Published:Updated:

`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!

`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!
`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!

அமெரிக்கா, கலிபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ, ஜப்பான் மற்றும் பெலாண்டர்ஸ் ஆகியவைதான் தேனிலவுக்காக அதிகம் விரும்பப்படும் நாடுகள். இங்குத் தேனிலவு தம்பதிக்காகப் பிரத்யேகமாக என்ன வசதிகள் இருக்கின்றன, எப்படியெல்லாம் கொண்டாட முடியும் என்பதைப் பார்ப்போம்.

``கல்யாணம் முடிந்தது, அடுத்து ஹனிமூன்தானே!" என்று திருமணமான புதுமணத் தம்பதிகளிடம் கேட்டால், அவர்களின் முகம் வெட்கத்தில் பூத்துக்குலுங்கும். காரணம், தேனிலவு என்பது அன்றிலிருந்து இன்று வரை தனிமையில் இனிமை காணும் தருணமாக உணரப்பட்டிருக்கிறது, உணர்த்தப்பட்டிருக்கிறது. காதல் கதை பேசவும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் தேனிலவு போன்ற டிராவல் தருணங்கள்தான் உதவி செய்யும். உள்நாடுகளைவிட, வெளிநாடுகளில் தங்களின் தேனிலவுகளை வைத்துக்கொள்ளவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். 

அமெரிக்கா, கலிபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ, ஜப்பான் மற்றும் பெலாண்டர்ஸ் ஆகியவைதான் தேனிலவுக்காக அதிகம் விரும்பப்படும் நாடுகள். இங்குத் தேனிலவு தம்பதிக்காகப் பிரத்யேகமாக என்ன வசதிகள் இருக்கின்றன, எப்படியெல்லாம் கொண்டாட முடியும் என்பதைப் பார்ப்போம்.

தேனிலவுக் கனவை நிஜமாக்குங்கள்!

`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!

பூத்துக்குலுங்கும் சோலைகள், பச்சைப் பசேல் திராட்சைத் தோட்டங்கள், ஆர்ப்பரிக்கும் மலையருவிகள் என எல்லாமும் சேர்ந்து, அமெரிக்காவை தேனிலவுத் தம்பதிகளின் சொர்க்கபூமி ஆக்கியிருக்கின்றன. நீங்கள் அறைக்குள் உட்கார்ந்து நேரத்தைச் செலவிட விரும்பினாலும் சரி, உல்லாசப் பறவைகளாக ஊர் சுற்ற விரும்பினாலும் சரி, அமெரிக்காவின் ஜாக்ஸன் நகரில் நீங்கள் விரும்பியபடியே தேனிலவைக் கொண்டாடலாம்.

சுத்தமான காற்றையும் எல்லையில்லா நீல வானத்தையும் ரசித்தபடி இங்கே  நீங்கள் பொழுதைக் கழிக்கும்போது, உங்களையும் அறியாமல் நீங்கள் நாளெல்லாம் புன்னகை பூப்பது நிச்சயம். டவுன் சதுக்கத்தின் பனிபடர்ந்த ஆன்ட்லர் வளைவுகளின் கீழே ஜோடியாக விரல்கள் கோத்தபடி நடப்பது, காதல் பறவைகளாகிய உங்களின் ஹனிமூன் ரொமான்ஸை இன்னும் அதிகமாக்கும்.

`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!

மேற்கத்திய பாணியில் கட்டப்பட்டுள்ள ஏராளமான ஹோட்டல்களிலிருந்து உங்களுக்கு விருப்பமான அறையைத் தேர்வுசெய்யுங்கள். குளிருக்கு இதமாக அறைக்குள் தீமூட்டி, ஒயினோ ஹாட் சாக்லேட்டோ பருகியபடி பொழுதைக் கழிக்கலாம். ஹவாயின் இரண்டாவது பெரிய தீவான முவாய் தீவில் `இன்று என்ன செய்யலாம்?’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கே, கொண்டாட்டமான கலாசார செறிவுடன் வரலாற்றுத் தொன்மையுடன்  அழகு நிறைந்த ஏதோ ஒன்று எப்போதும் உங்களுக்காகக் காத்திருக்கும். கடற்கரையில் கைகோத்தபடி அலைகளை ரசிக்க, பச்சைப் பசேல் புல்வெளிகளில் கால்ஃப் விளையாட, கடலின் அடியாழத்தைக் கண்டு மகிழ, சின்ன நகரங்களின் அழகை ருசிக்க, காற்று முத்தமிடும் சாலைகளில் பயணம் செய்ய, ஆர்ப்பரிக்கும் அருவிகளில் ஆனந்தமாக விளையாட என, உங்கள் விருப்பப்படி தேனிலவுக் கனவுகளை நனவாக்கலாம்.

இங்கே ரொமான்ஸுக்கு நேரம் போதாது!

`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!

புதுமணத் தம்பதிகளின் ரொமான்ஸ் பூமி `பெலாண்டர்ஸ்’. இங்கு உள்ள வைரங்கள், சாக்லேட்கள், பானங்கள் என எல்லாமே காதல் மொழி பேசும். கணவன்-மனைவி இருவரும் மலர்ச் சாலைகளில் காதலைப் பரிமாறிக்கொண்டு நடந்து செல்லும்போது, அந்தச் சாலைகள் அவர்களுக்காகவே அமைக்கப்பட்டதுபோல் தோன்றும். பெலாண்டர்ஸ் நகரத்துக்கு வடக்கே உள்ள பெல்ஜியம் தேனிலவு தம்பதிகளுக்குப் பொருத்தமான இடம். இங்கு உள்ள அனைத்து இடங்களும் பார்ப்பவர்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தும். 
இங்கே கணவனும் மனைவியுமாக ஓரிடத்தில் அமர்ந்து, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, மனத்தைக் கொள்ளைகொள்ளும் பசுமையான குன்றுகளின் மீது தங்களின் பார்வையைப் பரவவிட்டு, பறவைகளின் ரீங்காரத்தைக் காது குளிரக் கேட்டு மகிழும்போது கிடைக்கும் ஆனந்தமே, தேனிலவுக்கு வந்ததற்கான நிறைவை ஏற்படுத்திவிடும்.

காதல் நகரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது!

`ரொமான்ஸ் பூமி’ பெலாண்டர்ஸ்... `ரொமான்ட்டிக் கேட்வே’ ஸ்கைட்ரீ... ஹனிமூன் டெஸ்டினேஷன்கள்!

`ரொமான்ட்டிக் கேட்வே' என்று அழைக்கப்படும் ஜப்பான், காதல் தம்பதிகளின் தேனிலவுக்குப் பொருத்தமான இடம். இங்கு இருக்கும் அற்புதமான இடங்கள் ஒவ்வொருவரையும் ஈர்ப்பதாக அமைந்திருக்கின்றன. ஜப்பானின் கலாசார முகப்புத்தன்மை, மக்களின் விருந்தோம்பல், வண்ணமயமான சுற்றுச்சூழல் என அனைத்தும் தேனிலவு செல்லும் தம்பதிகளுக்கு நிச்சயம் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தும். இங்கு உள்ள ஏஷி ஏரிக்கு அதிகாலையில் சென்றுவிட வேண்டும். அப்போது அங்கு விரியும் இயற்கைக் காட்சிகளைக் காண, கண்கள் இரண்டு போதாது. சூரியன் உதிக்கும் அழகு, மேகங்கள் கலையும் காட்சி என, காலை உணவுக்குப் பதிலாக காட்சிகளே விருந்தாக இருக்கும்.

தேனிலவுத் தம்பதிகளுக்காக பிரத்யேகமாக இரவு நேர ரெஸ்டாரன்ட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே கணவன் - மனைவி இருவர் மட்டும் தனியாக மெழுகுவத்தி ஒளியில் இரவு நேர உணவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது அலாதியான சுகம்! அப்போது உணவு மட்டுமல்ல, மனதும் இடம் மாறி இருக்கும் என்பதுதான் உண்மை.

டோக்கியோ நகரத்தில் உள்ள ஸ்கைட்ரீ எல்லோருக்குமான இடம் என்றாலும்கூட, தேனிலவுத் தம்பதிகளுக்கு அந்த இடம் வித்தியாசமான உணவு விருந்து அனுபவத்துக்கு அழைத்துச் செல்லும். தரைமட்டத்திலிருந்து 634 மீட்டர் உயரம் உள்ள இந்த ஸ்கைட்ரீயில் 360 டிகிரி கோணத்தில் டோக்கியோ நகரத்தையே தனது கணவனுடனோ, மனைவியுடனோ ரசித்துவிட முடியும் என்பது ஆனந்தம் தரும் விஷயம்தானே?

ஹனிமூன் பேக்கேஜ்கள்:

இன்றைய புதுமணத் தம்பதிகள் தேனிலவுக் கொண்டாட்டங்களை இந்தியாவுக்குள் வைத்துக்கொள்ளாமல், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என நினைப்பதால், சுற்றுலா ஏஜென்ட் நிறுவனங்கள் அதற்குத் தகுந்த மாதிரி  ஹனிமூன் பேக்கேஜ்களையும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். வெளிநாடுகளில் தங்கும் வசதி, சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் என அனைத்தையும் அவர்களே ஏற்பாடு செய்து தருவதால், ஹனிமூன் நாள்களை டென்ஷன் இல்லாமல் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும். ஆனால், சிறப்பான சேவைகளை வழங்கும் சுற்றுலா ஏஜென்ட் நிறுவனங்களை அணுகுவது முக்கியமான விஷயம். 

புதிதாகத் திருமணமானவர்கள் இனியும் தாமதிக்காமல், தித்திக்கும் தேனிலவை அனுபவிக்க உங்களின் கனவுதேசத்துக்குக் கிளம்புங்கள்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு