Published:Updated:

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

"மன அழுத்தத்தைக் குறைக்க விரும்பும் முதியோரும், பொழுதுபோக்க விரும்பும் குழந்தைகளும் இந்த ரயிலில் பயணிக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்குப் பொறுமையாகப் போகிறது இந்த ரயில்."

Published:Updated:

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

"மன அழுத்தத்தைக் குறைக்க விரும்பும் முதியோரும், பொழுதுபோக்க விரும்பும் குழந்தைகளும் இந்த ரயிலில் பயணிக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்குப் பொறுமையாகப் போகிறது இந்த ரயில்."

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

காரைக்குடி - திருவாரூர் இடையே மீடடர்கேஜ் ரயில் பாதை, தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டிற்காக ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் 'ரெமு' ரயில், காரைக்குடியிலிருந்து புறப்பட்டு திருவாரூர் செல்வதற்கு அதாவது, சுமார் 147 கி.மீ தூரத்தைக் கடப்பதற்கு எட்டு மணி நேரம் ஆகிறது. அந்த அளவுக்கு ஆமை வேகத்தில் ரயில் செல்கிறது எனப் பயணிகள் புலம்பித் தவிக்கின்றனர்.

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

மேலும் அவர்கள், ``ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என மூன்று தினங்களில் இந்த ரயில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரைக்கும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. காரைக்குடியிலிருந்து திருவாரூர்வரை செல்லும் இந்த ரயில், எட்டு மணி நேரம் பயணிப்பதோடு, ரயிலில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்" என்கின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி ரயில் பயணிகள் வசதி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆதிஜெகநாதன், ``காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரைக்கும் 72 கேட்கள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு கேட்லயும் ரயில் நின்னுதான் போகும். ரயில், பெரியகோட்டை ரயில் கேட்டிற்கு முன்பாக நின்றதும் ரயில் இன்ஜினிலிருந்து கேட் கீப்பர் இறங்கிப்போய் கேட்டை அடைப்பார். அதன்பிறகு, ரயில் புறப்பட்டு, கேட்டைத் தாண்டி நிற்கும். கடைசிப் பெட்டியிலிருந்து ஒரு கேட் கீப்பர் இறங்கி, பூட்டிய கேட்டைத் திறந்துவிடுவார். மீண்டும் இவர் ரயிலில் ஏறியதும் ரயில் புறப்பட்டுச் செல்லும். இது, ஏதோ ஓரிரு இடத்தில் மட்டும் இப்படி இருக்கும் என்று நினைக்காதீர்கள். இதே மாதிரி 72 இடங்களில் கேட்டுகளை மூடுவதும் திறப்பதுமாக நான்கு கேட் கீப்பர்கள் அந்த வேலையைச் செய்யவேண்டிய அவலநிலை இருக்கிறது. இதில், கேட்டுகளை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். இன்ஜினீயரிங் கேட்டுகள் 72 இருக்கின்றன. பழுதடைந்த கேட்டுகளில் இரும்பு ஜெயின் போட்டுக் கட்டிய பிறகுதான் ரயில் ஊர்ந்துசெல்கிறது. பெரியகோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி போன்ற முக்கியமான ஊர்களில் இருக்கக்கூடிய கேட்டுகளின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருப்பதோடு, செயின் போட்டுக் கட்டவேண்டிய நிலைமை இருக்கிறது.

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

ரயில் ஓடாதபோது 72 கேட்களில் கேட் கீப்பர்கள் சும்மாவே உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். தற்போது ரயில் இயக்கப்படும்போது அந்த கேட் கீப்பர்கள் எல்லாம் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருப்பது ரயில்வே நிர்வாகத்தின்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேட் கீப்பர்கள் ரயிலில் பயணம் செய்து கேட்டை மூடுவதும் திறப்பதுமாக இருப்பது இந்திய ரயில்வேக்கு அவமானமாக இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் இப்படியொரு ரயில், இயக்கப்படும் கொடுமை வேறு எங்குமே இருக்காது" என்கிறார்.

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

காரைக்குடி அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் மாதவன், ``பேராவூரணியில் மட்டும் ஐம்பது மீட்டர் தூரத்தில் மூன்று கேட்டுகள் இருக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைக்க விரும்பும் முதியோரும், பொழுதுபோக்க விரும்பும் குழந்தைகளும் இந்த ரயிலில் பயணிக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்குப் பொறுமையாகப் போகிறது இந்த ரயில். தினந்தோறும் காரைக்குடி, திருவாரூர் இரண்டு முனையிலிருந்தும் காலையில் இந்த ரயில் சேவையை இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள், ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என வேலைக்குச் செல்வோர் கூட்டம் தினந்தோறும் அதிகரிக்கும். ரயில்வேக்கு நல்ல வருமானமும் வரும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

காரைக்குடி - திருவாரூர் ரயில்... ஆமை வேகத்தில் செல்வதாகப் பயணிகள் புகார்!

காரைக்குடி டாக்டர் அழகப்பா நடையாளர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், ``இந்த ரயிலை மதுரைவரைக்கும் இயக்க வேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக்கழகம், பொதுநல அமைப்புகள் எல்லாம் சேர்ந்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரைச் சந்தித்து கோரிக்கையை மனுவாக்கக் கொடுத்திருக்கிறார்கள். டீசல் பிடிப்பதற்காகத்தான் இந்த ரயில் திருச்சி வருகிறதே தவிர, மற்றபடி நீங்கள் கேட்கும் கோரிக்கையை மதுரை கோட்ட மேலாளரிடம்தான் வைக்க வேண்டும் என்கிறார் திருச்சி டி.ஆர்.எம்.

காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை இந்த ரயில் இயக்கப்பட்டால், தொழில் வணிகர்கள் முதல் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயனடைவர். பேருந்தில் டிக்கெட் கூடுதலாக இருப்பதால், மக்கள் இந்த ரயிலைத்தான் பயன்படுத்துவார்கள். இந்த ரயிலுக்கான டீசலை, மானாமதுரை அல்லது மதுரையில்கூட நிரப்பிக்கொள்ளலாம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்கிறவர்களுக்கு இந்த ரயில் உதவியாக இருக்கும். ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி வழியாகச் செல்லும் அஜ்மீர், அயோத்தி ரயில்கள் காரைக்குடியில் நின்று செல்ல வேண்டும். தமிழகத்திலிருந்து காசிக்குப் போகும் தமிழகப் பக்தர்கள், காரைக்குடி நகரத்தார்கள் அங்கே கட்டியிருக்கும் மண்டபத்தில்தான் தங்குவார்கள். அந்த அளவிற்கு ஆன்மிகத்தோடு தொடர்புடையவர்கள் நகரத்தார்கள். அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காரைக்குடியில் அஜ்மீர், அயோத்தி போன்ற ரயில்கள் சில நிமிடங்கள் நின்றுபோக வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதுசம்பந்தமாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அடிப்படை வசதிகள் நிறைந்த ரயிலை இயக்க வேண்டும் என்று எங்கள் தொகுதி எம்.பி-யான கார்த்திக் சிதம்பரத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார்.

பயணிகளின் கோரிக்கை ஏற்கப்படுமா?