Published:Updated:

துடுப்பு படகில் பயணித்து ஆஸ்திரேலிய பெண் சாதனை!

Vikatan Correspondent
துடுப்பு படகில் பயணித்து ஆஸ்திரேலிய பெண் சாதனை!
துடுப்பு படகில் பயணித்து ஆஸ்திரேலிய பெண் சாதனை!

ராமேஸ்வரம்: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை துடுப்பு படகில் பயணித்து ஆஸ்திரேலிய பெண் சாதனை படைத்துள்ளார்.

துடுப்பு படகில் பயணித்து ஆஸ்திரேலிய பெண் சாதனை!

மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சேன்டி ரூப்சன். 43 வயதாகும் இவர் துடுப்பு படகு மூலம் பல்வேறு நாடுகளுக்கு தனியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். 10 அடி நீளம் கொண்ட பைபர் படகில் கடந்த 2011ல் ஜெர்மனியில் இருந்து தனது கடல் பயணத்தை துவக்கினார்.

படகில் உள்ள பெடல்கள் மற்றும் துடுப்பின் உதவியுடன் அரேபியன் கடல் வழியாக மும்பை, குஜராத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபத்தை அடைந்தார். மறுநாள் அங்கிருந்து வேதாரண்யம் சென்ற ரூப்சன் அங்கு தனது பயணத்தை தற்காலிகமாக முடித்து விட்டு அவரது நாட்டிற்கு சென்றார்.

துடுப்பு படகில் பயணித்து ஆஸ்திரேலிய பெண் சாதனை!

கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் வேதாரண்யம் வந்த ரூப்சன் அங்கிருந்து இலங்கைக்கு துடுப்பு படகு பயணத்தை துவக்கினார். இலங்கையில் உள்ள முக்கிய இடங்களுக்கு துடுப்பு படகில் சென்ற அவர் நேற்று முன் தினம் தலைமன்னார் துறைமுகத்தை அடைந்தார்.

தலைமன்னார் துறைமுகத்தில் இருந்து நேற்று (மே 1) காலை 6 மணிக்கு தனது பயணத்தை துவக்கிய ரூப்சன் நேற்று மாலை தனுஷ்கோடி கடற்கரையை வந்தடைந்தார். துணிச்சலுடன் தன்னந்தனியாக படகு பயணம் மேற்கு கொண்டு வரும் ரூப்சனை ரெட்புல் சாதனையாளர் நிறுவன நிர்வாகிகள் வரவேற்றனர்.

துணிச்சலுடனும், தனி ஒரு ஆளாகவும் துடுப்பு படகு பயணம் மேற்கொண்டு வரும் சேன்டி ரூப்சன் தனது சாகச பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘ஆஸ்திரேலியாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் எனக்கு வெளியிடங்களை சுற்றி பார்ப்பதிலும், சுற்று சூழல்களை அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம். இதன் காரணமாக நான் எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் படகை போன்ற ஒரு படகினில் இந்த உலகை வலம் வர நினைத்தேன்.

அதன்படி 2000 ஆம் ஆண்டில் என் படகு பயணத்தை துவக்கினேன். கடந்த 13 வருடங்களாக நான் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தின் மூலம் இதுவரை சுமார் 7,000 கி.மீ. தூரம் கடலில் பயணித்துள்ளேன். இந்த அனுபவத்தின் மூலமாக இந்தியாவின் மேற்கு கடல் பகுதியில் துடுப்பு படகின் மூலம் பயணித்த முதல் பெண்மணியாக சாதனை படைக்க முடிந்தது. எனது சாதனை பயணத்தில் அடுத்ததாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு துடுப்பு படகில் பயணம் செய்துவிட்டு வரும் 2016 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவேன்’’ என்றார்.

இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி