Published:Updated:

Yercaud: குளுமையான `கோடை விழா'; மரகத ஏரி; சுவையான தேநீர்; ஏழைகளின் ஊட்டிக்கு ஒரு விசிட்!

மலர்கள் காட்சி

சுமார் 20 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை பயணிப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். கடைசியாக 20 வது கொண்டை ஊசி வளைவு அடையும்போது இருபுறங்களில் உள்ள தைல மரங்களின் வாசனை, மூச்சுக்காற்றை இழுத்து சுவாசிப்பதற்கே சுகமாக இருக்கும்.

Yercaud: குளுமையான `கோடை விழா'; மரகத ஏரி; சுவையான தேநீர்; ஏழைகளின் ஊட்டிக்கு ஒரு விசிட்!

சுமார் 20 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை பயணிப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். கடைசியாக 20 வது கொண்டை ஊசி வளைவு அடையும்போது இருபுறங்களில் உள்ள தைல மரங்களின் வாசனை, மூச்சுக்காற்றை இழுத்து சுவாசிப்பதற்கே சுகமாக இருக்கும்.

Published:Updated:
மலர்கள் காட்சி

சேலம், ஏற்காடு ஏழைகளின் ஊட்டியாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு வாசஸ்தலம். சுமார் 1515 மீ உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோடை விழா நடைபெறாமல் தடைப்பட்டுப்போனது. தற்போது கொரோனா தொற்று பின்னடைவு கண்டதால், இந்தாண்டு 45-வது கோடை விழா கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. இதில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் தாண்டி ஏற்காடு மலைகளில் விளைவிக்கக்கூடிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஏற்காடு
ஏற்காடு

எந்த மாதமும் இல்லாத காலச்சூழல் தற்போது மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. மெல்லிய காற்றுடன், மிதமான வெயில் அடித்து வருகிறது. மே 25-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஆகிய 8 நாட்களுக்கு நடைபெறக்கூடிய மலர் காட்சியினைக் கண்டுக்கழிக்கத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பத்துடன் வரத்தொடங்கியுள்ளனர். இக்கண்காட்சியில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

சேலத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏற்காட்டினை 30 கி.மீ மலைப்பயணம் செய்தால்தான் அடையமுடியும். இருசக்கர வாகனத்தில் மற்றும் அரசு பேருந்துகளில் செல்வோருக்கு சுங்கக் கட்டணம் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் கார்களிலோ அல்லது தனியார் பேருந்துகளிலோ சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோன்று பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் கவர்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை பயணிப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். கடைசியாக 20 வது கொண்டை ஊசி வளைவு அடையும்போது இருபுறங்களில் உள்ள தைல மரங்களின் வாசனை, மூச்சுக்காற்றை இழுத்து சுவாசிப்பதற்கே சுகமாக இருக்கும். இதெயெல்லாம் கடந்து வந்தால் தான் நாம் பார்த்து, ரசிக்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன.

Yercaud: குளுமையான `கோடை விழா'; மரகத ஏரி; சுவையான தேநீர்; ஏழைகளின் ஊட்டிக்கு ஒரு விசிட்!

மலைகளில் வெகுநேர பயணம் செய்து வந்திருக்கும் சுற்றுலாவாசிகள் ஒரு சூடான சுவையான காபி, டீ சாப்பிட வேண்டுமென்றால் ஏற்காடு மலையில் இயற்கை முறையில் விளைந்த தேயிலைக்களைக் கொண்டு தரத்திற்கு ஏற்றவிலையில் தேநீர் விற்கப்படுகிறது.

மலர்க்காட்சி
மலர்க்காட்சி

ஏற்காடு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை:

ஏற்காடு மலைகளில் உள்ள அதிசயங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் `மரகத ஏரி'. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் இயற்கையாக அமைந்த ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் அழகான நீருற்றும் அமைந்துள்ளது. மேலும் இதில் சுற்றுலாவாசிகள் படகு சவாரி செய்வதற்கான வசதிகளும் உள்ளது. ஏரியைச் சுற்றி அழகிய பூச்செடிகள் நிறைந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அண்ணா பூங்காவில் தான் தற்போது மலர்க்காட்சி நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் லேடீஸ் சீட் எனும் பகுதி உள்ளது. இங்கிருந்து தொலைநோக்கி இல்லாமலேயே சேலம் மாநகரையே காணலாம். மேலும் ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கிள்ளியூர் அருவி. ஏற்காட்டில் காணப்படும் அருவிகளுள் இதுவும் ஒன்று.

ஏற்காடு மலர்க்காட்சி
ஏற்காடு மலர்க்காட்சி

சாதாரண நாட்களைவிட மழைக்காலங்களில்தான் இந்த அருவியில் நீர்பெருக்கு என்பது அதிகமாகக் காணப்படும். அதனைத்தொடர்ந்து செல்லவேண்டிய முக்கிய பகுதிகளில் ஒன்று பகோடா பாயிண்ட் இரவு நேரங்களில் இங்கிருந்து பார்த்தால் சேலம் மாநகர் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிப்பதைக் காணலாம்.

மேலும் அங்கு பழங்கால ராமர் கோயில் ஒன்று உள்ளது. ஏற்காடு சென்றால் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. அடுத்ததாக மலையின் உச்சியில் அமையப்பெற்றுள்ள சேர்வராயன் கோயில் மிகவும் பிரதிக்ஷ்டை பெற்ற கோயில். மெல்லிய குகையில் கட்டப்பட்ட இக்கோயில் தேவி காவேரிக்கும், சேர்வராயன் கடவுளுக்காகவும் கட்டப்பட்டது. ஆக மக்களே! இந்த கோடைக்கு ஏற்காடுக்கு ஒரு ட்ரிப் அடிச்சுருங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism