Published:Updated:

இன்று முதல் சென்னை-அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்!

இன்று முதல் சென்னை-அரக்கோணம் இடையே, ரயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னை-அரக்கோணம் இடையேயான மின்சார ரயில் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே, மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த ரயில் சேவை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்தப் புதிய மாற்றத்தின்படி, மே 20 முதல் 25 வரையிலான ஐந்து நாள்களுக்கு, சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.45 மணிக்கு புறப்படும். அதேபோல சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில், அதிகாலை 1.20 மணிக்குப் புறப்படும். இந்த மாற்றங்களால் இந்தப் பாதையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடம்பத்தூர்- திருவாலங்காடு விரைவுப்பாதையில் இயக்கப்படும். திருவாலங்காடு ரயில்பாதையில்தான் ரயில்வேயின் பொறியியல் மேம்பாட்டுப் பணி நடைபெற்றுவருகிறது. அதனால், மின்சார ரயில்கள் ஐந்து நாள்களுக்குச் செஞ்சினம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும்.