Published:Updated:

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

மறக்காம எடுத்திட்டுப்போங்க!
பிரீமியம் ஸ்டோரி
மறக்காம எடுத்திட்டுப்போங்க!

மு.ராஜேஷ்

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

மு.ராஜேஷ்

Published:Updated:
மறக்காம எடுத்திட்டுப்போங்க!
பிரீமியம் ஸ்டோரி
மறக்காம எடுத்திட்டுப்போங்க!

``மச்சான்... டூருக்குப் போறேன்... கேமரா வேணும்...”

மறக்காம எடுத்திட்டுப்போங்க!
மறக்காம எடுத்திட்டுப்போங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

20 ஆண்டுகளுக்கு முன்புவரை சுற்றுலா செல்பவர்களிடம் இருந்த ஒரே கேட்ஜெட் கேமராதான். அதுவும் பெரும்பாலும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கியதாக இருக்கலாம். கேட்ஜெட்கள் பயணங்களைச் சுவாரஸ்யமாக்க மட்டுமல்ல; பாதுகாப்பானதாகவும் மாற்றக்கூடியவை. அதுவும் இந்த டெக் உலகில் அவற்றின் பங்களிப்பு இல்லாமல் சுற்றுலாக்கள் முழுமையடைந்துவிட முடியாது. அப்படி என்ன என்ன கேட்ஜெட்ஸ் இருக்கின்றன? அவற்றால் என்ன சுவாரஸ்யம் சேர்த்துவிட முடியும்? பார்க்கலாம்...

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

புளூடூத் ஸ்பீக்கர்

சுற்றுலா போகுமிடத்தில் கேம்ப் பயர் (Campfire) பெரும்பாலும் திட்டத்தில் இருக்கும். உரையாடலோடு இசையும் சேர்ந்துகொண்டால் கூடுதல் சுவாரஸ்யம்தான். நன்றாகப் பாடக்கூடியவர் உடன் வந்தால் ஓகே. இல்லையென்றால் புளூடூத் ஸ்பீக்கர்தான் நமக்கான எஸ்.பி.பி, ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் எல்லாம். பென் டிரைவ் உதவியுடனோ, மொபைல் மூலமோ விரும்பிய பாடல்களை அப்படியொரு காட்டுக்கு நடுவில், நள்ளிரவில் கேட்பது எவ்வளவு அலாதியானது! 500 ரூபாயிலிருந்தே புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

பவர் பேங்க்

மலையேறும்போதோ அல்லது காட்டுக்குள் போகும்போதோ  மொபைல் சிக்னல் இருக்காது என்பது நாம் அறிந்ததுதான். சிக்னல் முழுமையாக இல்லாத இடங்களில் மொபைல் விரைவில் சார்ஜ் இழக்கும். மேலும், காலையில் அறையிலிருந்து வெளியேறினால் இரவுதான் வந்து சேர்வோம். அதுவரை பெரும்பாலான மொபைல்கள் சார்ஜ் நிற்பதில்லை. இணையம் இல்லாவிட்டாலும் கால் மற்றும் எஸ்.எம்.எஸ்ஸுக்காக, போட்டோ எடுக்க மொபைல் தேவைப்படும். அதனால் எப்போதும் பவர் பேங்க் கைவசம் இருப்பது நல்லது. இவை 500 ரூபாயிலிருந்தே சந்தையில் கிடைக்கின்றன.

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

ஸ்மார்ட் வாட்ச்

இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் சுற்றுலா போகிறார்கள். அவர்களுக்கு மலைவாசஸ்தலங்களில் சில பிரச்னைகள் வரலாம். சரியான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிகரிக்கும் இதயத் துடிப்பைக் கண்டுகொள்ளாமல் விடுவது போன்ற பிரச்னைகளை ஸ்மார்ட் வாட்ச் அல்லது பிட்னெஸ் டிராக்கர் மூலம் கண்டறிய முடியும். ஒருவேளை அவர்கள் வழிமாறிப் போனாலும் அவர்கள் இருப்பிடத்தை ஸ்மார்ட் வாட்ச் மூலம் மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும். இவற்றின் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் பயன்களும்  அதிகம்தான்

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

கோ ப்ரோ கேமரா

அட்வென்ச்சர் காதலர்களின் செல்லக்குழந்தை இந்தக் கையடக்க கேமரா. தொப்பியில் மாட்டுவது, கைகளில் கட்டிக்கொள்வது என இந்தக் கேமராவை எங்கு வேண்டுமென்றாலும் பொருத்திக்கொள்ள முடியும். சுற்றுலாவில் நாம் செய்யும் சாகசங்களைப் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் கச்சிதமாகப் பதிவு செய்து கொடுத்துவிடும் கோ ப்ரோ. அளவுதான் சிறியதே தவிர, தரத்தில் கோ ப்ரோ சினிமாவுக்கே பயன்படுத்தலாம் என்னுமளவுக்குத் துல்லியம்.

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

கிண்டில்

நல்ல ஓய்வுக்காகவும் பயணங்கள் தேவை. அப்படி ஓய்வெடுக்கும்போது அதிகமானோரால் செய்யக்கூடிய விஷயம் வாசிப்பு. அதற்காக எத்தனை புத்தகங்களை பயணம் செல்லும்போது சுமந்து செல்ல முடியும்? அதற்கான தீர்வுதான் கிண்டில். சில கிராம்களே எடை. ஆனால் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அடக்கிவிடலாம். ஒரு வாரம்கூட சார்ஜ் நிற்கும் என்பது அடுத்த வரப்பிரசாதம். கையில் கிண்டில், இன்னொரு கையில் தேநீர். தலையைத் தூக்கினால் பள்ளத்தாக்கு. யோசித்துப் பார்த்தாலே ஜில்லென இருக்கிறதில்லையா?

மறக்காம எடுத்திட்டுப்போங்க!

Swiss knife

காலம் காலமாக சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி வருகிறது இந்த ஆல்டைம் சிறந்த கேட்ஜெட். நகம் வெட்டுவதில் தொடங்கி வைன் பாட்டில்களைத் திறப்பது வரை ஆல் இன் ஆல் அழகுராஜாவாக உதவும் இந்த கேட்ஜெட். ஆபத்து நேரத்தில் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் இதில் ஆயுதங்கள் உண்டு. விலைக்கேற்ப இந்த டூலில் இருக்கும் விஷயங்களின் எண்ணிக்கை மாறுபடும். நல்லதொரு ஸ்விஸ் நைப், சுற்றுலா செல்லும் அனைவர் பைகளிலும் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism