Published:Updated:

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

Published:Updated:
இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

“மாற்றுத்திறனாளியா இருந்துட்டு எதுக்கு இந்த த்ரில், டிராவல் எல்லாம்? ரிஸ்க் எடுக்காதீங்க. ஸ்டே அட் ஹோம்” - இந்த அறிவுறுத்தல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுச் சலித்துப்போனவர்தான் விசாகன். மூன்று வயதில் போலியோ அட்டாக். கழுத்துக்குக் கீழே உடலின் ஒரு பக்கம் முற்றிலுமாகச் செயலிழந்தது. ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை, மாற்றுத்திறனாளியானதைக் கண்டு அதிர்ந்தாலும் விசாகனின் பெற்றோர்,  மன தைரியத்துடன் அவரை வளர்த்துள்ளனர். சிறுவயதிலிருந்தே ஒரு கை கால்தான் விசாகனின் பலம். எம்.பி.ஏ படித்துள்ள விசாகனின் வாழ்க்கையை மாற்றியது `பயணங்கள்.’ ஆமாம்... அவர் ஒருபோதும் ‘ஸ்டே அட் ஹோம்’ அறிவுறுத்தல்களைக் காதுகளுக்குள் நுழையவிட்டதில்லை!

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

``மாற்றுத்திறனாளியா இருந்தா, பல விஷயங்கள்ல சமரசம் செஞ்சுக்கணும். அதுல டிராவல் ரொம்பக் கொடூரமானது. என் உடல்நலக் குறைபாடுகளைக் காரணம்காட்டி, டிராவல் பண்ணக் கூடாதுன்னு சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியலை. வெளி உலகத்தைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்... கிளம்பிட்டேன். டிராவல், என் வாழ்க்கையை மாத்திடுச்சு” எனும் விசாகன் இந்தியா முழுவதும் பயணப்பட்டிருக்கிறார். ஆனால், அவரது தன்னம்பிக்கையை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது, கயிலை மலையில் உள்ள மானசரோவர் பயணம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

``என்னை மாற்றிய முதல் பயணம்... சென்னை டு மானசரோவர். பொதுவா, வீட்ல இருந்து வெளியே வந்தாலே, எனக்கு அது அட்வென்ச்சர்தான். பக்கமா இருந்தா மினி அட்வென்ச்சர்... தூரமா இருந்தா மெகா அட்வென்ச்சர். மானசரோவரெல்லாம் என்னோட சக்திக்கு மீறிய ஆசை. இருந்தாலும், அப்பா சப்போர்ட்ல கிளம்பிட்டோம். சென்னை டு டெல்லி ப்ளைட்ல போயிட்டோம். அங்கிருந்து ஜீப்ல புறப்பட்டோம். பனி சூழ்ந்த மலைகள், குளிர், கரடுமுரடான நிலப்பகுதின்னு பல சவால்கள் இருந்துச்சு. டென்ட்லதான் தங்கணும், ஓப்பன் டாய்லெட்னு எல்லாமே புது அனுபவம். `பின்வாங்கிடலாமா!’ன்னு யோசனை வரும்போதெல்லாம், மானசரோவர் போயிட்டு வந்துட்டா வேற எங்கேயும் பயணம் செஞ்சுடலாம்னு நம்பிக்கையோட தொடர்ந்தேன்.

மலை உச்சிக்குப் போனதை வார்த்தைகளால வர்ணிக்க முடியலை. ஏதோ சாதனை படைச்சுட்ட மாதிரி பீலிங். இந்தப் பயணம்தான் என் மனநிலையை மாத்துச்சு. சாதாரணமா செய்யும் வேலைகள்ல இருந்து மாற்றுத்திறனாளிகள் வேறுபடலாம். ஆனா, உலகத்தைப் பார்க்க, அனுபவங்களை ரசிக்க எந்த தூரத்துக்கும்  போகலாம்னு நான் புரிஞ்சுகிட்டேன். டிராவலிங், என்னை ஊக்கப்படுத்துச்சு; தன்னம்பிக்கையை வளர்த்துச்சு” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் விசாகன்.

பல இடங்களுக்குப் பயணப்பட்டுள்ள விசாகன், காதல் மனைவியைக் காண ஹைதராபாத் கிளம்பியது அடுத்த கதை.  ``வீட்ல பொண்ணு பார்த்தாங்க. பொண்ணு ஹைதராபாத். வழக்கமா பையன் வீட்ல இருந்துதான் பொண்ணு பார்க்க வருவாங்க. இங்க, என்னைப் பார்க்க அவங்க சென்னை வந்தாங்க. என் நிலைமையை நேர்ல பார்த்து, ஓகே சொன்னாங்க. எனக்கும் ரொம்பப் பிடிச்சது. வீட்ல ஓகே சொல்லிட்டோம். அப்புறம்...” விசாகன் சொல்லி முடிப்பதற்குள் நடுவில் பேசத் தொடங்கிய ஷாலினி ``நான் அவங்கள பார்த்துட்டுப் போன அடுத்த வாரம், அவர் என்னைப் பார்க்க ஹைதராபாத் வந்துட்டாரு. சாதாரண ஒரு பையன் எப்படியெல்லாம் லவ் பண்ணுவாரோ, அதைவிட டபுளா என்னை லவ் பண்ணினார்... பண்றார்” என்று பேரன்போடு விசாகனைக் கட்டியணைக்கிறார்.

