Published:Updated:

முதல் மெட்ரோ ரயிலில் பயணமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

முதல் மெட்ரோ ரயிலில் பயணமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
முதல் மெட்ரோ ரயிலில் பயணமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

முதல் மெட்ரோ ரயிலில் பயணமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

சென்னையில் இன்று கோயம்பேடு - ஆலந்தூர் இடையே சென்னையின் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில், தற்போது இன்று முதல் சென்னையிலும் துவங்கி உள்ளது. முதல்முறையாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணியாக இருந்தால் இந்த விஷயங்களை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

முதல் மெட்ரோ ரயிலில் பயணமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

1. மெட்ரோ ரயிலின் கதவுகள் தானியங்கி கதவுகள், அதில் வழக்கமாக எலெக்ட்ரிக் ரயில்களில் பயணிப்பது போல சாய்ந்து கொண்டோ அல்லது கதவை பிடித்துக் கொண்டோ பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. கதவுகள் ரயில் நிலையத்தில் திறந்தவுடன் நீங்கள் கீழே விழ நேரிடும். அதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

2. ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் 30-35 நொடிகள்தான் நிற்கும் என்பதால் ரயில்களுக்குள் ஏறும் அல்லது இறங்கும்போது கவனக்குறைவாக இருக்கக் கூடாது. ஏனெனில் கதவுகள் தானாக மூடும் என்பதால் அதிக கவனம் தேவை.

3. நீங்கள் 15 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள். அதுவும் 60 செ.மீ நீளம், 45 செமீ அகலம், 25 செமீ உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

4. டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியாது. மாதாந்திர சீசன் டிக்கெட் போன்ற கார்டுகளையோ அல்லது குறிப்பிட்ட பயணத்துக்கான டோக்கன் இருந்தால் மட்டுமே உங்களால் பயணிக்க முடியும். மேலும் ஒரு ரயில் நிலையத்துக்கு டோக்கன் பெற்று அதைவிட அதிக கட்டணமுள்ள மற்ற ரயில் நிலையத்தில் இறங்க முடியாது. அதனால் சரியான டோக்கன் மட்டுமே பயணத்துக்கான அனுமதியாக இருக்கும். மேலும் மெட்ரோ ரயிலில் பயணி சீட்டில்லா பயணத்துக்கு வாய்ப்பே இல்லை. 

5. ரயில்களின் உள்ளே புகை பிடிக்கவோ அல்லது மது அருந்தவோ கூடாது. அதுமட்டுமின்றி பயணிகளை துன்புறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சிறை மற்றும் அபராதம் உண்டு. மேலும் வளர்ப்பு பிராணிகளை அழைத்து செல்ல முடியாது.

மற்ற ஊர்களில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்ததுதான் என்றாலும், சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரயில், அதில் முதல் முறையாக பயணிக்க போகும் பயணிகள் இதனை மனதில் கொண்டு பயணித்தால் உங்கள் பயணம் இனிமையாகும்.

 -ச.ஸ்ரீராம்

அடுத்த கட்டுரைக்கு