Published:Updated:

கோவா பிளானா...? டேங்க் டாப் முதல் சன்ஸ்க்ரீன் வரை ஒரு செக்லிஸ்ட்!

கோவா பிளானா...? டேங்க் டாப் முதல் சன்ஸ்க்ரீன் வரை ஒரு செக்லிஸ்ட்!
கோவா பிளானா...? டேங்க் டாப் முதல் சன்ஸ்க்ரீன் வரை ஒரு செக்லிஸ்ட்!

போன மாதிரியே திரும்பி வந்துடலாம்னு மட்டும் நெனச்சுடாதீங்க. கண்டிப்பா அது நடக்காது. சூரிய ஒளியில் உங்கள் சருமம் நிச்சயம் பழுப்பு நிறமாகிவிடும். அதனால், அதற்கேற்ற உடைமைகளைக் கையில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

'#10yearchallenge'தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட். அதைவிட மிகப்பெரிய சவாலாக இளைஞர்கள் மத்தியில் இருப்பது 'கோவா சேலஞ்'தான். பள்ளிக்காலத்திலிருந்தே சின்சியரா திட்டம் திட்டி, 'சீரியஸா இந்த வருஷம் போய்டுவோம்ல மச்சி?!' என ஒவ்வொரு ஆண்டும் நண்பர்களை நம்பிக் கோட்டைக் கட்டி கோட்டைவிடுபவர்கள் அதிகம். அப்படி 'இந்த வருஷமாவது கண்டிப்பா கோவா போய்டுவோம்'னு நினைப்பவர்களுக்கான சிம்பில் ஸ்டைல் கைடு ரெடி.

இந்தியாவின் லாஸ் வேகஸ் என்றுச் செல்லமாக அழைக்கப்படும் கோவாவில், எந்தப் பக்கம் திரும்பினாலும் 'பீச்' மட்டுமே தென்படும். இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினர்களின் வருகையும் அதிகளவில் இருப்பதால், இங்கு உங்களின் உடை நிச்சயம் அதிகம் பேசும். பரந்துவிரிந்த கடல் நிலை, மென்மையான கடல் காற்று, நண்பர்களின் கூச்சல், காதலர்களின் துள்ளல் என இளமை பொங்கும் பீச்சில், ஜீன்ஸ், சல்வார் கமீஸ், இறுக்கமான உடைகள் போன்றவை நிச்சயம் ஒர்க்-அவுட் ஆகாது. நீங்கள் தேர்வு செய்யும் ஆடைகள் கம்ஃபோர்டெபிளாக இருக்கவேண்டும். அதனால், தளர்வான Beach Wear ஆடைகளையே தேர்வு செய்யவேண்டும். எல்லா கடைகளிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய 'Beach Wear'-களை அதிகமான எண்ணிக்கையில் வாங்கிக்கொள்ளுங்கள். நூறு ரூபாயிலிருந்தே இந்த ஆடைகள் சந்தையில் கிடைக்கின்றன. இது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.

ஆண்களுக்காக..

கட்டம்போட்ட 'வெஸ்ட் (Vest)' அல்லது 'டேங்க் டாப்', ப்ளெயின் பெர்முடா ஷார்ட்ஸ், கூலர்ஸ். இது மூன்று மட்டுமே போதும். சிம்பிளான கம்ப்ஃபோர்டேபிள் தோற்றம் எளிதில் பெறலாம். இதோடு, கலர்ஃபுல் பிரின்டெட் ஷார்ட்ஸ், செக்டு வாட்டர் ஷார்ட்ஸ் போன்றவையும் நிச்சயம் ஸ்டைலிஷ் தோற்றம் தரும்.

சென்னை போன்ற நகரங்களில்கூட ஆண்கள், இணை ஆபரணங்கள் அணிந்தால் வேறுபட்டுப் பார்க்கக்கூடும். ஆனால், நீங்கள் வாங்கி வைத்த இணை ஆபரணங்களை உபயோகிக்கக் கோவா சூப்பர் சாய்ஸ். ஸ்கார்ஃப் அல்லது மஃப்ளர், Beaded செயின், விளிம்புள்ள தொப்பி, பிரேஸ்லெட் போன்றவற்றை அணிந்து, மாறுபட்ட தோற்றத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.

குளிர்ச்சியான இரவுகளைக் கடக்க, லேயர் சட்டைகளை உடன் வைத்துக்கொள்ளுங்கள். ஜீன்ஸ், முழுநீள பேன்ட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. க்ராக்ஸ் (Crocs), ஃபிலிப்-ஃபிளாப்ஸ் (Flip-Flops) போன்ற காலணிகளை பயன்படுத்தலாம்.

பெண்களுக்காக..

ஸ்கர்ட்ஸ், டீ-ஷர்ட், மேக்ஸி, கூலர்ஸ், தொப்பி போன்றவை பெண்களின் பேக்பேக்கில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய பொருள்கள். 'கோவா போனா ஸ்விம்சூட்லாம் வேணுமோ?' என்பது பல பெண்களின் மிகப் பெரிய கேள்விக்குறி. ஆனால், நாம் அன்றாட உடுத்தும் உடைகளிலேயே சிறு மாற்றம் செய்தால் போதும், ஸ்டைலிஷ் லுக் நொடியில் ரெடி. 

கோவாக்கென்றே பிரத்தியேகமான Sundress தற்போது அனைத்துக் கடைகளிலும் கிடைக்கின்றன. Knitwear-களில் போன்ச்சோ டிரஸ் வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

டியூனிக் டாப், அதற்கேற்ற Funky நெக்லெஸ், விளிம்புள்ள தொப்பி, கூலர்ஸ், ஃபிலிப்-ஃபிளாப். இதுவே பெண்களுக்கான எளிமையான கோவா உடை. மெருகேறியத் தோற்றத்துக்கு, Fringed shrug, ஒளிபுகும் கோட் போன்றவற்றை பயன்படுத்தலாம். இந்த உடைகள் அனைத்தும் 300 ரூபாயிலிருந்து கிடைக்கும்.

சில முக்கியப் பொருள்கள்:

போன மாதிரியே திரும்பி வந்துடலாம்னு மட்டும் நெனச்சுடாதீங்க. கண்டிப்பா அது நடக்காது. சூரிய ஒளியில் உங்கள் சருமம் நிச்சயம் பழுப்பு நிறமாகிவிடும். அதனால், அதற்கேற்ற உடைமைகளைக் கையில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். SPF 30 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவுகளில் உங்கள் சருமத்துக்கேற்ற சன்ஸ்க்ரீன் லோஷன் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று. அதோடு, UV Protected கூலர்ஸ் ஒன்றையும் வைத்துக்கொள்ளுங்கள்.

முடிந்தளவு அதிகப்படியான கேஷுவல் உடைகளை பேக் செய்துகொள்ளுங்கள். கூடவே, சிறிய ஹேண்ட்பேக் ஒன்றையும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டைலிஷான ஊருல சும்மா ஸ்டைலா! கெத்தா! சுத்திட்டு வாங்க பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு