத் தூண்டியிருக்கிறது.

நாடுகளின் கதை 10- நெதர்லாந்து
News
நாடுகளின் கதை 10- நெதர்லாந்து

குளிர்ந்த காற்று... மேகம் சூழ்ந்த வானம்... ஒரு சைக்கிளைக் எடுத்துக் கொண்டு நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே ஓட்டிச் செல்லும் போது புருவத்தை உயர்த்த வைக்கும், பிரமாண்ட கட்டடங்களும், வீதிகளும்... அதைத் தாண்டி கொஞ்சம் தள்ளிப் போனால் கண்களுக்கு விருந்தாய், உள்ளத்திற்கு அமைதி தரும் துலிப் மலர் தோட்டங்கள், செல்ல மனமில்லாமல் சைக்கிளின் பிடலை அழுத்தி நகர்ந்தால் உணர்ச்சிகளைத் தூண்டும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள்...

அந்த சைக்கிளை ஓட்டுபவராக நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும்?! மேல்சொன்ன, எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்றால், நெதர்லாந்து செல்ல வேண்டும். வாருங்கள் அப்படி ஒரு பயணம்தான் இந்தக் கட்டுரை!
நெதர்லாந்து
நெதர்லாந்து
Pexal

பெல்ஜியத்திற்கும், ஜெர்மனிக்கும் இடையே ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு நாடுதான் நெதர்லாந்து. 'ஹாலந்து' (Holland) என்ற இன்னொரு பெயரும் இதற்கு உண்டு. குளிர்ந்த காற்று, குறுக்கும் நெடுக்கும் ஓடும் வாய்க்கால்கள், அதிலோடும் படகுகள், வண்ணப் பூக்கள், காற்றலைகள் என்று ஒரு தனி ஹாரிபாட்டர் நகர அழகியலைக் கொண்டது நெதர்லாந்து. இது சின்ன நாடு என்றாலும் 1.80 கோடி மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள், டச்சு மக்களாக அறியப்படுகின்றனர். நெதர்லாந்து நெருக்கமான மக்கள் தொகை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இதன், தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam).

வரலாறு!
1500-ம் ஆண்டு காலகட்டங்களில் ஸ்பெயின் ஆளுகையின் கீழ் நெதர்லாந்து இருந்தது. அடிமைத்தனத்திலிருந்து மீள போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று எண்ணிய ஹாலந்து மக்கள் 1568ல் போராட்டத்தைத் தொடங்கினர். இங்கிலாந்தின் உதவியும் கிடைத்தது.

80 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவு 1648-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றார்கள். விடுதலைக்குப் பின், 17-ம் நூற்றாண்டில் நெதர்லாந்து பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. உலகின் பல இடங்களில் டச்சுக் குடியேற்றம் நடந்தது. கடல் வல்லரசாக திகழ்ந்த இவர்கள் 15000-க்கும் அதிகமான வணிகக் கப்பல்களை கொண்டிருந்தனர். நெதர்லாந்து உலகின் முதலாவது முதலாளித்துவ நாடு என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நெதர்லாந்து | Netherlands
நெதர்லாந்து | Netherlands
Pexal

பின், 1806 காலகட்டங்களில் நெப்போலியன் போனபார்ட்டின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. அவர், தன் தம்பியை நெதர்லாந்தின் மன்னனாக அறிவித்து ஆட்சி நடத்தினார். பின், 1813-ம் ஆண்டு பல்வேறு தோல்வியினால் நெப்போலியன் தன் படைகளை விலக்கிக் கொள்ள நெதர்லாந்து விடுதலைப் பெற்றது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பிறகு மீண்டும் சுதந்திரம் பெற்றது.

இவ்வளவு, அடிமைத்தனம், பொருளாதார பாதிப்பு என்பதையெல்லாம் தாண்டி உலகின் முக்கிய சுற்றுலாத்தளமாக நெதர்லாந்து மாறியுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் முதல் 5 இடத்துக்குள் நெதர்லாந்து வந்துவிடும்.

ஹாலந்து மக்கள் உண்மையில் ஆரோக்கியம் நிறைந்தவர்கள். உலகில் அதிக உயரமானோர் வாழும் நாடும் இதுதான். சராசரியாக இங்குள்ள ஆண்கள் 6 அடி உயரமும் பெண்கள் 5 அடி உயரமும் இருப்பார்கள்.

நாளுக்கு நாள் விலையேறும் பெட்ரோல் பற்றி நாம் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம்?! ஆனால், அங்குள்ளவர்கள் ஜாலியாக சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஒருகாலத்தில் நிலவிய எண்ணெய் பஞ்சமும், வாகன விபத்தின் அதிகமான எணணிக்கையும் அந்நாட்டை சைக்கிளை கையிலெடுக்கத் தூண்டியிருக்கிறது. மிதிவண்டிகளுக்கென தனி சாலை, பெரிய சைக்கிள் பார்க்கிங், சைக்ளிங் டூரிசம் என உலகத்திற்கே சைக்கிளின் முன்மாதிரியாக நெதர்லாந்து தான் இருக்கிறது. இப்போதும், நம் நாட்டில் பெட்ரோல் விலை பற்றி பேசுபவர்கள் நெதர்லாந்து போல சைக்கிளுக்கு மாறிவிடலாம் என கீச்சிடுவதை அவ்வப்போது பார்க்கலாம்.

நெதர்லாந்து
நெதர்லாந்து
Pixabay

நெதர்லாந்து என கூகுளில் நீங்கள் தேடினால் முதலில் காற்றாலைகளின் படங்கள் வரும். காரணம், இன்றும் காற்றாலைகளின் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மின்சாரத்தை தயாரித்து வருகிறது. கடந்த 200 வருடங்களுக்கு முன் விட்டுச்செல்லப்பட்ட 1000 காற்றாலைகள் இன்றும் அங்கு இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த பூக்கள் தோட்டங்களில் ஒன்றான கீவ்கென்ஹாப் (Keukenhof) இங்குதான் இருக்கிறது. வசந்த காலங்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் இங்கு வளர்க்கப்படும் துலிப் பூக்களை (Tulip Flower) பார்வையிட வருகிறார்கள். ஐரோப்பாவின் தோட்டம் என அழைக்கப்படும் நெதர்லாந்து தான் உலகில் அதிகமான பூக்கள் விற்பனை செய்யும் நாடு.

உலகின் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை தேடிப்பார்த்தால் அதில் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். தலைசிறந்த ஓவியர் வேன் காக் (Van Gogh) ஹாலந்தைச் சேர்ந்தவர்தான். அவர் பெயரில் பெரிய அருங்காட்சியகமே இங்கு இருக்கிறது. ஓவியர் ரெம்பிராண்ட் (Rembrandt), உலகின் தலைசிறந்த F1 கார்பந்தைய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) என ஹாலந்து நாட்டுப் பிரபலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சிறந்த நிதி நிறுவனங்களாலும், தொழில் வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது இந்நாடு. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களில் 'பிலிப்ஸ்' நிறுவனம் கண்டிப்பாக இடம்பெறும். அந்தக் கம்பெனி நெதர்லாந்தில் தான் தோற்றுவிக்கப்பட்டது.

உலகின் தலைசிறந்த மியூசிக் DJ-க்கள் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். சரி, எல்லாம் கலையாகவே இருக்கிறது... விவசாயம், உணவு எல்லாம் எப்படி என்று நீங்கள் கேட்கலாம். விவசாயத்தில் மிகப்பெரும் வளர்ச்சியைக் கொண்ட நாடு. நம் நாட்டில் பல முறை நெதர்லாந்து வெங்காயமும், கேரட்டும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. காய்கறிகள் மட்டுமல்ல கஞ்சா செடி வளர்ப்பதிலும் முன்னோடிதான். நெதர்லாந்து கஞ்சாவிற்கு மார்க்கெட்டில் தனி மரியாதை.

(அங்கு கஞ்சாவிற்கு அனுமதி இருக்கிறது).

Van Gogh Museum
Van Gogh Museum
Amsterdam, Netherlands

காய்கறிகள், பூக்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்கிறார்களா?! என்றால் தமிழகத்திற்கு சமீபத்தில் 20 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொடுத்துள்ளது நெதர்லாந்து. கொரோனா தொற்று நெதர்லாந்தையும் விட்டுவைக்கவில்லை. 15 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பு 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு என்று தவித்தது. இருப்பினும், முதியோருக்கு முன்னுரிமை, பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அங்காடிகள் திறப்பு, உடற்பயிற்சிக்கு தடையில்லை என வித்தியாசமான ஊரடங்கை அமல்படுத்தியது அரசு... ஆனால், எங்கேயும் பாதுகாப்பு குறையாத வண்ணம் கிருமிநாசினி தெளிப்பு, தனிமனித இடைவெளி என கொரோனாவை கட்டுப்படுத்திய ஒரு முன்னுதாரன நாடாக திகழ்ந்தது நெதர்லாந்து. கொரோனாவால் இந்தியர்கள், நெதர்லாந்து செல்ல விமானத் தடை இருந்த நிலையில் அதை தற்போது நீக்கியுள்ளது நெதர்லாந்து அரசு.

கொரோனா பரவல் முடிந்து, முதல் பத்தியில் சொன்னது போன்ற ஒரு பயணத்தை சீக்கிரம் மேற்கொள்வோம்...

(பாதுகாப்புடன் பயணிப்போம்)