Published:Updated:

54 வயதிலிருந்து சாகும்வரை சைக்கிளில் பயணித்த அனி மஸ்டோவின் அனுபவங்கள்!

54 வயதிலிருந்து சாகும்வரை சைக்கிளில் பயணித்த அனி மஸ்டோவின் அனுபவங்கள்!

1987-ம் ஆண்டு, 54 வயதில் அந்தப் பயணத்தைத் தொடங்கினார். இந்த உலகப் பயணத்துக்கு முதல் விதை, ஒருமுறை இந்தியாவுக்குப் பயணித்தபோதுதான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார் அனி மஸ்டோ.

54 வயதிலிருந்து சாகும்வரை சைக்கிளில் பயணித்த அனி மஸ்டோவின் அனுபவங்கள்!

1987-ம் ஆண்டு, 54 வயதில் அந்தப் பயணத்தைத் தொடங்கினார். இந்த உலகப் பயணத்துக்கு முதல் விதை, ஒருமுறை இந்தியாவுக்குப் பயணித்தபோதுதான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார் அனி மஸ்டோ.

Published:Updated:
54 வயதிலிருந்து சாகும்வரை சைக்கிளில் பயணித்த அனி மஸ்டோவின் அனுபவங்கள்!

னி மஸ்டோ (Anne Mustoe) இவர் எழுதிய, டூ வீல்ஸ் இன் தி டஸ்ட் (Two Wheels in the Dust: From Kathmandu to Kandy) புத்தகம் வெளியாகி, 7 வருடங்கள் ஆகப்போகிறது. இப்படி ஒரு பயணக் காதலியைப் பற்றி நாம் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, பேரன் - பேத்திகள், ஆன்மிகப் பயணம் எனத் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கைச் சக்கரத்தில் சூழன்று கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும், லண்டனில் பிறந்த அனி மஸ்டோவின் சுதந்திரமான சைக்கிள் சக்கர வாழ்க்கைக்கும் வித்தியாசம் உண்டு. பெண்கள் தங்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் வாழலாம் என்பதற்கு அற்புதமான வழிகாட்டி என்று கூறலாம். சொல்லப்போனால், அவர் வாழ்க்கையை 54 வயதுக்குப் பிறகுதான் தொடங்கினார்.

PC: telegraph.co.uk

இங்கிலாந்தின் நாட்டிங்கம் நகரில், 1933 மே 24-ம் தேதி பிறந்தவர் அனி ரவில். கேம்ப்ரிட்ஜ் கிர்டன் கல்லூரில் `கிளாஸிக்ஸ்’ பாடம் படித்தார். முதல் வேலை, லண்டனில் உள்ள ஜி.கே.என் இன் ஜினேயர்ஸில் உதவியாளர். அங்குதான் வருங்கால கணவர் நெல்சன் மஸ்டோவை சந்தித்தார். அவர் செயலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். 1960-ம் ஆண்டு, இருவருக்கும் திருமணம் நடந்தது. பிறகு, கின்சிங்டனில் உள்ள `ஃப்ரன்சிஸ் ஹோலாண்டு' பள்ளியில் கிளாஸிக்ஸ் பொருளாதாரம் கற்றுத்தரும் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1978-ம் ஆண்டு, செயின்ட் ஃப்ளிக்ஸ் பள்ளியில், ஒரு தலைமையாசிரியராக மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்தார். அவரின் வார்த்தைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் மதிப்பு தந்தனர். இதற்கிடையில், மூன்று குழந்தைகளையும் வளர்த்தார். தன் கடமைகளை ஓரளவு நிறைவேற்றிவிட்டோம் என நினைத்தவர், தனக்காக வாழ்க்கையை வாழ தேர்ந்தெடுத்ததுதான், சைக்கிளில் உலகம் சுற்றும் பயணம். ஆனால், அதற்கு முந்தைய 30 வருடங்களாக அவர் சைக்கிளைத் தொடவே இல்லை.

1987-ம் ஆண்டு, 54 வயதில் அந்தப் பயணத்தைத் தொடங்கினார். இந்த உலகப் பயணத்துக்கு முதல் விதை, ஒருமுறை இந்தியாவுக்குப் பயணித்தபோதுதான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார் அனி மஸ்டோ. ராஜஸ்தானில் ஓர் இடத்துக்குப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியே ஓர் ஐரோப்பிய மனிதர், தார் பாலைவனத்தின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் பயணிக்கும் காட்சியைக் கண்டார். ``அது எனக்கு ஒரு பொறாமை ஏற்படுத்தியது. உடனடியாக, நானும் சைக்கிளில் சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவின் உண்மையான நிலையை ஒரு கண்ணாடி வழியாகப் பார்க்காமல், அந்த இயற்கை அழகுடன் பயணிக்க முடிவெடுத்தேன். அதற்கு சைக்கிள்தான் சரியாக இருக்கும். மறுநாள் காலை, இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றித் திரியும் உறுதி கூடிவிட்டது. இதைப் பற்றி நினைக்க நினைக்க, ஏன் இந்தியாவோடு பயணத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும், உலகம் முழுவதுமே சுற்றித்திரியலாமே என நினைத்தேன்'' என்கிறார்.

PC: road.cc

1987 மே மாதம், மேற்கிலிருந்து கிழக்குக்கு சைக்கிளில் தனியாகப் பயணம் செய்ய ஆரம்பித்தார் அனி. ``54 வயது, அதிக எடை, அன்ஃப்ட்” - இப்படித்தான் தன்னை தன் பயணத் தொடக்கத்தில் வர்ணித்துக்கொண்டார். 30 வருடங்களாக சைக்கிள் ஓட்டியதே இல்லை. அவர் தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து விலகியபோது, பள்ளி சார்ப்பில் பரிசளித்த சைக்கிள், ஸ்டுர்டே கொண்டர் (Sturdy Condor). அவருக்காகவே லெதர் இருக்கைகளுடன் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டது. எப்போதெல்லாம் அவர் லண்டன் வருகிறாரோ, அப்போதெல்லாம் சர்வீஸ் செய்துவிடுவார். அவர் சிரியாவில் உடல்நலம் சரியின்றி இறக்கும்வரை, அதே சைக்கிளில்தான் பயணித்தார்.

தனது முதல் சில உலக பயணங்களின் அனுபவங்களை, எ பைக் ரைட் (‘A Bike Ride) என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார். சைக்கிள் பயண ஆர்வலர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி. பிறகு, தன் பயண அனுபவங்களை 6 புத்தகங்களாக எழுதி வெளியிட்டார். இவரின் புத்தகங்கள் மிகவும் பிரபலமானது. பயண விரிவுரையாளராகவும் அவ்வப்போது உரையாற்றியிருக்கிறார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பயணித்த அனுபவத்தை, `டூ வீல்ஸ் இன் தி டஸ்ட்' என்ற புத்தகமாக வெளியிட்டார். ஆனால், இந்தியாவில் சில மோசமான அனுபவங்களையும் பெற்றிருக்கிறார் அனி. அவரைச் சில கும்பல் வழிமறித்துத் தடுத்தது, தலைமுடியைப் பிடித்து இழுத்தது போன்ற சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, அவர் தனக்குள் இருந்த தலைமையாசிரியர் குணத்தைத் தட்டி எழுப்பி, ``எனக்கு வழிவிடுங்கள்!” என அழுத்தமாகக் கூறியதாக எழுதியிருக்கிறார்.

2009-ம் ஆண்டு, சிரியாவின் அலேப்போ என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அனி மஸ்டோவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சாகும் தருணத்திலும் பயணித்துக்கொண்டே இருந்த அவரின் கால்கள், ஒரு லட்ச மைல்கள் பயணித்ததாகப் பதிவுகள் கூறுகின்றன.