கடவுளின் தேசத்தில் கிட்டத்தட்ட எல்லாமே கால்பட்ட இடங்களாகிவிட்டன. சமீபத்திய வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு, பழைய பொலிவைப்பெற கேரளாவுக்கு இன்னும் கொஞ்ச காலமாகும். அந்த இடைவெளியில் ஆந்திரா, கர்நாடகாவில் இருக்கும் சில இடங்களுக்கும் பயணம் போய்வரலாம். பயணிகளைப் பச்சையும் மழையுமாக வரவேற்பது கேரள வழக்கம். ஆந்திராவோ, கோங்குரா சட்னி போல காரசாரமான கிளைமேட்டில் வரவேற்பை வழங்குகிறது. மறுபக்கம் கலையும் கட்டடங்களும் கர்நாடகத்தின் ஸ்பெஷல். சென்னையிலிருந்து மினி ட்ரிப்பாகச் சென்று வரத் தகுந்த இடங்களின் பட்டியல் இது.

கந்திக்கோட்டை:

சில ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த இடம் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கப்புதையல். ஆனால், இப்போது வளர்ந்துவரும் வாண்டர்லஸ்ட் பிரமையால் கூட்டம் வரத் தொடங்கியிருக்கிறது. சென்னையிலிருந்து 380 கி.மீ தொலைவில், கடப்பா மாவட்டத்திலிருக்கிறது கந்திக்கோட்டை(Gandikota). இதற்கு இந்தியாவின் `கிராண்ட் கேன்யன்' எனச் செல்லப்பெயர் வைத்துக்கொண்டாடுகிறார்கள்.

கேன்யன் என்றால், பிரமாண்ட பள்ளத்தாக்கு என அர்த்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடும் பெண்ணாறு, இந்தப் பகுதியில் மட்டும் சிற்பியாக மாறி பாறைகளைக் குடைந்து விதவிதமாகச் செதுக்கிச் செல்கிறது. கந்திக்கோட்டைக்குச் செல்ல சரியான நேரம் அதிகாலைப்பொழுதுகள்தான். விடிவதற்குக் கொஞ்சம் முன்பே தட்டுத் தடுமாறி ஏதாவது பாறையில் ஏறி உட்கார்ந்துகொள்ளுங்கள். கிழக்கிலிருந்து சூரியன் எழ... எழ... சிவப்பும் ஆரஞ்சுமாகப் பாறைகள் தங்கக்கட்டிகளாக ஜொலிக்கின்றன. அதனால்தான் இதைத் தங்கப்புதையல் என்கிறார்கள்போல. கந்திக்கோட்டையில் சூரிய விடியலைப் பார்க்கும் எல்லாருக்கும் தோன்றும் எண்ணம் ஒன்றுதான். `இவ்ளோ பெரிய பிரமாண்டத்துக்கு முன்னால நாம எல்லாம் ஒண்ணுமே இல்ல.'

விடியலைப் பார்த்த கையோடு சுற்றியிருக்கும் கோட்டைச் சுவர்களையும் பழைய சிதிலங்களையும் ஒரு ரவுண்டு வாருங்கள். அதற்குள் ஆந்திராவுக்கே உரிய வெப்பம் உங்களை ஸ்பரிசிக்கத் தொடங்கும். கந்திக்கோட்டாவில் ஒரேயோர் அரசு ரிஸார்ட் மட்டுமே இருப்பதால், தங்கும் திட்டமிருப்பவர்கள் முன்கூட்டியே ரிசர்வ் செய்வது நல்லது. முந்தைய நாள் இரவு கிளம்ப நினைப்பவர்கள் விடியலைக் காண வேண்டுமென்றால், கொஞ்சம் சீக்கிரம் கிளம்புவது நல்லது. பக்கம்தான் என்றாலும் ஆந்திரச் சாலைகள் குறுகலானவை என்பதால், நேரம் பிடிக்கும்.

பெல்லம் குகை:

கந்திக்கோட்டை அமைந்திருக்கும் அதே எர்ராமலைத் தொடர்ச்சியின் இன்னொரு பக்கத்தில் அமைந்திருக்கிறது பெல்லம் குகைத் தொடர்ச்சி. கர்னூல் மாவட்டத்தில் நீண்டு நெளிந்து செல்லும் இந்தக் குகையமைப்புகள்தான் இந்தியாவில் பொதுமக்களால் பார்வையிட முடிந்த குகைகளில் அளவில் பெரியவை. இரண்டு நூற்றாண்டுகள் முன்புவரை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இப்படியோர் இடம் இருப்பது தெரியும். ராபர்ட் ப்ரூஸ் என்ற தொல்லியல் ஆராய்ச்சியாளரின் உபயத்தில் 1884-ல் வெளிச்சத்துக்கு வந்தது இந்த இடம். நூறாண்டுகள் கழித்து நடந்த விரிவான தேடுதலில், தெளிவாகப் படம் வரைந்து பாகம் குறிக்கப்பட்டன. மொத்த நீளம் 3,229 மீட்டர்கள். மொத்தமும் பூமிக்கடியில் இருக்கும் நீரோட்டத்தினால் உருவானவை.

சமதளத்திலிருந்து படி வழியே இறங்கிச் சென்றால் குகைகளுக்கே உரிய இறுக்கமும் ஈரமுமான வாசனையும் நம்மை வரவேற்கின்றன. இதன்பின் நீங்கள் பார்க்கப்போவது எல்லாம் பாறைகள் மட்டுமே. இந்தக் கற்சுவர்கள் பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகளின் சாட்சியாக நிற்கின்றன. 2,000 ஆண்டுகளுக்குமுன் இது புத்தப் பிக்குகளின் புகலிடமாக இருந்திருக்கிறது. இதில் கண்டெடுக்கப்பட்ட சில படிமங்கள் கி.மு 4,500-ஐச் சேர்ந்தவை. இந்த எண்ணமே ஏதோ மாபெரும் வரலாற்றுக் கோவையின் மத்தியில் நடைபோடும் பிரமையை நமக்குத் தருகிறது. முழுக் குகையமைப்பையும் சுற்றிப்பார்க்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிவர, குறைந்தது இரண்டு மணி நேரமாகும். முறையான வெளிச்சமும் காற்றோட்ட வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், ஒரு நிமிடம் கரன்ட் கட்டானால் எப்படியிருக்கும் என்ற யோசனையே தண்டுவடத்தில் ஜில்லிப்பைப் பரவவிடுகிறது.

குகையின் ஒரு மூலையில் இரண்டடிக்கோர் இடைவெளி இருக்கிறது. அதில் குனிந்தபடி சென்றால் வரவேற்கிறது, `பாதாள கங்கை' எனும் நீர்நிலை. குகையின் ஆழமான பகுதி இதுதான். மேலே 150 அடி உயரத்தில் இருக்கிறது தரைத்தளம். இருட்டும் ஆழமும் தெளிவாகப் புலப்படாத தண்ணீர்வெளியும் ஜிவ்வென ஏதோ செய்யும். பெல்லம் குகைகளுக்கு லேசான காட்டன் காஸ்ட்யூம்களை அணிந்து செல்லுதல் நலம். இல்லையெனில், வெந்து வியர்த்துப்போய்தான் வெளியே வருவீர்கள்.

ஹார்ஸ்லி ஹில்ஸ்:

வெயிலும் புழுதியும் மட்டும்தான் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் என்பதில்லை. அங்கும் ஏற்காட்டைப் போன்ற ஜில்ஜில் பிரதேசமான ஹார்ஸ்லி ஹில்ஸும் இருக்கிறது. சித்தூர் மாவட்டத்தின் ஹாட் ஸ்பாட். ஊட்டி அளவுக்கு இது பெரியது இல்லை என்றாலும், ஆந்திராவின் ஒரே குளுகுளு மலைப் பிரதேசம் இது என்பதால், இதற்கு ஆந்திராவின் ஊட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு.

சென்னையிலிருந்து 269 கி.மீ தொலைவுதான். ஆனால், முன்பே சொன்னதுபோலக் குறுகலான சாலைகள் என்பதால், நேரம் பிடிக்கும். போகும் வழி நெடுக அந்த மண்ணுக்கே உரிய மொட்டைப் பாறைகள்கொண்ட மலைகள் சோம்பலாக இருபுறமும் படுத்திருக்கின்றன. சில இடங்களில் சின்னச் சின்னக் கோட்டைகளையும் கடந்து செல்வீர்கள். சில மணிநேர வறண்ட வனப் பிரயாணத்துக்குப்பின்பு வரவேற்கிறது ஹார்ஸ்லி ஹில்ஸ். சின்ன மலையென்றாலும் அடுத்தடுத்து எட்டுக் கொண்டை ஊசி வளைவுகள். உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கிறது அந்தக் குட்டி சொர்க்கம்.

பெரிய ஊரெல்லாம் இல்லை. நடந்துபோனால் 20 நிமிடங்களில் மொத்த ஊரையும் சுற்றி வந்துவிடலாம். ஆனால், மற்ற மலைப்பிரதேசங்களில் இல்லாத அமைதி இங்கே குடியிருக்கிறது. ஹார்ஸ்லியின் முக்கிய அம்சம் அதன் சன்செட் பாயின்ட்தான். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆற அமர அங்கே அமர்ந்தால், சூரியன் களைத்துப் போய்த் தூரத்து நகரத்திற்குள் குடிபுகுவதைப் பார்க்கலாம். வெளிச்சம் மெல்ல மெல்ல அடங்கியபின் ஆயிரம் கண்களோடு விழித்தெழுகிறது இரவு. ஹார்ஸ்லியின் மற்றொரு முக்கிய அம்சம் இந்த Star Gazing.

