மேரல் யாஸர்லூ
மேரல் யாஸர்லூ

உலகை சோலோவாக பைக்கில் சுற்றி வந்த பெண்களில் மூன்றே மூன்று பேர்தான். அதில் ஒருவர் மேரல் யாஸர்லூ. அவரைத்தான் தற்போது டெல்லியில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் நடிகர் அஜித்.

ஈரானியப் பெண்ணான மேரல் யாஸர்லூ, அன்டார்டிகா முதற்கொண்டு 7 கண்டங்கள்; 64 நாடுகள்; 18 மாதங்கள் என்று தனி ஒருத்தியாக உலகை வலம் வந்த பெண்களில் முக்கியமானவர். கர்ப்பமானபோதும் பைக் ரைடிங்கை விடவில்லை அவர். ஈரானில் பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதே சட்டவிரோதம் என்கிற நிலையில்… அதற்காகப் போராடி… அனுமதி பெற்று… அவரின் இந்த உலகம் சுற்றிய சாதனை அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். பொதுவாகவே அஜித், ரைடர்களைத் தேடித் தேடிப் பிடித்து நட்பு வைப்பார். அப்படி மேரல் யாஸர்லூவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைத் தேடிக் கண்டிபிடித்து அவரைச் சந்தித்து நட்பு பாராட்டியிருக்கிறார் அஜித்.

ஏற்கெனவே இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா என்று பைக்கில் சுற்றியிருந்தாலும் – கூடிய விரைவில் உலகம் முழுதும் ஒரு ரவுண்டு அடிக்க இருக்கிறாராம் அஜித். அதற்கு மேரல்தான் அஜித்துக்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறார்.

அஜித், மேரல் யாஸர்லூ
அஜித், மேரல் யாஸர்லூ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு