Published:Updated:

நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி

நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி
பிரீமியம் ஸ்டோரி
நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி

தனியே... தன்னந்தனியே..சாஹா

நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி

தனியே... தன்னந்தனியே..சாஹா

Published:Updated:
நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி
பிரீமியம் ஸ்டோரி
நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி

யணம், ஒரு நபரின் ஆளுமையை மாற்றுமா?

போட்டோகிராபர் அனிதா தேவியை, அப்படித்தான் மாற்றியிருக்கிறது ஒரு பயணம். முன்பைவிட நம்பிக்கைமிகுந்தவராக... தைரியசாலியாக... எல்லாவற்றையும்விட வாழ்வின் அர்த்தம் உணர்ந்தவராக!

தனிமனுஷியாக கண்டம்விட்டு கண்டம், நாடுவிட்டு நாடு பயணம் செய்து திரும்பியிருக்கும் அனிதா, வந்த `காலோடு' ஐரோப்பிய வரைபடத்தைத் தன் காலில் டாட்டூவாகப் போட்டுக்கொண்டிருக்கிறார். `அரவுண்டு தி கான்டினென்ட் இன் 12 டேஸ்' அனுபவம் கேட்டோம் அனிதாவிடம்.

நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி

``போட்டோகிராபிக்குப் பிறகு எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்னா டிராவல். எனக்குப் புதுப்புது மக்களைச் சந்திக்கணும். அவங்களுடைய வாழ்வியல் பற்றியும் கலாசாரம் பற்றியும் தெரிஞ்சுக்கணும். என் ஹஸ்பண்ட் பிரதீப்தான் எனக்கு டிராவல் பார்ட்னர். போன மாசம் நானும் பிரதீப்பும் துபாய் போயிட்டு வந்தோம். மொத்தச் செலவும் பிரதீப்புடையது. அதனால, இத்தாலி ட்ரிப் பத்தி ஆரம்பிச்சதுமே `அம்மா... தாயே... ஆளைவிடு'னு ஒதுங்கிட்டார்.

எனக்கு டிராவலிங் கம்யூனிட்டியைச் சேர்ந்த ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல அஞ்சு பேர் சேர்ந்து இத்தாலி ட்ரிப்புக்கு ப்ளான் பண்ணினோம்.  ஆனா, ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் விசா ரிஜெக்ட் ஆகிடுச்சு. நான் மட்டும் போகணுமானு ஒரு குழப்பம் தொடர்ந்தது. ஹஸ்பெண்டும் ஃப்ரெண்ட்ஸும் `விசாவை வேஸ்ட் பண்ணாதே, போயிட்டு வா'னு சொன்னாங்க. மனசைத் தேத்திக்கிட்டு, `போறது'னு முடிவுபண்ணினேன். ஆனா, என் கேரக்டருக்கு அது சரியா வருமானு அடுத்த சந்தேகம். ராத்திரி 11 மணிக்கு மேல என் பெட்ரூம்லேருந்து கிச்சனுக்குக்கூடப் போக மாட்டேன். அவ்வளவு பயப்படுவேன். அப்படிப்பட்ட நான், தனியா நாடுவிட்டு நாடு டிராவல் பண்ணப்போறேன்கிறதை, முதல்ல என்னாலயே நம்ப முடியலை.

ஜூன் 3-ம் தேதி எனக்கு ஃப்ளைட். மும்பையிலேருந்து விசா வரணும். 3-ம் தேதி சென்னையில செம மழை. அதனால கூரியர் தாமதமாகி எனக்கு 4-ம் தேதிதான் விசா வந்தது. எல்லாமே சொதப்பலா இருக்கேனு கடுப்பாயிடுச்சு. மறுபடியும் மனசைத் தேத்திக்கிட்டு 6-ம் தேதிக்கு ஃப்ளைட் போட்டுக் கிளம்பிட்டேன்.

19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரைக்கும் 12 நாள்கள் பயணம்.

போய் இறங்கினதுலேருந்து கடைசி நாள் வரைக்கும் நிறைய சவால்கள். ஆனா, எதுவுமே சங்கடமா தெரியலை. அங்கே நிறைய பேர் ஆங்கிலம் பேசுவாங்க. அந்த ஆங்கிலம் நமக்குப் புரியாது. நாம பேசற ஆங்கிலம் அவங்களுக்குப் புரியாது. தகவல் பரிமாற்றம் அவ்வளவு ஈஸியா இல்லைதான். ஓரிடத்துக்குப் போகணும்னா, நானே தேடிக் கண்டுபிடிச்சுப் போயிருக்கேன்.

இத்தாலி போனேன். ரோம், ஃப்ளாரன்ஸ், மிலன், வெனிஸ்னு நாலு நகரங்களைச் சுற்றிப்பார்த்தேன். கேமராவைத் தூக்கிட்டுப் போகணுமேனும் தொலைஞ்சிடுமோனும் பயந்து, கேமரா எடுத்துட்டுப் போகலை.

முதல் நான்கு நாள்கள் அம்மா, அப்பா, ஹஸ்பண்ட்னு யார் ஞாபகமும் வரலை. திகட்டத் திகட்ட டிராவல் பண்ணினேன்!'' - மனதளவில் இத்தாலியிலிருந்து இன்னும் திரும்பவில்லை அனிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்! - அனிதா தேவி

பெண்களின் பாதுகாப்பு ஏற்கெனவே பிரச்னைக்குரியதாக இருக்கும் நிலையில், தனிமையில் இந்த நெடுந்தூரப் பயணத்தில் அந்த பயம் எழவில்லையா அனிதாவுக்கு?

``அந்த 12 நாள்கள்ல ஒரு நாளும் ஒரு நிமிஷமும் என் பாதுகாப்பு பற்றிய பயம் எட்டிப்பார்க்கலை. அங்கே பெண்களின் உடைகளையோ, உறுப்புகளையோ யாரும் உற்றுப் பார்க்கிறதில்லை. சுதந்திரம்னா என்னன்னு அங்கேதான் முழுமையா உணர்ந்தேன். ஆண்களும் பெண்களும் தங்கும் ஹாஸ்டல்லதான் தங்கினேன். ஒருத்தரும் ஒரு பிரச்னையும் பண்ணலை. என்னை வித்தியாசமா பார்க்கலை...''

வாட் நெக்ஸ்ட்?

``வாழ்க்கை நமக்குத் தெரிஞ்ச விஷயங்களையே வேறவேற விதங்கள்ல கற்றுக்கொடுக்குமில்லையா? அப்படித்தான் இந்த ட்ரிப் எனக்கான வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கு. நம்முடைய செயல்தான், நமக்கு நடக்கிற விஷயங்களைத் தீர்மானிக்குது. நல்லது செய்தால் நல்லதே திரும்பக் கிடைக்கும்னு உணரவெச்சது. இந்த சோலோ ட்ரிப்புக்குப் பிறகு உலகத்துல எந்த மூலைக்கும் என்னால தனியா போயிட்டு வந்துட முடியும்னு தைரியம் வந்திருக்கு.

தவிர, இந்த ட்ரிப் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸைக் கொடுத்திருக்கு. பயணத்தின் கடைசி நாளில் துபாயைச் சேர்ந்த ஒரு பெண் நட்பானாங்க. அவங்க, காலம் முழுக்க வேலை வேலைன்னு ஓடினவங்க. பணம் நிறைய இருக்கு. ஆனா, அவங்க வாழ்க்கையை அனுபவிச்சிருக் காங்களானு பார்த்தா, அப்படி எதுவுமே இல்லை. ஒருநாள் அதை உணர்ந்து, வீட்டையும் வேலையையும் தாண்டிய ஓர் உலகம் இருக்குனு சோலோ ட்ரிப்ஸ் போக ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுடைய வாழ்க்கை எல்லா பெண்களுக்குமான மெசேஜா தெரிஞ்சது. `அடுத்தவங்க நம்மைப் பற்றி என்ன நினைக்கிறாங்கனு யோசிக்காம இருக்கிறதுதான் உண்மையான சுதந்திரம்'னு எங்கேயோ படிச்சேன். இந்தப் பயணத்தின் மூலம் அந்தச் சுதந்திரத்தை ஃபீல் பண்ணினேன். எல்லா பெண்களும் அவசியம் அனுபவிக்கவேண்டிய அழகான ஃபீலிங் அது'' - தான்பெற்ற இன்பத்தை மற்றவரும் அனுபவிக்க ஆசைப்படுகிற அனிதாவின் அடுத்த ட்ரிப் கம்போடியா!