என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

தாயின் இல்லத்துக்கு அன்புடன் வாங்க!

தாயாரம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
தாயாரம்மாள்

விழிச்சவால் பெண்களின் தாய் தாயாரம்மாள்

சென்னை சூளைமேட்டிலுள்ள ‘தாய் கரங்கள்’ இல்லம், விழிச்சவால் கொண்ட பெண்களுக்கான புகலிடமாகத் திகழ்கிறது. அதில் வசிக்கும் பெண்கள் நம்மை பூங்கொத்துச் சிரிப்புடன் வரவேற்க, அந்த இல்லத்தின் நிறுவனரான தாயாரம்மாள் தாயுள்ளத்துடன் உள்ளம் கவர்கிறார். பெற்றோர், பாதுகாவலர் துணையின்றி பள்ளி, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்குத் தாய்போல அடைக்கலம் தருபவர், விழிச்சவால் மற்றும் செவித்திறன் குறைபாடுகள் இருப்பினும், மனதளவில் நிறைவாக வாழ்ந்துவருகிறார்.

“ஆரோக்கியமான குழந்தையாதான் இருந்தேன். மூணாவது படிக்கிறப்போ டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு பார்வைத்திறன் முழுமையா பறிபோயிடுச்சு. பூந்தமல்லியில இருக்கிற பார்வையற்றோர் ஸ்கூல்ல படிச்சேன். எம்.ஏ முடிச்சுட்டு, பிஹெச்.டி முடிச்சேன். வாலாஜாபேட்டை கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல தமிழ்ப் பேராசிரியரா வேலை கிடைச்சது. வாடகைக்கு வீடு எடுத்து, பிறர் உதவி இல்லாம தனியாவே வாழ்ந்தேன்.

தாயின் இல்லத்துக்கு அன்புடன் வாங்க!

15 வருஷங்களுக்கு முன்னாடி திடீர் காய்ச்சல்ல, என் னோட செவித்திறனும் பாதிக்கப் பட்டுச்சு. ஹியரிங் எய்டு கருவியின் உதவியோடுதான் என்னால மத்தவங்களோடு இயல்பா பேச முடியும். எனக்குத் தமிழ் மொழி மேல பற்று அதிகம். என்னோட வேலைதான், எந்தக் கவலைக்கும் இடம் கொடுக்காம என்னைக் கரை சேர்த்துச்சு. பேராசிரியரா 21 வருஷங்கள் மனநிறைவோடு வேலை செஞ்சேன்”

- செவித்திறன் குறைபாட்டால் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவர் பொறுப்பைத் தவிர்த்தவர், 2017-ல் ஓய்வு பெற்றிருக்கிறார். இதற்கிடையே கல்லூரி மாணவர்கள், சுற்றுவட்டார ஏழை மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தாய் கரங்கள்’ அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

“நான் காலேஜ் படிச்ச காலகட்டத்துல, சரியான விடுதி வசதிகூட கிடைக்காம ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்னைப் போன்ற விழிச்சவால் கொண்ட பெண்கள் தங்களோட இளமைக் காலத்துல மனதளவிலும் உடலளவிலும் நிறைய சவால்களை எதிர் கொள்வது வாடிக்கை. அப்படிப்பட்ட வங்களுக்குத் தாய் ஸ்தானத் துல உதவலாம்னு நினைச்சு தான் இந்த அமைப்பையும் இல்லத் தையும் ஆரம்பிச்சேன்.

தாயின் இல்லத்துக்கு அன்புடன் வாங்க!

என் பென்ஷன் பணத்துல வாடகை உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்றேன். நல்ல உள்ளங்கள் சிலரும் உதவுறாங்க. காலேஜ் படிக்கிற விழிச்சவால் கொண்ட 15 பொண்ணுங்க இந்த இல்லத்துல தங்கி யிருக்காங்க. வீடு மாதிரி இங்க எல்லா வசதிகளையும் அவங்களுக்குச் சேவை நோக்கத்துல செய்து கொடுக்கிறோம். படிச்சுகிட்டு இருக்கும் விழிச்சவால் கொண்ட பெண்களை அன்புடன் வரவேற்க எங்க இல்லம் எப்போதும் தயாரா இருக்கும். என்னோட சொந்த வீட்டையும் மாற்றுத் திறனாளிகளுக்காகப் பயன் படுத்த இருக்கோம்”

- முகம்மலரக் கூறும் தாயாரம்மாளை, இல்லத்தில் வசிக்கும் பெண்கள் கட்டி யணைத்துப் புன்னகைக் கின்றனர்.