நகரங்களிலிருந்து நட்சத்திரங்களைப் பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. காற்று மாசு, பிற விளக்குகளின் இடையூறு போன்றவை நட்சத்திரங்களின் நிஜ அழகைக் காணவிடாமல் தடுக்கும். எனவே, Star Gazing-கிற்குக் கடற்கரைகளும் மலைப் பிரதேசங்களுமே சரி. இரவின் குளிர்ச்சிக்குக் கதகதப்பாகப் பாறையில் படுத்துக்கொண்டு தூரத்து நட்சத்திரங்களைப் பாருங்கள். அதன்பின் ஹார்ஸ்லி உங்களின் ஃபேவரைட் இடங்களில் ஒன்றாக நிச்சயம் மாறிவிடும்.

கோகர்னா:

கோவா செல்ல பிளான் மட்டுமே போடும் நட்பு வட்டம் நம் எல்லாருக்குமே உண்டு. கோவாவுக்கு வழியில்லை என்றால், கோகர்னாவுக்காவது சென்றுவாருங்கள். வங்கக் கடலில் காற்று வாங்கும் சென்னைக்கு அப்படியே நேரெதிர்த் திசையில் கர்நாடகத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தின் கடற்கரை நகரம், கோகர்னா. சென்னையிலிருந்து 850 கி.மீ. அதனால், குறைந்தது நான்கு நாள்கள் பிளானோடு செல்வது நல்லது.

கோகர்னாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, ஆன்மிக முகம். கோர்கர்னாவைச் சுற்றிலும் ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இரவில் மற்றொரு முகம் கோகர்னாவுக்கு. தென்னிந்தியாவின் மிகப் பெரிய பார்ட்டி டவுன் கோகர்னாதான். அதுவும் குறிப்பாக, அக்டோபர் தொடங்கி ஜனவரி வரை நகரமெங்கும் வெளிநாட்டினர்களின் படையெடுப்புதான். கோவாவுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை என்ற தகுதியைச் சீக்கிரமே அடைந்துவிடும் கோகர்னா. இத்தனைக்கும் காரணம், விதவிதமான வடிவில் கடற்கரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மேலிருந்து பார்த்தால் ஓம் போன்று தோற்றமளிப்பதால், அது ஓம் பீச். பிறைநிலவு போலக் காட்சியளிப்பதால் அது ஹால்ஃப் மூன் பீச். சுற்றியும் மலைகள் சூழ்ந்திருக்க, ஆளரவமற்ற பச்சைநிறக் கடற்கரை என்பதால், அதன் பெயர் பேரடைஸ் பீச். இதுபோக கூட்லே பீச், மெயின் பீச் எனப் பட்டியல் நீள்கிறது.

சில கடற்கரைகளுக்குச் செல்ல சாலை வசதிகள் இருக்கின்றன. ஆனாலும் ஓம் பீச்சில் இருந்து ஹாஃல்ப் மூன், அங்கிருந்து பேரடைஸ் என மலையில் ஏறி ஏறி இறங்குவது புது அனுபவம். ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரை பருவ காலங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்குமென்பதால், சுற்றுலாப் பயணிகளைக் காண்பது கஷ்டம். ஆனால், தனிமை விரும்பிகளுக்கு அந்த மூன்று மாதங்கள் கோகர்னா சொர்க்கம்தான். தங்குவதற்கு நகரத்தில் நிறைய ஹோட்டல்களும் கடற்கரையில் ஏராளமான Shack எனப்படும் குடில்களும் உள்ளன.

வறண்ட பள்ளத்தாக்கு, கிடுகிடுவென இறங்கும் பாதாள குகை, குளுகுளு மலைத்தொடர், பின்னிரவுகளில் அடங்கும் கடற்கரை நகரம் என இந்த நான்குமே வெவ்வேறு தன்மைகள்கொண்ட நிலப்பரப்புகள். ஆனால், இந்த அத்தனை இடங்களிலும் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். எதுவுமே செய்யாமல் சும்மா இருங்கள். புற உலகோடு உங்களை இணைக்கும் அத்தனை கருவிகளிலிருந்தும் தள்ளியிருங்கள். இந்த இடங்களுக்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுத்தால், அவை உங்களைத் தங்களுக்குள் வரித்துக்கொள்ளும். அதன்பின் நிகழ்வதுதான் `பயணம்!'

நித்திஷ்