சமூகம்
Published:Updated:

கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்

கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்

கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்

கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்

டிப் டாப் உடை, கழுத்தில் தங்கச் சங்கிலி, கையில் பிரேஸ்லெட், ஆறு மொழிகளில் அசத்தல் பேச்சு என்று அசரடிக்கும் தோற்றத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில்களின் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி வகுப்புப் பெட்டிகளில் பயணிகளிடம் கொள்ளை அடித்து வந்த குற்றவாளியைக் கைதுசெய்துள்ளது தமிழக ரயில்வே காவல் துறை. அந்த நபர் ரயில்களில் கொள்ளையடித்தே மலேசியாவில் ஹோட்டல், சர்வதேச அளவில் பாலியல் தொழில் என்று பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருப்பதுவும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்

தமிழகத்தில் ஓடும் ரயில்களில், ஏ.சி முதல் வகுப்பு பெட்டிகளில் தொடர்ச்சியாகக் கொள்ளை நடைபெறுவதாகத் தமிழக ரயில்வே காவல் துறைக்குப் புகார்கள் குவிந்துள்ளன. குறிப்பாக, பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, சேரன், ஆலப்புழா, மங்களூர், கோரமண்டல் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கொள்ளை நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இதுகுறித்து விசாரிக்க ரயில்வே காவல் துறை ஆய்வாளர்கள் தாமஸ் ஜேசுதாசன், கயல்விழி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மே 7-ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் கழுத்தில் தங்கச் சங்கிலி, கையில் பிரேஸ்லெட் சகிதம் டிப்-டாப்பாக உடை அணிந்திருந்த நபரை சற்று தயக்கத் துடன்தான் அணுகினர். அவரது டிக்கெட்டை பரிசோதித்தபோது அவர், ஆன்லைன் மூலமாக டிக்கெட் எடுத்திருப்பது தெரிந்தது. மேற்கொண்டு அவரிடம் விசாரித்தபோது அந்த நபர் பதற்றம் அடைந்தார். இதனால், சந்தேகப்பட்ட போலீஸார், அவரது கையில் வைத்திருந்த மொபைல் போனின் லாக்கை திறக்கும்படி கூறியுள்ளனர். பேய் முழி முழித்த அந்த நபர், “லாக் நம்பர் மறந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார். இதில்தான் போலீஸாருக்கு பொறிதட்டியது. உடனடியாக அந்த ஏ.சி பெட்டியின் விளக்குகள் ஆன் செய்யப்பட்டு, பயணிகளிடம் விசாரித்தார்கள். அப்போதுதான் டிப்-டாப் நபரின் கையிலிருந்த மொபைல் போன், மற்றொரு பயணியுடையது என்று தெரியவந்தது. உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டார்.

விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம். “கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்கிற இந்த மோசடி நபர், எந்த ரயிலில் கொள்ளை அடிக்க வேண்டுமோ, அந்த ரயிலில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார். டிப்-டாப்பாக உடை அணிந்து, ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே ரயில் நிலையம் வருபவர், ஏ.சி பெட்டிகளில் ஏறக் காத்திருக்கும் பயணிகளை நோட்டம்விடுவார். யாரிடம் உயர்ரக தோள் பை மற்றும் காதிலும் கழுத்திலும் நகைகள் இருக்கிறதோ... அவர்களே சாகுலின் இலக்கு.

கோடிகளை குவித்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ கொள்ளையன்! - பொறிவைத்து பிடித்த ரயில்வே போலீஸ்

இவருக்கு ஆறு மொழிகள் தெரியும். இதனால், உடன் பயணிக்கும் பயணிகளிடம் சகஜமாக உரையாடி நம்பிக்கையைப் பெற்றுவிடுவார். ரயிலில் நன்றாகத் தூங்குபவர், பின்னிரவு 2 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருப்பார். யாரை எல்லாம் நோட்டம்விட்டாரோ, அவர்களுடைய இருக்கைக்குச் செல்வார். அங்கிருக்கும் கைப்பைகளில் இருக்கும் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பையை எடுத்த இடத் திலேயே வைத்துவிடுவார். பெண் கள் பலர், தாங்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துவிட்டுத் தூங்குவது வழக்கம். இது சாகுலுக்கு சாதகமாகிவிட்டது. விலை உயர்ந்த மொபைல் போன்களையும் திருடிவிடுவார். அப்படி திருடிய மொபைல் போன் ஒன்றுதான் இவர் சிக்குவதற்கும் காரணமாகிவிட்டது.

நான்கு வருடங்களாக இவர் இப்படி கொள்ளை அடித்தே நிறைய சொத்துகளை வாங்கியிருக்கிறார். பெரும்பாலும் விமானத்தில் பறப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள சாகுல், கொள்ளை யடிப்பதற்கு மட்டுமே ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை 11 நாடுகளுக்கு அவர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. மலேசியாவில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் ஹோட்டல் ஒன்றையும் வாங்கியுள்ளார். நெதர்லாந்து, அல்ஜீரியா, பிரான்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பெண்களை வரவழைத்து, தனது ஹோட்டலில் பாலியல் தொழிலையும் நடத்திவருகிறார்” என்றார்கள்.

ரயில்வே காவல் துறை டி.ஐ.ஜி-யான பால கிருஷ்ணனிடம் பேசினோம். “சாகுல் ஹமீதுவிடம் இதுவரை 119 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. அவருடைய லேப் டாப்பில், இதுவரை அவர் பயணித்த ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் உள்ளன. அந்த ரயில்கள் அனைத்திலும், அவர் பயணித்த தினத்தன்று திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அந்த எஃப்.ஐ.ஆர் தகவல்களை எல்லாம் பெற்று, புகார் அளித்தவர்களிடம் விசாரித்து வருகிறோம். மலேசியாவிலுள்ள ஹோட்டலை, அந்த நாட்டு அரசாங்கம் மூலம் முடக்கவும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

தோற்றத்தை வைத்து ஏமாறக் கூடாது என்பதற்கு சாகுல் ஹமீது சம்பவமே உதாரணம். ரயில் பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- .பொன்குமரகுருபரன், படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு