Published:Updated:

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

 விஜய் புண்ணியகோட்டி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் புண்ணியகோட்டி

வாசகர் பயண அனுபவம்: இலங்கை

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

வாசகர் பயண அனுபவம்: இலங்கை

Published:Updated:
 விஜய் புண்ணியகோட்டி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் புண்ணியகோட்டி
பயணப் பிரியர்கள் உண்டு. விஜய் புண்ணியகோட்டி, ஒரு பயண வெறியர். வீக் எண்டில் காலையில் எழுந்ததும் டீ சாப்பிடவென்றே, தனது பைக்கில் பாண்டிச்சேரி வரை போய்விட்டு, வெறும் டீ மட்டும் சாப்பிட்டு வருபவர். லஞ்ச் சாப்பிடவென்றே ஆந்திராவுக்குப் போய் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு வருபவர். “கேட்குறதுக்குப் பைத்தியக்காரத்தனமா தெரியும். ஆனா, அந்த டிராவல்ல இருக்கிற சுகம் எனக்கு வேறெதிலும் கிடையாதுண்ணா!’’ என்கிறார் விஜய் புண்ணியகோட்டி.

ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டெல்லி, சிக்கிம், மேகாலயா, கல்கத்தா என்று இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்கவில்லை விஜய். ஏரியாக்களைப் பொருத்து, பட்ஜெட்டைப் பொருத்து பைக்கா, ரயிலா, விமானமா என்பது கடைசியில் முடிவு செய்யப்படும்.

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் விஜய்க்கு, சோலோ ரைடுதான் பிடிக்கும். அண்மையில் விஜய், தன்னந்தனியாக விமானம் மூலம் ஸ்ரீலங்கா வரை சென்று, யாழ்ப்பாணத்தில் வாடகை பைக் எடுத்து 6 நாட்கள் இலங்கை முழுதும் சுற்றிப் பார்த்து, தனது டிராவல் டைரியை நிரப்பியிருக்கிறார்.

“இலங்கைக்குப் போகணும்னு எப்படி ஐடியா வந்துச்சு!’’ என்றால், அதற்கும் ஒரு காமெடியான ஃப்ளாஷ்பேக் சொல்கிறார். “ஒரு தடவை ராமேஸ்வரத்துக்கு டூர் அடிச்சப்போ, தனுஷ்கோடியில் கோதண்டராமர் கோயிலுக்குப் போயிருந்தேன். அப்போ என் செல்போன் நெட்வொர்க் பார்த்தா, Welcome to Srilanka-னு வந்துச்சு. ஆஹா, Srilanka... உன்னை எப்படி மிஸ் பண்ணினேன்னு நெனைச்சு, ஒரு ப்ளான் போட்டேன். ஒரு நாள் நட்ட நடுராத்திரி இலங்கைக்கு ப்ளைட் ஏறிட்டேன்!’’ என்கிறார் அசால்ட்டாக.

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

அதற்கப்புறம் நடந்தவை எல்லாம் திகில், த்ரில், சுவாரஸ்யம், ஜாலி என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

“ஏர்போர்ட்லேயே ஏழரை ஆரம்பிச்சிடுச்சு. `இலங்கைக்குத் தனியா ஏன் போறீங்க? அதுவும் யாழ்ப்பாணம் டூரிஸ்ட் ஸ்பாட் இல்லையே’னு ஆரம்பிச்சு, இமிகிரேஷனில் எக்கச்சக்க விசாரிப்புகள். என்னோட பயண ஆர்வத்தைப் பார்த்துட்டு சீல் அடிச்சுக் குடுத்துட்டாங்க. நடு ராத்திரி 2.00 மணிக்கு கொழும்பு ஏர்போர்ட்டில் இறங்கினா, எங்கே போறது… என்ன பண்றதுனே தெரியலை. அப்புறம் அப்படியே இருட்டுக்குள்ள நடந்து போய், ஆட்டோவில் ஏறி, ஒரு ட்ரெயின் பிடிச்சு, 600 டிக்கெட் எடுத்து 300 ரூபாய் செகண்ட் க்ளாஸில் பயணம் செஞ்சு… யாழ்ப்பாணம் போய்… அங்க தங்க இடம் கிடைக்காம அலைஞ்சு, கஷ்டப்பட்டு ஒரு டார்மெட்டரியில் இடம் கிடைச்சு… ஆஸ்திரேலியாகாரங்க, சீனாகாரங்க கூட தங்கி…. இப்போ நெனைச்சாகூட செம த்ரில்லிங்கா இருக்கு!” என்று த்ரில்லிங் குறையாமல் தொடர்ந்தார்.

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

`யாழ்ப்பாணத்தில் மனுஷ நடமாட்டமே ரொம்பக் கம்மியா இருந்துச்சு. அங்கங்கே குண்டு விழுந்து இடிஞ்சு போன கட்டடமெல்லாம் நிறைய இருந்துச்சு! யாழ்ப்பாணம் டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா, யாழ்ப்பாணம் கோட்டை செமையா இருந்துச்சு. அப்புறம், ஏசியாவின் நம்பர் 1 பெரிய நூலகம்… யாழ்ப்பாணத்தில்தான் இருக்கு. யாழ்ப்பாணம் பசுமையான ஊர். நிறைய ஏரிகள் இருக்கு. எங்க வேணாலும் குளிக்கலாம். நல்லூர் முருகன் கோவிலுக்குப் போனேன். சந்தோஷம் என்னன்னா, ஏர்போர்ட்ல ஆரம்பிச்சு லைப்ரரி,கோயில் வரை எல்லாருமே கலப்படம் இல்லாத இனிமையான தமிழில் பேசுறாங்க!’’ என்று பூரிப்பாகச் சொன்னார் விஜய்.

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

முதல் இரண்டு நாட்கள் நடை நடையாய் நடந்து, பஸ் பிடித்து ஊர் சுற்றியவருக்கு, இடங்களை கவர் செய்ய முடியவில்லை. அப்போதுதான் டார்மெட்டரி ஓனர் ஓர் ஐடியா தந்திருக்கிறார். “இங்கே பைக், காரெல்லாம் வாடகைக்குக் கிடைக்கும் தம்பி.’’ என்று சொல்ல, சட்டென ஒரு டிவிஎஸ் என்டார்க் பைக்கை வாடகைக்கு புக் செய்துவிட்டார் விஜய். இங்கே ஒரு நாள் பைக் வாடகை 300 ரூபாய். அவர்கள் ஊர்க் காசுக்கு Refundable Deposit 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். பெட்ரோல் நமது செலவு.

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

“அது சரி; வெளிநாடுகளில் வாகனம் ஓட்ட, இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வேணுமே’’ என்றால், “என்கிட்ட கேட்டாங்க. நான் இல்லைனு சொன்னேன். பரவாயில்லைனு டூரிஸ்ட்தானேனு சொல்லி, 3,000 ரூபாய் டெபாஸிட் பணமும், பாஸ்போர்ட், லைசென்ஸ் காப்பியெல்லாம் வாங்கிட்டு ஸ்கூட்டர் தந்தாங்க! இங்கே ஹெல்மெட் போடலைன்னா 10,000 ரூபாய் அபராதம். செம அனுபவமா இருந்துச்சு! அப்புறமென்ன, ஒவ்வோர் இடமா பறக்க ஆரம்பிச்சுட்டேன்.’’ என்றார் விஜய்.

கண்டி, நுவாரா எலியா, சிவனொளிப் பாதமலை, அங்கங்கே ஏரிக் குளியல், தொல்பொருள் அருங்காட்சியகம், சங்கிலிய மன்னன் கோட்டை, பரந்து விரிந்த ஜமுனா ஏரி, சூரியக் கடிகாரம், திருகோண மலை, இயற்கை வெந்நீர் ஊற்று, முள்ளிவாய்க்கால், கொழும்பு மியூஸியம், ஜனாதிபதி மாளிகை என்று ஏகப்பட்ட இடங்களுக்கு ரவுண்டு அடித்திருக்கிறார்.

வாடகை ஸ்கூட்டரில் இலங்கையில் 6 நாள் டூர்!

“முள்ளிவாய்க்கால் போனேன். போர் நடந்ததுக்கான அடையாளமே தெரியலை. நல்ல பச்சைப் பசேல்னு வயக்காடா இருந்துச்சு. இவ்வளவு அழகான இடமா, ரத்த பூமியா ஆக்கினாங்கனு ஃபீலிங்கா இருந்துச்சு! திலீபன் நினைவகம் இருந்துச்சு. விடுதலைப் புலிகள்கிட்ட இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் வெச்சு மியூஸியம் இருக்குனு சொன்னாங்க. ஆனா மிலிட்டரி பாதுகாப்பு பயங்கரமா இருந்துச்சு. இலங்கைக்காரங்களுக்கு மட்டும்தான் அனுமதியாம். கசூரியா தீவில் மட்டும் மிலிட்டரி `ஏன் தனியா வந்திருக்க; பொடியங்க (நண்பர்கள்) எங்கே’னு என்னை சோதனை போட்டாங்க. கொஞ்சம் பயமா இருந்துச்சு. டூர்னு சொன்னதும் ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க!’’ என்றார் விஜய்.

பேசி முடித்த மறுநாள், “மனதைச் சுத்தமாக்கும் அழகு இலங்கைக்கு உண்டு! அடுத்த பயணத்துக்குக் காத்திருங்கள்’’ என்று ஃபேஸ்புக்கில் ஃபீலிங் ஸ்டோரி போட ஆரம்பித்து விட்டார் விஜய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism