Published:Updated:

திருப்பூர் வீதிகளில் சுற்றித்திரியும் நைஜீரியர்கள்! காரணம் என்ன தெரியுமா? #MyVikatan

திருப்பூர் வீதிகளில் சுற்றித்திரியும் நைஜீரியர்கள்! காரணம் என்ன தெரியுமா? #MyVikatan
திருப்பூர் வீதிகளில் சுற்றித்திரியும் நைஜீரியர்கள்! காரணம் என்ன தெரியுமா? #MyVikatan

பின்னலாடைத் தொழில் சம்பந்தமாக, உலகின் பல நாடுகளில் இருந்தும் மக்கள் திருப்பூருக்கு வந்துசெல்வது வழக்கம். அதில் நைஜீரியா, சூடான், தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களின் வருகையே அதிக அளவு இருக்கிறது.

திருப்பூர் வீதிகளில் சுற்றித்திரியும் நைஜீரியர்கள்! காரணம் என்ன தெரியுமா? #MyVikatan

ஆரம்பத்தில், திருப்பூர் ரயில்நிலையம், காதர்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மட்டுமே அறை எடுத்துத் தங்கிவந்த ஆப்பிரிக்கர்கள், தற்போது நகரின் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்தும் தங்கி வருகிறார்கள். அதுபோக, நகர்ப் பகுதிகளை விட்டு தொலைவான முதலிபாளையம், நெருப்பெரிச்சல், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடியேறிவருகிறார்கள். இதில் சில நைஜீரியர்கள், தமிழ்ப் பெண்களைத் திருமணம் முடித்து குடும்பம் நடத்திவருவதையும் ஆங்காங்கே காணலாம். பல வருடங்களாக இங்கேயே வசித்துவரும் சிலர், தெள்ளத்தெளிவாக தமிழ் பேசுவதையும் அரிதாகக் காண முடிகிறது. தங்களது தொழில் வணிகம் பற்றி கலந்தாலோசிக்க தினமும் மாலை வேளைகளில் காதர்பேட்டை, ராயபுரம் போன்ற பகுதிகளில் ஒன்றாகக் கூடுவது, ஆப்பிரிக்கர்களின் வாடிக்கை. அதேசமயம், குடியிருக்கும் பகுதிகளில் சமூக விரோதச் செயல்களின் ஈடுபடுவது, பொது அமைதிக்குப் பாதகம் விளைவிப்பது உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளிலும் அடிக்கடி சிக்கிக்கொள்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். குறிப்பாக பாஸ்போர்ட் , விசா உள்ளிட்ட முறையான ஆவணங்கள் உரிய முறையில் இல்லாமல், சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கி கைதுசெய்யப்படும் ஆப்பிரிக்கர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.