தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெண்தான் எதிர்காலம்!

உடையில் உரிமை
பிரீமியம் ஸ்டோரி
News
உடையில் உரிமை

உடையில் உரிமை

ண் பெண் இருபாலருக்குமே வசதியான உடை... டி-ஷர்ட். 19-ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ்-அமெரிக்க யுத்தத்தின்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒருவகை உடை இது என்கிறது வரலாறு. உண்மையில் `டி-ஷர்ட்’ என்றாலே நம் நினைவுக்குவருவது அதன் வடிவமோ, நிறமோ அல்ல; அதில் பொறிக்கப்பட்டிருக்கும் படம். குறிப்பாக, வாசகங்கள். கூகுளில் `டி-ஷர்ட் சேயிங்ஸ் அல்லது கோட்ஸ்’ என்று தேடினால், எக்கச்சக்கமான இணையதளங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

`வுமன்’ (Woman)... `வுமன் வுமன் வுமன்’ (Woman Woman Woman)...

`மேன், இட்ஸ் குட் டு பி எ வுமன்’ (Man, It’s good to be a woman).

தலைவர்கள், நடிகர்கள், திரைப்படங்களின் பெயர்கள், தத்துவங்கள், பொன்மொழிகள், பாரதியின் ஆத்திசூடி என மனதுக்குப் பிடித்ததையெல்லாம் வாசகங்களாகப் பொறித்துவிடுகிறார்கள் டி-ஷர்ட் பிரியர்கள். உண்மையில், இப்படிப்பட்ட வாசகங்கள் தனி அடையாளமும்கூட... முக்கியமாகப் பெண்களுக்கு!

கடந்த மூன்று ஆண்டுகளில் உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்கள் அதிகம் பயன்படுத்திய சில டி-ஷர்ட் வாசகங்கள் இவை...

பெண்தான் எதிர்காலம்!

`வுமன்’ (Woman)... `வுமன் வுமன் வுமன்’ (Woman Woman Woman)...

`மேன், இட்ஸ் குட் டு பி எ வுமன்’ (Man, It’s good to be a woman).

இவற்றை, பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ஒரு வழி; `பெண்ணாகப் பிறந்ததால் பெருமைப் படுகிறேன்’ என்பதை உணர்த்துவதற்கு; பெண்ணை ஒரு சக மனுஷியாகப் பார்க்கச் சொல்லி வலியுறுத்த... இப்படி எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

டி-ஷர்ட்டில் இப்படிப்பட்ட பெண்ணியச் சிந்தனை வாசகங்கள் முளைத்ததற்கும் ஒரு வரலாறு உண்டு. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க் நகரங்களில், `அதர்வைல்டு’ (Otherwild) என்ற ரெடிமேடு ஆடைகளை விற்பனை செய்யும் ஒரு கடை இருக்கிறது. இந்தக் கடை உரிமையாளர்களில் ஒருவர் ரேச்சல் பெர்க்ஸ். 2015-ம் ஆண்டு ஒருநாள் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்தார்.

 அலிக்ஸ் டாப்கின்
அலிக்ஸ் டாப்கின்

அதில் இடம்பெற்றிருந்தவை எல்லாம் லிஸா கோவன் என்ற ஓவியர் 1975-ம் ஆண்டுகளில் வரைந்த ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள். அவற்றில் ஒன்று, பெர்க்ஸைக் கவர்ந்துவிட்டது. அமெரிக்காவின் பிரபல இசைக்கலைஞர் அலிக்ஸ் டாப்கின் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் `தி ஃப்யூச்சர் இஸ் ஃபீமேல்’ என்று எழுதியிருந்தது.

பெர்க்ஸ் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. `பெண்தான் எதிர்காலம்’ என்ற அர்த்தத்தைத் தரும் அந்த வாசகம் பொறிக்கப்பட்ட 24 டி-ஷர்ட்டுகளைத் தயாரித்தார். இரண்டே நாள்களில் அவை விற்றுத் தீர்ந்துவிட்டன. அதே வாசகம் பொறிக்கப்பட்ட மேலும் சில டி-ஷர்ட்டுகளைத் தயாரித்தார். அவையும் உடனே விற்றுத் தீர்ந்தன. அதோடு நிற்கவில்லை. `தி ஃப்யூச்சர் இஸ் ஃபிமேல்’ வாசகம் சமூக வலைதளங்களில் ஹேஷ்டாகுடன் வைரலாகின. இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை இந்த ஹேஷ்டாகில் 2 லட்சத்துக்கும் மேல் பதிவுகள் போடப்பட்டிருக்கின்றன.

The future is female

2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பெண் சமத்துவத்தை வலியுறுத்தி டி-ஷர்ட்டுகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவை...

`மை யூட்டரஸ், மை சாய்ஸ்’ (My Uterus, My Choice)

`கேர்ள்ஸ் ஜஸ்ட் வான்ட் டு ஹேவ் ஃபண்டமென்டல் ரைட்ஸ்’ (Girls Just Wanna Have Fundamental Rights)

இப்படிப் பெண்ணியச் சிந்தனைகள் டி-ஷர்ட்வரை எதிரொலிப்பது வரவேற்கத்தக்க அம்சமே.

பெண்தான் எதிர்காலம்!

`மக்களை ஈர்க்கும் ஒரு வாசகமோ, வாக்கியமோ வெகுவேகமாக ஃபேஷன் மார்க்கெட்டில் பரவிவிடும்’ என்கிறார்கள் ஃபேஷன் நிபுணர்கள். அந்த வகையில் பெண்ணியவாதிகள் தங்கள் சிந்தனையை, தத்துவத்தை டி-ஷர்ட்டில் பிரதிபலிப்பது வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. `மீ டூ’போல `வுமன்’ என்ற ஹேஷ்டாக் மேலை நாடுகளில் பிரபலமாகிவருகிறது. சரி, இதனால் என்ன நன்மை?

Girls Just Wanna Have Fundamental Rights

`உலக அளவில் பெண்களின் இன்றைய மிக அத்தியாவசியத் தேவை, பாலின சமத்துவம். அதற்காக எந்த முறையில் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம். அதற்கு டி-ஷர்ட் வாசகங்கள் உதவினால் வரவேற்கலாம். மாறாக, `ஹாய், மை நேம் இஸ்: வுமன்’ (My name is: Woman) என்று எழுதுவதெல்லாம் சரியல்ல. அது பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்களை கேலி செய்வதாகிவிடும்’ என்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

பெண்களுக்குத் தனித்துவமான அடையாளம் அவசியம். அது, வெறும் `பெண்’ என்கிற அடையாளம் அல்ல!