Published:Updated:

சவுக்கு மர நிழல், கடல் குளியல், கொண்டாட்ட உணவுகள்... அரியமான் கடற்கரையை மிஸ் பண்ணாதீங்க மதுரையன்ஸ்!

அரியமான் கடற்கரை
News
அரியமான் கடற்கரை

மதுரையிலிருந்து குறைந்த செலவில் சென்று வரக்கூடிய சிறந்த சுற்றுலா தலம் அரியமான் கடற்கரை.

'கோவா' படத்தில் "மதுரையில் பீச் இருக்கா" என சம்பத் கேட்க, "இருக்கு சார் வைகை பீச்... வளைஞ்சு வளைஞ்சு ஓடுமே" என்பார் பிரேம்ஜி. மதுரையில் பீச் இல்லை. ஆனால், மதுரைவாசிகள் கொஞ்ச தூரம் பயணித்தால் ஓர் அற்புதமான கடற்கரையில் கால் நனைத்துவிட்டு வரலாம்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தை கடந்த பின் 25 கி.மீ தூரத்தில் இடதுபுறமாகத் திரும்பினால், தென்னை, பனைமரங்கள் சூழ்ந்த வயல்பகுதி வரும். இடையே வளைந்து நெளிந்து செல்லும் கிராமச் சாலையில் பயணித்தால் சில நிமிடங்களில் சவுக்கு மரங்கள் அடர்ந்துள்ள பகுதிக்குள் நுழையலாம். அப்படியே அந்த இடம் கொடைக்கானல் மலைமீது வந்துவிட்டோமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும்.

அரியமான்
அரியமான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெருக்கமாக அமைந்திருக்கும் சவுக்கு மரங்களுக்குள் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிவிட்டு கடந்து சென்றால் வெள்ளை வெளேர் மணலுடன் நீண்டு கிடக்கிறது அரியமான் கடற்கரை. நீலக் கடலின் பேரழகை எந்தத் தடைகளும் இல்லாமல் அனுபவிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதுரைக்கு சுற்றுலா வருகிறவர்களோ அல்லது மதுரைக்காரர்களோ ஒருநாளுக்குள் சுற்றுலா செல்ல நினைக்கும் இடம் கொடைக்கானல் அல்லது இராமேஸ்வரம். 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். அதில் ஒரு முக்கியமான சுற்றுலா தலம்தான் அரியமான் கடற்கரை.

அரியமான் கடற்கரை சவுக்குமரங்கள்
அரியமான் கடற்கரை சவுக்குமரங்கள்

மதுரையிலிருந்து இராமேஸ்வரத்துக்கு சுற்றுலா செல்கிறவர்கள் பொதுவாக இராமநாதசுவாமி கோயில், ராமர் பாதம், ராமர் தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், கோதண்டராமர் கோயில், ஓலைக்குடா கடற்கரை, தனுஷ்கோடி கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு வருவார்கள். கூடவே பாம்பன் கடலின் மீது அமைக்கப்பட்டுள்ள சாலை பாலத்தின் பிரமாண்டத்தையும் அதன் கீழுள்ள ரயில்வே தூக்கு பாலத்தையும் வியப்புடன் பார்த்து விட்டு வருவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே பயணத்தில் அதே செலவில் அரியமான் கடற்கரையையும் அதன் அழகையும் ரசித்து விட்டு வரலாம்.

இராமநாதபுரத்துக்கும் இராமேஸ்வரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது அரியமான் கடற்கரை. பொதுப் பேருந்தில் வருகிறவர்கள் சுந்தரமுடையான் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் அரியமானுக்குச் செல்லலாம்.

அரியமான் தனியார் ரிசார்ட்
அரியமான் தனியார் ரிசார்ட்

அரியமான் கடற்கரைக்குள் நுழைய ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். பசியைத் தீர்க்க சின்னச்சின்ன கடைகள் இருக்கின்றன. சமையலுக்குத் தேவையான பொருட்களை மட்டும் கொடுத்தால் சமைத்து தருபவர்களும் இருக்கிறார்கள். சமையல் பொருள்களுடன் வந்து இங்கே கொண்டாட்ட சமையலில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள்.

சவுக்கு மரங்களைக் கடந்தால் வெண்ணெய் நிறத்தில் மணல் பரப்பு விரிந்து கிடக்கிறது. மணலில் சிறிது தூரம் நடந்து சென்றால் நம்மை வரவேற்கிறது வங்கக்கடல். கடலின் பிரமிப்பு நம்மை நீங்காது. கடலோரத்தில் தென்னை மரங்களை பார்த்து பழகியவர்களுக்கு சவுக்கு மரங்கள் ஆச்சர்யம் தரும்.

மீனவர்கள் கரைவலையில் மீன் பிடிக்கும் காட்சிகளை பார்க்கலாம். சிறிய நாட்டுப்படகுகளில் சென்றும் மீன் பிடிப்பார்கள். கடல் வழியாக கிழக்கே மண்டபம், பாம்பனுக்கும் மேற்கே தேவிப்பட்டினம், தொண்டி, மீமிசல், கோட்டைப்பட்டினம் என்று மீனவர்கள் செல்வார்கள்.

இக்கடற்கரையில் சுமாரான உயரத்தில் அலைகள் எழும் என்பதால், கவனமாகக் குளிக்க வேண்டும். நன்றாக குளித்து விட்டு கடற்கரை மணலில் அப்படியே படுக்கலாம். கடற்கரையின் நீளத்தையும் கடலின் அகலத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அலுக்கவே செய்யாது. போதும் போதுமென்ற அளவுக்கு கடலில் குளிக்கலாம்.

அரியமான் தனியார் பூங்கா
அரியமான் தனியார் பூங்கா

அதன் பின்பும் இன்னும் மகிழ்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால் அங்கு தனியார்கள் உருவாக்கியுள்ள பூங்காக்களில் செயற்கை நீரூற்றில் குளிக்கலாம். நீச்சல் குளங்களும் உள்ளன.

இங்கேயே தங்கியிருந்து இரவு நேர கடற்கரை அழகை அனுபவிக்க தனியார் ரிசார்டுகள் உள்ளது. பட்ஜெட்டுக்குள் கண்டு களித்து வர வேண்டுமென்றால் ஒரு நாள் போதும்.

தற்போது அரசு சுற்றுலாத்துறை, அரியமான் கடற்கரையை பிரபலப்படுத்தி வருகிறது. ஆனால், சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கே மட்டுமே அரியமான் சென்று வருவது சுலபமாக உள்ளது. அரசு பொதுப் போக்குவரத்தை இன்னமும் அதிகப்படுத்த வேண்டும்.

நல்ல உணவும், கடல் குளியலும் சவுக்கு மர நிழலும் அரியமான் கடற்கரை அனுபவத்தை மறக்க முடியாமல் செய்யும்.