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

ஹைதராபாத் சென்ற விசாகனுக்கு, லைப் பார்ட்னர் மட்டுமல்ல... டிராவல் பார்ட்னரும் ஷாலினிதான்.  திருமணத்துக்குப் பிறகு, தென்னிந்தியா, துபாய் என மாறி மாறி டிரிப் அடித்துள்ளனர். ``அப்பாவோட பிசினஸ் துபாய்ல இருக்கு. அதனால அப்பப்போ துபாய் போயிட்டு வர்றோம். இந்தியாவுல டிராவல் பண்றதுதான் பெரும் கஷ்டம். மாற்றுத்திறனாளிகளுக்கான எல்லா வசதிகளும் வெளிநாட்டுல பக்காவா செஞ்சிருப்பாங்க. நம்ம ப்ளைட்ல இருந்து இறங்கிறப்பவே, வீல் சேர் ரெடியா இருக்கும். ஆனா, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்கள்ல சரியான பராமரிப்பு இல்லை. உள்ளூர்ப் பயணம்தான் எங்களுக்கு ரொம்பச் சிரமமா இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான போதுமான பயண வசதிகள் நம்ம ஊர்ல இல்லைங்கிறது ரொம்பக் கவலையான விஷயம்” என்ற விசாகன், மீண்டும் தொடர்ந்தார், ``என் வாழ்க்கையை மாற்றிய அடுத்த டிராவல் ஸ்டோரியைக் கேளுங்க. நானும் ஷாலினியும் ரோடு டிரிப்ஸ் நிறைய போவோம். மாற்றுத்திறனாளிகளுக்கு டிராவல்ல இருக்கும் முக்கியப் பிரச்னை க்ளோத்திங். கைகால்கள்ல குறைபாடு இருக்கிறங்களுக்கு டிரஸ்ஸிங் சிரமமா இருக்கும். பயணங்களுக்கான பிரத்யேக க்ளோத்திங்லாம் வெளிநாடுகள்ல `அடாப்டிவ் க்ளோத்திங்’னு  சொல்வாங்க. மாற்றுத்திறனாளிகளுக்காக டிசைன் செய்யப்படும் கஸ்டமைஸ்டு டிரஸஸ். தேங்யூ ஷாலினி... அத ஷாலினியே சொல்லுவாங்க...” என்றபடி தன் மனைவியைப் பார்த்தார்.

`` `பேஷன் டிசைனிங்ல ஆர்வமுள்ள எனக்கு, நம்மளே ஏன் அடாப்டிவ் க்ளோத்திங் டிசைன் பண்ணக் கூடாது’ன்னு தோணுச்சு. பட்டன்களுக்கு `ஜிப்’, பாத்ரூம் போக வசதியாக,  பின்பக்கம் ஓப்பனிங் வெச்ச பேன்ட்ஸ், ஒட்டிக்கிற மாதிரியான ஷர்ட்ஸ் டிசைன் பண்ணினேன். விசாகனுக்கு டிராவல் இப்ப ஈஸியாகிடுச்சு. அதுமட்டுமல்ல, அடாப்டிவ் க்ளோத்திங் பிரபலமாகிடுச்சு. நிறையபேர் எங்களுக்கும் டிசைன்பண்ணிக் கொடுக்கணும்னு கேட்கு றாங்க. என் கணவருக்காகச் செய்தது, எனக்கு ஒரு தொழிலைக் கொடுத்திருக்கு. அதுமட்டுமல்ல, என் பேஷன் ஷோக்களுக்கு விசாகன்தான் மாடல். எங்க வாழ்க்கை மாறிடுச்சு” என்கிறார் உற்சாகமாக.

``மாற்றுத்திறனாளிகளுக்கான பயண வசதிகள் இங்கே சரியில்லை. பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியான மேடை எத்தனை இடங்கள்ல இருக்கு? பிரைவேட் கார்கள்லகூட இந்த வசதி இல்லை. அப்பார்ட்மென்ட்ல லிப்ட் இருக்கும். ஆனா, லிப்டுக்குள்ள சக்கர நாற்காலி போக வசதி இருக்காது. நாங்க வெளியே வரத் தயார். ஆனா, எங்களுக்கான வசதிகள் கொஞ்சமும் இங்கே இல்லங்கிறதுதான் உண்மை. இந்தக் காரணங்களுக்காக டிராவல் பண்றதை நிறுத்தக் கூடாது. போகணும்... தூரமாகப் போகணும்” என்கிறார் விசாகன்.

வாழ்த்துகள் விசாகன் - ஷாலினி!

- கார்த்திகா, படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism