Published:Updated:

நந்தீஸ்வரியும் ராக்கியும் மாட்டுப் பொங்கலும் #MyVikatan

மாட்டுப்பொங்கல்
News
மாட்டுப்பொங்கல்

மனசு பின்னோக்கி சென்றது. சூரிக்கொம்பனும் குண்டனும் கண்ணுக்குள்ளே இன்றும். பரம்பு ஓட்டும்போது குறுக்கே ஓடிய தம்பியை கொம்பன் உதடு கிழித்து விட்டான்.

நந்தீஸ்வரியும் ராக்கியும் மாட்டுப் பொங்கலும் #MyVikatan

மனசு பின்னோக்கி சென்றது. சூரிக்கொம்பனும் குண்டனும் கண்ணுக்குள்ளே இன்றும். பரம்பு ஓட்டும்போது குறுக்கே ஓடிய தம்பியை கொம்பன் உதடு கிழித்து விட்டான்.

Published:Updated:
மாட்டுப்பொங்கல்
News
மாட்டுப்பொங்கல்

- சிவப்பும் நீலமும் இரண்டு கொம்புகளுக்கு. வர்ணம் அடித்து முடிப்பதற்குள், களைத்துப்போய் விட்டது.

- நந்தீஸ்வரி ஒரு இடத்தில் நிற்கவில்லை, மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. முடித்தவுடன் சாதனை செய்தது போன்ற உணர்வு.

- சாலையெங்கும் புதிதாக சிறிய கடைகள். கட்டும் கயிறு, கொம்புக்கயிறு, கழுத்துக் கயிறு மணியுடன் வாங்கி வந்தால், முகச்சிண்டு வாங்கவில்லையா? போய்ட்டு வாங்க.

- மீண்டும் கடைநோக்கி. இம்முறை மொவரச்சிண்டும், சிறிய இணைப்புக்கயிறும்.

- வர்ணங்களுக்குப் பதில், மஞ்சள் உடலெங்கும்.

நந்தீஸ்வரி மிகவும் அழகு!

உடலெல்லாம் பெயின்ட் வாசனையும், வண்ணப் பொடியுமாய், கவலையேதுமின்றி ஆசிர்வாதிக்கப்பட்ட காலம்.

- ராக்கிக்கு சரியான பொறாமை. அவனுடைய அறையிலிருந்து கத்திக்கொண்டே இருந்தான்.

- மனசு பின்னோக்கி சென்றது. சூரிக்கொம்பனும் குண்டனும் கண்ணுக்குள்ளே இன்றும். பரம்பு ஓட்டும்போது குறுக்கே ஓடிய தம்பியை கொம்பன் உதடு கிழித்து விட்டான்.

- எங்களுக்கு வேலை ஆட்டுக்கு பெயிண்ட் அடிப்பது, வண்ணப் பொடி தூவுவது. உடலெல்லாம் பெயின்ட் வாசனையும், வண்ணப் பொடியுமாய், கவலையேதுமின்றி ஆசிர்வாதிக்கப்பட்ட காலம்.

- பிறகு கிணற்றுத்தொட்டியலில் குளியல். இருந்தால் புத்தாடை, இல்லையெனில் கவலையில்லை.

- கிணற்றைங்கரையில் மூன்று கரும்புகள் நட்டு, மஞ்சள் கொம்புகளுக்கு, வாழையிலையில் சர்க்கரைப் பொங்கலும் அச்சு வெல்லமுமாய், காசில்லாமல் இருந்தாலும், மனசு இனித்தது.

- பிறிதொரு நாளில், துள்ளத் துள்ளக் கையெழுத்துப் போட்டபின், கொம்பனும் குண்டனும் கைமாறிப்போனார்கள்.

- மூண்டும் தோட்டத்துக் கிணற்றில் பொங்கல் கொண்டாட இன்னும் வாய்க்கவில்லை...

கண்ணன்