Published:Updated:

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை... தவிர்க்கமுடியாத பயணங்களுக்கு ஒரு கைடு!

தவிர்க்கமுடியாத சூழலில் பயணம் செய்பவர்களுக்காக எந்தெந்த விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன, ஒரு நாட்டுக்குச் செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் என்ன செய்யவேண்டும், உள்நாட்டுப் பயணங்களில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா இந்த கேள்விகளுக்கான விடைகள் இங்கே....!

COVID-19 எனும் கொரோனா வைரஸ், வர்த்தக ரீதியாகப் பல உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விடுமுறைப் பயணங்கள் மட்டுமல்ல; வணிக ரீதியான பயணங்களும் தடைப்பட்டுப் பல பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பயண நிறுவனங்களான தாமஸ் கூக், எக்ஸ்பீடியா போன்றவற்றில் பல வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். கொரோனா முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்கிறது இந்திய அரசு.

பயணம்
பயணம்
`இயல்பு வாழ்க்கை'யோடு இணைந்த மாஸ்க்... கொரோனா `அலெர்ட்டில்' பெங்களூரு!

தவிர்க்கமுடியாத சூழலில் பயணம் செய்பவர்களுக்காக எந்தெந்த விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன, ஒரு நாட்டுக்குச் செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் என்ன செய்யவேண்டும், உள்நாட்டுப் பயணங்களில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா போன்ற பல சந்தேகங்களுக்குப் பதில்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

பயணம் செய்யத் தயார் என்றால், இதற்கும் தயாராக இருங்கள்!

 • மார்ச் 9 முதல் இத்தாலி மற்றும் தென்கொரியாவிலிருந்து வரும் அத்தனை பயணிகளும் கொரோனா வைரஸ் தனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமான டெஸ்ட் செய்து ஆதாரம் வைத்திருந்தால் மட்டுமே இந்தியாவுக்குள் வரமுடியும். 

 • கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் மிக முக்கியமான நாடுகளான 12 நாடுகள் இந்திய அரசின் பிளாக்லிஸ்ட்டில் உள்ளன. அவை சீனா, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபால் மற்றும் இந்தோனேசியா. இந்த 12 நாடுகளில் குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கான விசா சேவைத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரிக்குப் பிறகு இந்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளின் விசாவும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, சபரிமலை, ஷீர்டி கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கைகளும்!
 • இந்தியர், இந்தியர் அல்லாதவர் என இந்தியாவுக்குள் வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும், எந்தெந்த இடங்களுக்கு எப்போது சென்றுள்ளார்கள் என்ற 'ட்ராவல் ஹிஸ்டரி'யை விமான நிலையத்தில் இருக்கும் ஹெல்த் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளிடம் கட்டாயம் காட்டவேண்டும். 

 • பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ள 12 நாடுகளிலிருந்து வரும் இந்தியப் பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கிரீனிங் எனும் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த ஸ்கிரீனிங் ப்ராசஸ் இந்தியாவில் இருக்கும் 21 விமான நிலையங்களில் பின்பற்றப்படுகிறது.

 • பிப்ரவரி 5-ம் தேதிக்கு முன் சீனர்கள் வாங்கிய அனைத்து இந்திய விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக இந்தியா வருபவர்கள் மீண்டும் விசாவுக்கு அப்ளை செய்துதான் வரவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிராவல் இன்ஷூரன்ஸ்

 • அனைத்து இந்திய விமான நிறுவனங்களிலும் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இப்படியான விமான சேவைக்குச் செலுத்தப்பட்ட முழுத் தொகையையும் பயணிகளுக்குத் திரும்பக் கொடுத்துவருகிறார்கள். 

 • கோ-ஏர் நிறுவனம், தேவைப்பட்டால் முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அந்தத் தொகையில் வேறு ஏதாவது விமானத்தை புக் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 • சவுதி அரேபியாவுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதால் அங்கு பயணிப்பதாக இருந்த எமிரெட்ஸ் பயணிகள், அந்த நிறுவனத்தை அல்லது அவர்களுடைய டிராவல் ஏஜென்ட்டுகளைத் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று எமிரெட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு
 • டிக்கெட் அல்லாமல் தனியாக டிராவல் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்தத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

 • அதேபோல, டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு டிராவல் இன்ஷூரன்ஸ் பெற்று, நீங்கள் ஏதாவது கொரோனா பாதித்த நகரத்துக்குச் சென்றிருந்தால் உங்களுடைய டிராவல் இன்ஷூரன்ஸை இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 • அதுமட்டுமல்ல, நீங்கள் இந்தியாவில் எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீடு கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் செல்லுபடியாகும்.

சர்வதேச விமானங்கள் செயல்பாட்டில் உள்ளதா?

ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற இந்திய நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள்; எமிரெட்ஸ், லுஃப்தான்ஸா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள் எனச் சர்வதேச விமான சேவைகளை இரண்டாகப் பிரித்து எதில் எங்கே செல்லமுடியும் என்பதைப் பார்ப்போம்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

உள்நாட்டு நிறுவனங்களின் சர்வதேச விமானங்கள்

 • ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஹாங்காங், ஷாங்காய் போன்ற இடங்களுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள். இவை ஜூன் மாதம் மீண்டும் தொடரப்படும்.

 • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் டெல்லி-ஹாங்காங் விமானத்தை மார்ச் 28 வரை நிறுத்தியுள்ளது. 

 • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பேங்காக், சிங்கப்பூர் செல்லும் தனது 54 விமான சேவையையும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்துவிட்டது. 

 • சவுதி அரேபிய அரசு, அந்த நாட்டுக் குடியுரிமை இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், தாமனிருந்து சவுதி செல்லும் கோ-ஏர் விமானங்கள் தங்களது சேவையை முடக்கியுள்ளன. சவுதி அரசு தடையை நீக்கும் பட்சத்தில் இந்த விமானங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும். தாய்லாந்து செல்லும் விமானங்களையும் இந்த நிறுவனம் தரையிலேயே நிறுத்தியுள்ளது.

எமிரெட்ஸ் விமானம்
எமிரெட்ஸ் விமானம்

வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்கள்

 • இந்தியாவுக்கு வெளியே இயங்கும் முக்கியமான விமான நிறுவனங்கள் அத்தனையும் சீனா, கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துவிட்டன. சில நிறுவனங்கள் ஜப்பானுக்கும் செல்வதில்லை.

 • இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் லுஃப்தான்ஸா, KLM, யுனைட்டட் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

 • இந்தியாவிலிருந்து ஜப்பான் செல்லும் JAL நிறுவனத்தின் விமானத்தின் சேவை இன்னும் தொடர்கிறது.

 • இந்தியாவில் உள்நாட்டுப் பயணங்களுக்கு இதுவரை எந்தத் தடையும் விதிமுறையும் விதிக்கப்படவில்லை. அதனால், உள்நாட்டுப் பயணங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு