Published:Updated:

மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா
பிரீமியம் ஸ்டோரி
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

தனியே... தன்னந்தனியே...

மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

தனியே... தன்னந்தனியே...

Published:Updated:
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா
பிரீமியம் ஸ்டோரி
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

மும்பையில் வசிக்கிற பம்மு என்கிற பர்விந்தர் சாவ்லாவுடன் பேச ஆரம்பித்தால், ‘உள்ளாற எப்போதும் உல்லாலா... உல்லாலா’ ஒலிக்கிறது. அவ்வளவு எனர்ஜி... அநியாய உற்சாகம்!

‘வீல்சேர் அண்டு ஐ’ (Wheelchair and EYE) என்கிற வலைதளத்தைத் தொடங்கி தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துவருகிற பம்மு, தீவிரமான பயண ஆர்வலர். முடக்குவாதத்தால் வீல்சேரில் முடங்கிப்போன நிலையிலும் சளைக்காமல் பயணம் செய்கிற பாசிட்டிவ் மனுஷி!

‘`பஞ்சாப், லூதியானாவைச் சேர்ந்தவள் நான். சுட்டித்தனம் நிறைஞ்ச குழந்தைப் பருவம். ஹாக்கி, கோகோ, ரன்னிங், ஸ்விம்மிங், ஸ்கேட்டிங்னு எல்லா ஸ்போர்ட்ஸிலும் ஆர்வமா இருந்திருக்கேன். மிச்ச வாழ்க்கையும் அப்படியே கடந்திருக்கலாம். ஆனா...’’  - பம்முவின் அமைதி, அடுத்து அவர் சொல்லப்போகிற அதிர்ச்சிக்கு நம்மைத் தயார்படுத்துகிறது.

மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`எனக்கு அப்போ 15 வயசிருக்கும். ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். அடிக்கடி உடம்புவலி வரும். குறிப்பா மூட்டுகள் எல்லாம் கடுமையா வலிக்கும். தாடை வலிக்கும். ‘ருமாட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ்’ பாதிப்புனு கண்டுபிடிச்சாங்க. நான் அதுக்காக எந்த மருந்தும் எடுத்துக்கலை. மருந்துகள் சாப்பிட்டா பக்கவிளைவுகள் வரும்னு நினைக்கிற போபியா எனக்குண்டு. அதனால ஹோமியோபதி, ஆயுர்வேதா, மேக்னடோ தெரபினு மாற்று சிகிச்சைகளை மட்டும் எடுத்துக்கிட்டிருந்தேன்.

15 வயசு வரைக்கும் ஆக்டிவா இருந்த எனக்கு இது ஏன் வந்தது, எப்படி வந்ததுனு தெரியலை. ‘ஆட்டோ இம்யூன் டிசீஸ்’னு சொன்னாங்க டாக்டர்ஸ். இதுதான் காரணம்னு எதையும் சொல்ல முடியாது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் கிடையாது.  காலேஜ் டைம்ல என் பிரச்னை ரொம்ப மோசமானது.  எப்படியோ தாங்கிட்டு படிப்பை முடிச்சேன். ஓரளவு நடக்க முடிஞ்சவரைக்கும் ரிசப்ஷனிஸ்ட், வீடு வீடா போய் பத்திரிகைகள் விற்கிற வேலைகள் பார்த்திட்டிருந்தேன். ஒருகட்டத்துல அதுவும் முடியாம, வீல்சேர்தான் எனக்குத் துணையா மாறினது. மேனுவல் வீல்சேரில் இருந்தபடியே பிபிஓ, கால் சென்டர்களுக்கு வேலைக்குப் போயிட்டிருந்தேன்.

மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

அப்பா அம்மா ரெண்டு பேரும் அடுத்தடுத்து இறந்து போனாங்க. எல்லாத்தையும் மறக்கணும்னு என் காலேஜ் ஃப்ரெண்டுகூட வைஷ்ணவோதேவி கோயிலுக்கு ஒரு ட்ரிப் போனேன். வீல்சேரில்தான் போனேன். ஆனாலும், அந்தப் பயணம் எனக்குப் பெரிய மாறுதலையும் ஆறுதலையும் தந்தது. எல்லா இடங்களுக்கும் என்னால் வீல்சேரில் டிராவல் பண்ண முடியும்னு ஒரு நம்பிக்கையும் பிறந்தது. இன்னிக்கு வரையிலும் பயணம்தான் என் வாழ்க்கையைப் பரவசப்படுத்திட்டிருக்கு’’  - உரையாடலின் ஊடே அந்தப் பரவசத்தை நமக்கும் கடத்துகிறார் பம்மு.

‘`என்னைச் சுற்றிலும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. ஃப்ளைட், ஹெலிகாப்டர்னு எதில் டிராவல் பண்ணினாலும் எனக்கு வீல்சேரை எடுத்துக்கொடுக்கவும் இறக்கிவிடவும் உதவிகள் பண்றாங்க. டூர் ஏஜென்சிகளை அணுகி என்னுடைய டிராவலுக்கு ஏற்பாடு பண்ண முடியுமானு கேட்டபோது, ‘உங்களால தனியா டிராவல் பண்ண முடியாது. நீங்க யாரையாவது துணைக்குக் கூட்டிட்டு வரணும்’னு சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. தனியா டிராவல் பண்றதுக்கான வழிகளைத் தேட ஆரம்பிச்சேன். அதுக்கு உதவ சில நிறுவனங்கள் இருந்தன. முதன்முதல்ல பாலி தீவுக்குத் தனியாவே போனதை மறக்க முடியாது. வீல்சேரில் மட்டுமில்லை, தனியாகவும் டிராவல் பண்ண முடியும் என்கிற நம்பிக்கையை அந்த ட்ரிப்தான் கொடுத்தது.

‘எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்க? ஏன் தனியா டிராவல் பண்றீங்க'னு நிறைய பேர் என்கிட்ட கேட்கிறதுண்டு. டிராவல் பண்ணும்போதுதான் நான் உயிர்ப்போடு இருக்கிறதா ஃபீல் பண்றேன். என் நோயை மறந்து வேறோர் உலகத்தில் மூழ்கிப் போறேன். மனசளவுல ரொம்ப பலசாலியா ஃபீல் பண்றேன். டிராவல் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு டிரஸ் அணியறதுக்குக்கூட யாராவது உதவணும். டிராவல் பண்ண ஆரம்பிச்ச பிறகு ஒரு வைராக்கியத்தில் என் வேலைகளை நானே செய்யப் பழகினேன். அட்வான்ஸ்டு மாடல் வீல்சேர் வாங்கின பிறகு வாழ்க்கை இன்னும் ஈஸியானது. ஃப்ளைட்டில் எடுத்துட்டுப்போற மாதிரியான, ஒரு நொடியில் மடக்கி விரிக்கக்கூடிய, எடை குறைவான   வீல்சேரில் இப்போ டிராவல் பண்றேன்’’ - இம்மியளவு எனர்ஜிகூடக் குறையாமல் பேசுகிறவருக்கு உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடவேண்டுமென்கிற பெருங்கனவு இருக்கிறது.

மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

‘`ஒரு ட்ரிப்பிலேருந்து வந்ததுமே அடுத்ததுக்கான பிளானிங்கில் இறங்கிடுவேன். ஓரிடத்துக்குப் போகிறதுக்கு முன்னாடி அது மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியான இடமானு தெரிஞ்சுப்பேன். அந்த அரசாங்கத்துக்கு லெட்டர் எழுதித் தகவல் கேட்பேன். அங்குள்ள மக்களிடம் விசாரிப்பேன். தனியா டிராவல் பண்ணும்போது அந்த இடங்கள் வீல்சேர் ஃப்ரெண்ட்லியானவையானு உறுதிபடுத்திட்டுத்தான் கிளம்புவேன். அப்படி இல்லாத இடங்களுக்கு வேறு வழியில்லைனா யாரையாவது துணைக்குக் கூட்டிட்டுப் போவேன். ஆனாலும், எனக்குத் தனியா டிராவல் பண்றதுதான் பிடிக்கும். அப்படி டிராவல் பண்ணும்போது நாம் புதிய மனிதர்களுடன் அறிமுகமாவோம்; நட்பாவோம்’’ - தனிமையே இனிமை என்கிறவருக்கு இதுவரை பயணம் செய்தவற்றில் மிகப் பிடித்த இடம் இந்தியாதானாம்.

‘`சுற்றுலாவுக்கான இடங்களை இன்னும் கொஞ்சம் சுத்தமாகவும், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாகவும் மாற்றினால், சுற்றுலாத்துறையில் இந்தியா எங்கேயோ போயிடும். மக்கள் வெளிநாடுகளுக்குப் போகணும்னே நினைக்க மாட்டாங்க. இந்த வருஷம் 50-வது வயசுல அடியெடுத்து வைக்கிறேன். அதைக் கொண்டாடவும் என் உறவினர் கல்யாணத்துக்காகவும் பிப்ரவரி மாசம் ஆஸ்திரேலியா போறேன். மாற்றுத்திறனாளிகள் டிராவல் பண்ண சூப்பர் நாடு அது. மாலத்தீவு, ஃபிஜினு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு மெல்பர்ன் போறேன். அதுக்கு முன்னாடி கும்பமேளாவுக்குப் போறேன். ‘ரொம்பக் குளிருமே... உங்களுக்கு சரியா வருமா’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. மனசு முடியும்னு சொல்லுது. உடம்பும் ஒத்துழைக்கும்.’’

ஹேப்பி ஜர்னி மேடம்!


-சாஹா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism