Published:Updated:

“ஹார்லே டேவிட்சனின் இந்த வருட ஸ்பெஷல் இதுதான்!”

எம்.புண்ணியமூர்த்தி
“ஹார்லே டேவிட்சனின் இந்த வருட ஸ்பெஷல் இதுதான்!”
“ஹார்லே டேவிட்சனின் இந்த வருட ஸ்பெஷல் இதுதான்!”
“ஹார்லே டேவிட்சனின் இந்த வருட ஸ்பெஷல் இதுதான்!”


அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லே டேவிட்சன், 2018-ம் ஆண்டுக்கான சாஃப்ட்டெய்ல் வகை பைக்குகளை நேற்று கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  தி ஸ்ட்ரீட் பாப், பேட் பப்,  தி பேட் பாய், ஹெரிடேஜ் க்ளாசிக்   உள்ளிட்ட நான்கு  வகை பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. 12.01 லட்சம் முதல் 17.51 லட்சம் வரை விலைகொண்ட இந்த பைக்குகளின் ஷோரூம் விலை  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய ஹார்லே டேவிட்சன் நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன், ' 2017ல் டூரிங் ரேஞ்ச் அறிமுகமானது. இந்த ஆண்டு, சாஃப்டெய்ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1750 சிசி மில்வாகி 107 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கூலிங் சிலிண்டர் ஹெட் பொருத்தப்பட்டிருப்பதால், புகைப் பிரச்னை இருக்காது. இப்போது அறிமுகமாகியுள்ள நான்கு பைக்குகளிலும் புதிய கடினமாக்கப்பட்ட ஃபிரேம், எல்.இ.டி லைட்டுகள் பொருத்தப்பட்டு எடைகுறைப்பு செய்யப்பட்டுள்ளதால், முன்பு உள்ளவற்றைவிட கையாள எளிதானதாக இருக்கும். நேரடியான, காற்றுக்குச் சரியான உயரத்தில் சாஃப்ட்டெய்ல்  குடும்பத்தில் இணைந்துள்ளது. மினி ஆப் ஹேன்பார், லேஸ்டு வீல்கள், ரேஸிங் கேட்ரிஜ் என ஏராளமான வசதிகளோடு ஸ்ட்ரீட் பாப்... வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பிராஸ் நக்கிள் பேக்கேஜ், பின்பக்கம் மாற்றத்தக்க வகையில் உள்ள மோனோஸாக், பெரிய வீல், அகலமான டயர்கள்,  இரட்டை ரக டிஸ்க், மில்வாகி எய்ட் செக் கொண்டதாக பேட் பாப்...  வடிவமைக்கப்பட்டுள்ளது,  அதேபோல, புதிய லேக்ஸ்டர் வீல்கள்,160 மி.மீ மற்றும் 240 மி.மீ பின்பக்க டயர்கள் என இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் பேட் பாய் அவதரித்துள்ளது. ஹெரிடேஜ் கிளாஸிக்,  50-களின் கிளாஸிக் நாஸ்டால்ஜியாவை நினைவூட்டும் வகையில் துல்லியமான வடிவமைப்பு, நவீன மாடலில் உள்ளது. பூட்டுப்போட்டு பூட்டி வைக்க சீலிடப்பட்ட சேடில்பேக் உள்ளது. ஒன் - டச் ஓப்பனிங், கழற்றிக்கொள்ளும் வகையிலான  விண்ட்ஷீல்டு மற்றும் பயணக்கட்டுப்பாட்டைக்கொண்டது. நான்கு பைக்குகளுமே இளைய தலைமுறையினர் விரும்புவதற்கேற்ப கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார்.