Published:Updated:

நீங்கள் பயணிக்கும் ஆம்னி பஸ்சில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

விகடன் டீம்
நீங்கள் பயணிக்கும் ஆம்னி பஸ்சில் என்னென்ன  வசதிகள் இருக்கின்றன?
நீங்கள் பயணிக்கும் ஆம்னி பஸ்சில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?
நீங்கள் பயணிக்கும் ஆம்னி பஸ்சில் என்னென்ன  வசதிகள் இருக்கின்றன?

இதுகுறித்து எந்த வரையறையும் இதுவரை இல்லை. ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் வசதிக்கேற்றவாறு சில ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்வது குறித்தே தெளிவான வரையறைகள் இல்லை. அதனால், இந்தெந்த வசதிகள்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. முன்பதிவு இணையதளங்களில் பஸ்சில் உள்ள வசதிகள் குறித்து குறிப்பிட்டிருப்பார்கள். அந்த வசதிகள் இல்லாதபட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களில் சேவைக்குறைபாடு என்று வழக்கு தொடரமுடியும். அமர்ந்து செல்லும் வசதி, படுக்கை வசதி, வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ், இலவச இணைய வசதி, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி போன்றவை பொதுவானவை. ஆனால், பெரும்பாலான பஸ்களில் இந்த வசதிகள் இருப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் மிக மோசமான பேருந்துகள் இயக்கப்படுவதுண்டு. ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை.