Published:Updated:

`2020 பிப்ரவரி 5-ல் கும்பாபிஷேகம்?' - தஞ்சை பெரிய கோயிலில் வேகமெடுக்கும் பணிகள்

பெரிய கோயில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் வருடம் 2020-ல் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தோராயமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 2020 பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் பெரிய கோயில் முழுவதும் வலம் வந்து ஆய்வு செய்தார்.

கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

தஞ்சாவூர் பெரியகோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பெரிய கோயிலைக் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் பெரிய கோயிலின் பிரமாண்டத்தைப் பார்த்து வியப்படைந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், பெரிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 23 ஆண்டுகள் ஆகிறது. சமூக ஆர்வலர்கள் பலரும் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அறநிலையத்துறை, மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதுடன் கோயிலைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

இதுகுறித்து கோயில் வட்டாரத்தில் பேசினோம்.``பெரிய கோயில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தோராயமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தொல்லியில் துறை சார்பில் விமான கோபுரங்கள் சீரமைப்பு மற்றும் கோபுரத்தின் உள்பகுதி சுத்தப்படுத்தும் பணி, கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள புல்வெளிகள் சீரமைப்பு, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இன்னும் பல பணிகள் நடைபெற உள்ளன.

கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

வரும் பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த முடிவு செய்து அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கோயிலில் யாகாசலை நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் கோயிலுக்குள் வந்து செல்வதற்காக அமைக்கும் பாதை, முக்கியப் பிரமுகர்கள் வந்து செல்லும் வழி ஆகியவை குறித்து கலெக்டர் கோவிந்தராவ் கோயிலின் வரைபடத்தை வைத்துக்கொண்டு அதைப்பார்த்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், கோயிலைச் சுற்றி வலம் வந்து கும்பாபிஷேகத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்'' என்றனர்.