Published:Updated:

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel
எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

விடுமுறை வந்தாலே `சுற்றுலாவுக்கு எங்கே போகலாம்?' என்ற கேள்வியும் ஒட்டிக்கொள்ளும். சுற்றுலா செல்லும் பழக்கம் முன்பைவிட இப்போது மக்களிடையே அதிகரித்துள்ளது. சைக்கிள் பயணம் முதல் உலகம் சுற்றும் இலக்கு வரை வித்தியாசப் பயண பிரியர்கள் ஏராளமானோர் இப்போது உள்ளனர். அந்த வகையில் ஓர் ஆங்கில இணையதளம் நடத்திய சர்வே ஒன்றில் 45 சதவிகித மக்கள் `பட்ஜெட்' டிராவலைத்தான் அதிகம் தேர்வுசெய்கின்றனர் எனப் பதிவாகியுள்ளது. குறைந்த செலவில் பல்வேறு வித்தியாச இடங்களைக் காண முடியும் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அப்படிப்பட்ட டாப் 4 பட்ஜெட் சுற்றுலாத் தலங்கள்தான் இவை!

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

எகிப்து:

பழைமை விரும்பிகள் ஒருமுறையாவது பார்க்க ஏங்கும் சுற்றுலாத்தலம் `எகிப்து'. பிரமிடுகள் முதல் நைல்நதி வரை ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடைக்கும் இந்த இடத்தில், தரமான உணவு முதல் தங்கும் விடுதி வரை அத்தனையும் குறைந்த விலையில் கிடைக்கும். கி.பி 879-களில் கட்டப்பட்ட இபின் துலுன் மசூதி, இளைஞர்களின் ஃபேவரைட் டெஸ்டினேஷனான `தஹப்' நகரம், 1,20,000 பழைமை வாய்ந்த பொருள்கள் அடங்கிய அருங்காட்சியகம், 13-ம் நூற்றாண்டில் பாறைகளிலிருந்து செதுக்கப்பட்ட `அபு சிம்பெல்' தொல்பொருள் தடம், Red Sea Reef, எகிப்தின் மிகப்பெரிய மதத் தலமான `கர்னாக்' உள்ளிட்ட சுவாரஸ்யமான பல இடங்கள் எகிப்தில் நிறைந்துள்ளன.

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

தைவான்:

கிழக்கு சீனாவில் உள்ள மிகச்சிறிய அழகிய தீவு `தைவான்'. பல ஆச்சர்ய இடங்களைக்கொண்டிருக்கும் இந்தத் தீவை சைக்கிளில்கூட சுற்றி முடித்துவிட முடியும். சுவையான சீன உணவு முதல் சிவப்பு லேன்டர்ன் நகரம் வரை, விடுமுறையை முழுமையாகக் கழிக்க ஏராளமான விஷயங்கள் இங்கு உள்ளன. 600 மீட்டர் நீண்ட Raohe இரவுச் சந்தை, பலரும் தேனிலவுக்குத் தேர்வுசெய்யும் `சன் மூன்' ஏரி, தைவானின் வெவ்வேறு கலாசாரங்களை ஒன்றிணைத்த Huashan 1914 பூங்கா, செர்ரி பழத்தோட்டம், பழைமை வாய்ந்த Zeelandia கோட்டை எனப் பல்வேறு வகையான சுவாரஸ்ய இடங்களைக்கொண்டுள்ளது தைவான்.

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

ஈக்வடார் (Ecuador):

வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக்கொண்டிருக்கும் ஈக்வடார், இயற்கை விரும்பிகளுக்கானது. வெப்ப மண்டல அமேசான் காடுகள், பனிப்பாறைகள் நிறைந்த எரிமலைகள், செழிப்பான நிலங்கள் என இயற்கை அழகைப் பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இங்கு உள்ளன. மேலும், 1600-களில் கட்டப்பட்ட பிரமாண்ட தேவாலயம், `அட்வெஞ்சர்' பிரியர்களுக்கென டீனா நகரம், 1800-களில் கட்டப்பட்ட கதீட்ரல் நோவா தேவாலயம், சார்லஸ் டார்வின், `இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species by Natural Selection) என்ற புத்தகம் எழுதத் தூண்டுதலாக இருந்த Galapagos தீவு போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல இடங்கள் இங்கு உள்ளன.

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

ஐஸ்லேண்டு:

`நெருப்பு மற்றும் பனிக்கட்டிகளின்' தீவு என்று அறியப்படும் ஐஸ்லேண்டில் ஏராளமான `த்ரில் மொமென்ட்டுகள்' காத்திருக்கின்றன. கடுமையான கோடை வெயிலைக் கடக்க, ஐஸ்லேண்டு சரியான சாய்ஸ். திமிங்கலம் அதிகம் நிறைந்திருக்கும் Reykjavik கடற்கரை, எரிமலை நிலம் பக்கத்தில் அமைந்துள்ள geothermal spa கொண்ட ப்ளூ லகூன், உலகின் மிகப்பெரிய வெந்நீரூற்று, பல்வேறு வண்ணங்களில் ஆன rhyolite மலைகள்கொண்ட Landmannalaugar தேசியப் பூங்கா, பனிப்பாறைகள் நிறைந்த Vatnajökull glacier போன்ற பிரமிக்க வைக்கும் பல இடங்களை ஐஸ்லேண்டில் காணலாம்.

எகிப்து, ஐஸ்லேண்டு, தைவான்... பட்ஜெட் டெஸ்டினேஷன்ஸ்! #Travel

இந்த இடங்களில் உணவு, தங்கும் விடுதி, நுழைவுக் கட்டணம் என அனைத்தும் குறைந்த பட்ஜெட்டுக்குள் அடங்கும்.

Vikatan