Published:Updated:

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்
பிரீமியம் ஸ்டோரி
தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

Published:Updated:
தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்
பிரீமியம் ஸ்டோரி
தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

`‘பயணங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் அவசியம். ‘ஆண்களுக்குப் பிரச்னையில்லை. நினைச்சா நினைச்ச இடத்துக்குக் கிளம்பிடலாம். பெண்களுக்குத்தான் கமிட்மென்ட்ஸ் அதிகம்’னு சொல்றதெல்லாம் நாமளா உருவாக்கிவெச்சிருக்கிற மனத்தடைகள். வாய்ப்புகளை  நாமதான் உருவாக்கிக்கணும். பயணம் பண்ணாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களே இருக்காது. ஒரே இடத்தில், ஒரே சூழலில், ஒரே மாதிரியான வாழ்க்கை எதையும் கத்துக் கொடுக்காது. பயணங்கள்தாம் அறிவை விசாலப்படுத்தும். அனுபவங்களைக் கொடுக்கும்’’ - மெசேஜுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார் லட்சுமி சரத். பயண ஆர்வலர், கதைசொல்லி, டிராவல் பிளாகர் என இவருக்குப் பன்முகங்கள் உண்டு. இதுவரை 40-க்கும் மேலான நாடுகளுக்குப் பயணம் செய்து முடித்திருக்கிறார்.

எத்தனை நாடுகளுக்குப் போனாலும் பிறந்து, வளர்ந்த சென்னைதான் எப்போதும் ஸ்பெஷல் என்கிறார், இப்போது பெங்களூரில் வசிக்கிற லட்சுமி.

``கிட்டத்தட்ட 15 வருஷங்கள் மீடியா துறை வேலையில் இருந்தேன். ஸ்கூல் படிக்கும்போதே டிராவல் பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்.என்னுடைய ரெண்டு தாத்தாக்களும் நிறைய டிராவல் பண்ணினவங்க. ரிமோட் ஏரியாக்களுக்கு டிராவல் பண்ணிட்டு வந்த பிறகு அந்த அனுபவங்களையும் அங்கே அவங்க சந்திச்ச விஷயங்களையும் எனக்குச் சொல்வாங்க. அதுதான் டிராவல் மீதான என் ஆர்வத்தை அதிகமாக்கியிருக்கணும்.

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

நினைவு தெரிஞ்ச நாள் முதல் பயணம் என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் இருந்திருக்கு. 2005-ல் நான் டிராவல் பிளாக் ஆரம்பிச்சேன். என் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கிட்டேன். கர்நாடகாவில் நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணினேன். சின்னச்சின்ன கிராமங்கள், ஹோய்சாலா கோயில்களுக்கெல்லாம் போனேன். அந்த அனுபவங்களைப் பதிவு பண்ண ஆரம்பிச்சேன். ஒருமுறை வெளிநாட்டுக்குப் போனபோது, டிராவல் பத்தின கட்டுரைகளுக்கு நிறைய தேவையும் வரவேற்பும் இருக்கிறது தெரியவந்தது. டிராவலை முழுநேர வேலையாகவும் செய்ய முடியும்னு உணர்ந்தது அப்போதுதான்...’’ என்பவர், lakshmisharath.com என்ற பெயரில் டிராவல் வெப்சைட் வைத்திருக்கிறார்.

‘`2014-ம் வருஷம் ‘சிட்டாடைன்ஸ்’ கேம் பெயினுக்காக இன்டர்நேஷனல் பிளாகர்ஸ் மூன்று பேரை இன்வைட் பண்ணியிருந்தாங்க.  யூரோப்ல உள்ள ஏதாவது மூணு நகரங்களுக்கு மூணு நாள்களுக்குத் தனித்தனியா டிராவல் பண்ணி அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் எழுதணும். யூரோப்புக்கு அது என் முதல் சோலோ ட்ரிப். மறக்க முடியாத அனுபவமா அமைஞ்சது. ஒருகட்டத்துல டிராவல் எனக்கு கரியரா மாறிடுச்சு. ஆங்கிலத்தில் ‘மைண்டுஃபுல்னெஸ்’னு ஒரு வார்த்தை இருக்கு. அதாவது எதைச் செய்தாலும் மனசும் சிந்தனையும் அந்த விஷயத்தில் மட்டுமே இருக்கும் நிலை. டிராவலில் அது 100 சதவிகிதம் சாத்தியம். ஒரு குழந்தையை சாக்லேட் கடைக்குள்ளேயோ, பொம்மைக்கடையிலோவிட்டால் எவ்வளவு குதூகலப்படும்... டிராவல் எனக்கு அப்படித்தான். மனிதர்களைச் சந்திக்கிறதும் அவங்களுடைய அனுபவங்களையும், கதைகளையும் கேட்கறதும் எனக்குப் பிடிச்ச விஷயங்கள். எல்லா கவலைகளையும் மறக்க வெச்சு, உங்களை வேறோர் உலகத்தில் சஞ்சரிக்கவைக்கிற விஷயம்தான் டிராவல்’’ - வாழ்வை மாற்றும் பயணங்கள் பற்றிப் பேசுபவர், பாதுகாப்பு முக்கியம் என்பதையும் அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறார்.

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

‘`பார்சிலோனாவுக்கு சோலோ டிராவல் பண்ணினபோது, காலையில பிரேக்ஃபாஸ்ட் முடிச்சதும் ஊரைச் சுத்திப்பார்க்கக் கிளம்பினேன். இருட்டறதுக்குள்ளே நான் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பிடணும்னு உறுதியா இருந்தேன். ‘நைட் லைஃப் பார்க்கலையா’னு நிறைய பேர் கேட்டாங்க.  நான் தங்கியிருந்த ஹோட்டல் சிட்டியிலிருந்து ஒரு மணி நேரம் டிராவல் பண்ற தூரத்தில் இருந்ததால், எனக்குப் பாதுகாப்புதான் பெரிசா பட்டது. பயணம் பண்ற எல்லோருக்கும் அதுதான் பிரதானமா இருக்கணும். நல்லவேளையா நான் தனியா போன எந்தப் பயணத்திலும் எனக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஒருமுறை என் கணவரோடு யூரோப் போயிருந்தேன். யாரோ ஒருத்தர் எங்களைப் பின்தொடர்வது தெரிஞ்சது. நாங்க டூரிஸ்ட்டுங்கிறதை மோப்பம் பிடிச்சவன் போலத் தெரிஞ்சான். நாங்க வந்த பாதையில் மக்கள் நடமாட்டம் பெருசா இல்லை. என் கழுத்துப் பகுதியில் அவனுடைய சுவாசத்தை என்னால உணர முடிஞ்சது. சரியா அந்த நேரத்துல எதிர்திசையில் நாலஞ்சு பேர் வந்தாங்க. அவங்களைப் பார்த்தவன் அப்படியே காணாமப் போயிட்டான். அன்னிக்கு அவன்கிட்டருந்து தப்பிச்சது எங்க அதிர்ஷ்டம். ஆனா, எல்லா நேரமும் அதிர்ஷ்டம் கூடவே வராது, நாமதான் கூடுதல் கவனத்துடன் இருக்கணும்னு உணரவெச்ச சம்பவம் அது’’ என்பவர், பயணப் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பகிர்கிறார்.

* ``பயணங்களில் ஆர்வமிருக்கிற யாரும் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவே கூடாது. தனியாகவோ, துணையுடனோ எப்படி டிராவல் பண்றவங்களுக்கும் பாதுகாப்பு ரொம்ப அவசியம். உங்களுடைய சூழலின்மேல் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

* நீங்க டிராவல் பண்ற இடம் என்னதான் பாதுகாப்பானதா இருந்தாலும், சில விஷயங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். மனசு சொல்றதைவிடவும் மூளை சொல்றதைக் கேட்கணும். நேரங்கெட்ட நேரத்துல வெளியில இருக்கிறதைத் தவிர்க்கலாம்.

* பார்சிலோனா போனபோது நான் சந்திச்ச ஒரு கைடுகிட்டருந்து கத்துக்கிட்ட விஷயம் சுவாரஸ்யமானது, உபயோகமானது. அவங்க எப்போது எங்கே டிராவல் பண்ணினாலும் டம்மி வாலெட் வெச்சிருப்பாங்களாம். அதுக்குள்ளே எக்ஸ்பைரி ஆன கிரெடிட் கார்டு, கொஞ்சம் சில்லறைக் காசு எல்லாம் வெச்சிருப்பாங்களாம். தனியா டிராவல் பண்ணும்போது அடிக்கடி அதை உபயோகிப்பதாகச் சொன்னாங்க.  டிராவல் பண்ணும்போது நிறைய பணம் எடுத்துட்டுப் போக வேண்டாம். எல்லா இடங்களிலும் கிரெடிட் கார்டுல எதையும் வாங்க முடியும். அதையும் மீறி பணம் எடுத்துட்டுப் போனாலும் அதை மொத்தமா ஒரே இடத்துல வைக்காம, பையில், வேலட்டில்... இப்படிப் பிரிச்சு வெச்சுக்கோங்க. வெளிநாடுகளுக்குப் போகும்போது டெபிட் கார்டு எடுத்துட்டுப் போறதைத் தவிர்ப்பது நல்லது.

* புது இடங்களுக்குப் போகும்போது  கூட்டத்தோடு சேர்ந்திருக்கிறது நல்லது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவெச்சு உலகமெங்கும் நிறைய மோசடிகள் நடக்குது. அந்த மாதிரியான மோசடிப் பேர்வழிகளிடம் ஜாக்கிரதையா இருக்கணும்.  ‘ஃபிரெண்ட்ஷிப் பேண்டு கட்டிவிடறோம்’னு சொல்லிட்டுப் பக்கத்துல வருவாங்க. அதை நம்பி `சரி'ன்னு சொல்லிட்டீங்கன்னா, அடுத்து உங்களை மிரட்டிப் பணம் கேட்பாங்க.  இப்படி ஒவ்வோர் இடத்திலும் நடக்கிற மோசடிகளைத் தெரிஞ்சுவெச்சுக்கிறது நல்லது.

* முடிஞ்சா டிராவல் இன்ஷூரன்ஸ் எடுக்கிறது இன்னும் பாதுகாப்பானது.  பயணத்தின்போது ஏற்படக்கூடிய பலவிதமான எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு இந்த இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும். பாஸ்போர்ட், விசாவுக்கு இணையான முக்கியத்துவம் இதுக்கும் கொடுக்கப்படணும்!’’

-சாஹா