Published:Updated:

டூர் செல்ல ரெடியா? - இந்தத் தகவல்கள் உங்களுக்கு உதவும்!

கடற்கரை சுற்றுலா
News
கடற்கரை சுற்றுலா ( pixabay )

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, எங்கே போகலாம்? எப்படிப் போகலாம்? பயணங்களில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழிகாட்ட ஆனந்த விகடன் ஓர் நிகழ்ச்சியை முன்னெடுத்தது.

பயணங்கள் யாருக்குத்தான் பிடிக்காது? குடும்பத்தினரோடு சுற்றுலா, நண்பர்களோடு ஜாலி ட்ரிப், தனிமை விரும்பிகளின் சோலோ ட்ராவல் என அவரவர்க்கு விருப்பமான ஒரு டூர் பிளான் எப்போதும் இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு விடுமுறை சமயம் என்றால் கேட்கவே வேண்டாம். சுற்றுலா தளங்கள் எல்லாம் எப்போதும் ஹவுஸ் ஃபுல்லாக தான் இருக்கும். அதற்கு 2020-ம் ஆண்டு தான் விதிவிலக்கு. கொரோனா ஊரடங்கால் மக்கள் சாதாரணமாக வீட்டை விட்டு வெளிவருவதே இயலாமல் போனது. ஆறு மாதங்கள் வீட்டுக்குள் அடைந்து இருந்து, பணிச்சூழல், நோய் பயம் என இறுக்கமான மனநிலையுடன் இருக்கும் பலருக்குப் பயணங்கள் புத்துணர்வு அளிக்கக் கூடும்.

சுற்றுலா
சுற்றுலா
மாதிரிப் படம்

லாக்டௌன் முடிந்து அன்லாக் செயல்முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுக்க சுற்றுலா தளங்கள் மீண்டும் பொதுமக்களின் மகிழ்விற்காகத் திறக்கப்படுகின்றன. சற்று ஜாக்கிரதையாக நாம் பயணிக்க வேண்டும் அவ்வளவே. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, எங்கே போகலாம்? எப்படிப் போகலாம்? பயணங்களில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழிகாட்ட ஆனந்த விகடன் ஓர் நிகழ்ச்சியை முன்னெடுத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனந்த விகடன் - தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் இணைந்து வழங்கும் "உலகம் சுற்றலாம் வாங்க" என்ற வெப்பினார் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக சுற்றுலாத் துறையின் ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் T.P. ராஜேஷ் IAS, ‘மதுரா டிராவல்ஸ்’ நிறுவனத்தின் அதிபரும் தமிழக சுற்றுலாப் பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவருமான கலைமாமணி வி.கே.டி.பாலன், 'மஹிந்திரா ஹாலிடேஸ்' நிறுவனத்தின் விற்பனை பிரிவு பிராந்திய தலைவர் விக்ரம் ஜெரார்ட் சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

உலகம் சுற்றலாம் வாங்க
உலகம் சுற்றலாம் வாங்க

முதலில் பேசிய T.P. ராஜேஷ் IAS அவர்கள், தமிழக சுற்றுலாத் துறை, சுற்றுலா மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்த இருக்கும் புதிய திட்டங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சுற்றுலா தளங்களோடு கூடுதலாகச் சிலவற்றை இனைத்து 250 சுற்றுலா தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டு அங்குப் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் சொகுசு கப்பல் பயணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற சந்தோஷமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். மேலும், சுற்றுலா வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பாக, எல்லா பட்ஜெட்டுகளிலும் டூர் பேக்கேஜூகள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய, 'மஹிந்திரா ஹாலிடேஸ்' நிறுவனத்தின் விக்ரம் ஜெரார்ட் சார்லஸ், இந்திய அளவில் சுற்றுலாத் துறை இனி முன்னேற்றம் காணும் என்றார். அரசின் வழிகாட்டுதல்களோடு தங்கும் விடுதிகள் சிறப்பான முறையில் பயணிகளின் வருகைக்காகத் தயாராகி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பயணிகளுக்கு மருத்துவ வசதிகள் உட்பட, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக, மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் சிறப்பு, சுற்றுலா செல்லும் இடத்தை தேர்வு செய்வது எப்படி, சுற்றுலாவின் பொது பொதுமக்கள் பொறுப்புடன் கடைப்பிடிக்கவேண்டிய அதிமுக்கியமான விஷயங்கள் என்ன என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும், சுற்றுலா விரும்பிகள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய பல முக்கிய விஷயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இவர்களின் உரையை முழுவதுமாக பார்த்து அறிந்துகொள்ள இந்த வீடியோ...

ஆனந்த விகடன் - தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் இணைந்து வழங்கும் "உலகம் சுற்றலாம் வாங்க" என்ற ஆன்லைன் நிகழ்ச்சி #WorldTourismDay | #AnandaVikatan | #UlagamSutralamVanga

Posted by Ananda Vikatan on Saturday, September 26, 2020