Published:Updated:

நம்ம ஊரு வண்டியில்... நம்ம நாட்டு எல்லை வரை!

வாசகர் பயண அனுபவம்: லடாக்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் பயண அனுபவம்: லடாக்

வாசகர் பயண அனுபவம்: லடாக்

நம்ம ஊரு வண்டியில்... நம்ம நாட்டு எல்லை வரை!

வாசகர் பயண அனுபவம்: லடாக்

Published:Updated:
வாசகர் பயண அனுபவம்: லடாக்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் பயண அனுபவம்: லடாக்
நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!

லடாக்குக்கு எவ்ளோ பட்ஜெட்?

பெட்ரோல் செலவு: ரூ.22,000

உணவு மற்றும் தங்கும் செலவு: ரூ.15,000

(சில இடங்களில் நாங்களே சமைத்து, டென்ட் அடித்துத் தங்கினோம்.)

இதரச் செலவுகள்: ரூ.5,000

மொத்தத்தில் கன்னியாகுமரியில் இருந்து லடாக் செல்ல… எனக்கு சுமார் 55,000 ரூபாய் ஆனது.

நீங்கள் ஒரு பயணப் பிரியர் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஜெய் முனியைத் தெரிந்திருக்கும். ‘பொசுக் பொசுக்’ என டிராவல் வீடியோக்கள் இவரது சேனலில் வந்து விழுந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு தடவை இவரது சேனலில் லடாக் போய் வந்த அனுபவத்தைப் பதிவு செய்திருந்தார். செம இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது!

‘நான்கூட என்னோட புல்லட்டில் போயிட்டு வந்தேனே… இதிலென்ன பிரமாதம்’ என்று மைண்ட் வாய்ஸில் திங்க் பண்ணுவ தற்குள்… ஒரு நிமிடம். இவர் லடாக் போய்விட்டு வந்தது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்… அதாவது நம்ம ஊரு வண்டியில்.

XL மொபெட்டில்… ஆஃப்ரோடு செய்வது… பனி ஏரியாக்களில் விளையாடுவது… ஏதோ ஒரு ஹார்லி டேவிட்சனுக்குப் பக்கத்தில் தனது மொபெட்டை நிறுத்தி சர்காஸம் செய்வது… என்று மனிதர் நிஜமாகவே இன்ட்ரஸ்ட்டிங்கான கேரக்டராக இருக்கிறார். நண்பர்களுடன் லடாக் சென்று வந்த அனுபவம் பற்றியும், எக்ஸ்எல் பற்றியும் பேசினேன் அவரிடம்.

‘‘வில்லிபுத்தூர் மல்லி கிராமம்தான் என் ஊரு. சின்ன வயசுல அறிமுகமான டூ–வீலர்னா அது நொங்கு வண்டிதான். அதுதான் என் முதல் ரைடிங் அனுபவம். காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூல தமிழ்நாட்டில் யுரேகா போர்ப்ஸ்; சுந்தரம் ஹோண்டா, பிஎம்டபிள்யூ, அப்புறம் ஓமன் நாட்டில் ஒரு 6 வருஷம்… இதாங்க என்னோட வேலை அனுபவம்.

திடீர்னு ஒரு ஸ்பார்க். யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். டிராவல் பண்ணலாம்னு ஆசை. யாரும் பைக் தர ரெடியா இல்லை. என் கார் சாவியை அடமானம் வெச்சுட்டு, ஒரு பைக்கை எடுத்துட்டுப் போய் ரிவ்யூ பண்ணினேன். இதுதான் முதல் அனுபவம்!’’ என்று தான் சேனல் ஆரம்பித்த கதையைச் சொன்னார்.

நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!
நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!
நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!

‘‘லடாக்குக்கு… டிவிஎஸ் எக்ஸ்எல்லில் எப்படி இந்த ஐடியா வந்துச்சு?’’ என்றேன்.

‘‘2020 ஊரடங்கு காலகட்டத்தில் யூ டியூப் வழியாகத்தான் எனக்கு லடாக் அறிமுகம். அதற்கு முன் எனக்குத் தெரிந்து இந்தியாவில் வடக்கு எல்லையில் இருப்பது காஷ்மீர் மட்டும்தான். ஒரு தடவை லடாக் போயிட்டு வந்து ரிவ்யூ பண்ணினேன். பலர் கமென்ட்களில், ‘அண்ணா, எங்களிடம் 350cc எல்லாம் இல்லை; 110cc வண்டிதான் இருக்கு… நாங்கல்லாம் எப்படிப் போறது’ என்று கேட்டிருந்தார். அவர்களுக்குப் பதில் சொல்லத்தான் டிவிஎஸ் எக்ஸ்எல்லில் கிளம்பி விட்டேன்.

இதில் ரொம்பச் சிக்கல்கள் உண்டு. 50 கிமீ–க்கு மேல் வேகம் போக முடியாது; ஹெட்லைட் சுமாராகத்தான் இருக்கும். (கொஞ்சம் ஆல்டர் செய்து கொண்டேன்); அடிக்கடி பெட்ரோல் நிரப்பணும்; லக்கேஜ் பாரம் தாங்காது.

கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பிப்பதாகத் திட்டம். ஊரிலிருந்து கன்னியாகுமரி வரை XL–ல்தான் போனேன். போகும் வழியிலேயே சிறிது தடுமாற்றம். பின்புறம் லக்கேஜ் பாரம் தாங்காமல் வண்டி தடுமாறியது. சில வளைவுகளில் சிரமமாக இருந்தது. ‘இங்கேயே இப்படின்னா… லடாக்ல எப்படியோ’ என்று பயமாகத்தான் இருந்தது. ஆனால், வெறியாக இருந்தேன்.

மலைமீது ஏறும்போது, லக்கேஜைக் குறைத்துக் கொண்டேன். சில இடங்களில் Fi இன்ஜின் திணறினாலும், பல இடங்களில் ஒரு குட்டி ராட்சஸனாகச் செயல்பட்டது. 5,000 அடி உயரத்தில் உள்ள ‘கார்துங்லா பாஸ்’ எனும் இடத்தில், எனது XL உடன் செல்ஃபி எடுத்தபோது… அடடா! அவ்ளோ உற்சாகம்!’’ என்றார்.

‘‘பயண அனுபவம் பற்றிச் சொல்லுங்க பாஸ்!’’ என்றேன்.

‘‘நார்த் இந்தியா என்றாலே மோசம்; மக்கள் ஒரு மாதிரி என்று பயமுறுத்துவார்கள். ஆனால், அப்படி இல்லை. ஒரு முறை மேற்கு வங்காளத்தில் ஓர் உணவகத்தில் அந்த உரிமையாளர் எங்கள் பயணத்தைப் பற்றி விசாரித்துவிட்டு, ‘காசு வேண்டாம்’னு சொல்லி எங்களை நெகிழ வைத்தார். திரும்பி வரும்போதும் காசு வேண்டாமென்று சொன்னார். நாங்கள்தான் அவரை வற்புறுத்தி பில்லை செட்டில் செய்தோம்.

ஒரு தடவை மணிப்பூரில், முடி வெட்டணும்னு நள்ளிரவில் ஒரு ஏரியாக்குள் போய்ட்டேன். அங்க திடீர்னு ஒருத்தர் பின்னாடி வந்து என்னை ஒரு சந்துக்குள்ள இழுத்துட்டுப் போனார். நான் பயந்துட்டேன். ‘‘உன்னைப் பார்த்தா இந்த ஊர்க்காரன் மாதிரி இல்ல. இப்போ எதுக்கு இங்க வந்தே?’’ என்றார். நான் விஷயத்தைச் சொல்ல, அவர் தலையில் அடித்துக் கொண்டு, அவர் கடைக்கே கூட்டிட்டுப் போய், பூட்டிய கடையைத் திறந்து எனக்குச் சவரம் செய்தார். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் எனக்கு பகீர் என்றது. ‘தம்பி இது மோசமான ஏரியா. உள்ளூர்க்காரனே இந்த நேரத்துக்கு வரமாட்டான். சில கும்பல் ஆட்களைத் தூக்கிட்டுப் போய் அடிச்சு, அவங்ககிட்ட இருக்குறதெல்லாம் புடுங்கிருவாங்க’’ என்றார். அவரே எனக்குத் துணைக்கு வந்து என் விடுதிக்குள் விட்டுச் சென்றார்.

நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!

அதேபோல், நாகலாந்தில் நள்ளிரவு வழி மாறிச் சென்று விட்டோம். அப்போது, அருகில் ஒரு பாலத்தில் சிலர் இருப்பதைக் கண்டு விவரம் கேட்டோம். அனைவரும் நல்ல போதை. ‘நாங்கள் உதவுகிறோம்’ என்று எங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள். ‘ஆஹா.. சிறிது தூரம் சென்றதும் ஆள் வெச்சு அடிச்சு எல்லாத்தையும் புடுங்கிட்டுப் போகப் போறானுங்க’ன்னு பயந்தேன்.

ஆனால், அவர்கள் தங்களுடைய லாரி ஆபிஸ் அழைத்துச் சென்று, தங்க இடம் – உணவு எல்லாம் கொடுத்து உபசரித்தனர். அன்று கிறிஸ்துமஸ் நாள்.. அதனால் அவர்கள் கொண்டாட மூடில் இருந்திருக் கிறார்கள். மறுநாள் காலையும் உணவோடு உபசரித்து எங்களை வழியனுப்பினார்கள்.

இருந்தாலும், சில கசப்பான அனுபவமும் உண்டு. அதுவும் நம் இந்தியன் ரயில்வேயில். நாங்கள் எங்கள் பயணத்தை முடித்துவிட்டு, எங்கள் வாகனங்களை ரயிலில் பார்சல் போட்டுவிட்டோம். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. ரயிலில் வண்டியை ஏற்ற முடியாது என்று மிரட்டுகின்றனர். நம் அவசரத்தைப் பயன்படுத்தி ஐநூறு ஆயிரம் கேட்கிறார்கள். பயணத்தில் கடைசியாக இருக்கும் சொற்ப பணத்தையும் பிடுங்கி விடுகிறார்கள். மற்றபடி இந்த லடாக் அனுபவம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது! நம்மிடம் பெரிதாக ஏதும் இல்லையே என்றிருப்பதைவிட, இருப்பதைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் நமக்கு வெற்றி நிச்சயம்தான் என்பதை இந்தப் பயணம் கற்றுக் கொடுத்தது. சீக்கிரம் அடுத்த ட்ரிப்பில் சந்திப்போம்!’’ என்றார் மகிழ்ச்சியுடன் ஜெய் முனி.

நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!

பெரிய ரோடு ட்ரிப் போறீங்களா…

ஜெய்முனியின் டிப்ஸ்!

பெரிய ட்ரிப் என்றால், 3 மாதங்களுக்கு முன்பிருந்தே யோகா, உடற்பயிற்சினு ஆரம்பிச்சுடுங்க. இது மனசுக்கும் உடம்புக்கும் ரொம்ப நல்லது.

ஹெட்மெல்ட், ரைடிங் ஜாக்கெட், ஷூ எல்லாம் அவசியம். முக்கியமாக, க்ளோவ்ஸ் அவசியம்.

குளிரைத் தாங்குவதற்கு உங்கள் உடலை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து தம் அடிப்பவர்களுக்கு மூச்சுப் பிரச்னை ஏற்படலாம்.

வண்டியின் ஆவணங்கள் பக்காவாக இருக்க வேண்டும். ராணுவம், போலீஸ் சோதனை என்று வரும்போது, இது ஒழுங்காக இல்லாதபட்சத்தில், பயணத்துக்கே பெரிய சிக்கலாகி விடும்.

நாம் பயணம் போகும் இடங்கள் பற்றிய விஷயங்களை கூகுளில் சர்ச் செய்து – கலவரம், மழை பற்றித் தெரிந்து கொண்டால் நல்லது.

செலவுக்குக் கொண்டு போகும் பணத்தை, ரெண்டு வங்கிக் கணக்குல பிரிச்சுப் போட்டு வச்சுக்கறது நல்லது.

பெரிய ட்ரிப் போகும்போது, நம் வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி விடுங்கள் ப்ளீஸ்! அவர்களுக்கும் நிம்மதி; நமக்கும் அடுத்த பயணத்துக்கும் சம்மதம் கிடைக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நம்ம ஊரு வண்டியில்... 
நம்ம நாட்டு எல்லை வரை!

இதையும் கவனிங்க!

வண்டியின் ஸ்பார்க் பிளக், க்ளட்ச் கேபிள், பிரேக் பேடு போன்ற உதிரி பாகங்கள், கொஞ்சம் போல பெட்ரோல் போன்ற விஷயங்களைக் கையில் வைத்துக் கொள்வது நல்லது.

வாகனம் உங்கள் பெயரில் இருப்பது நல்லது. ஒருவேளை யாரிடமாவது இரவலாக வாங்கியிருந்தால், அந்த வாகனத்தை உங்கள் பெயரில் தற்காலிகமாக மாற்றிக் கொள்வது நல்லது. இது பல சட்டப் பிரச்சனைகளைத் தவிர்க்கும்.

50 கிமீ–க்கு ஒருமுறை வண்டிக்கு ஓய்வு கொடுங்கள். சில அடிப்படையான பழுது பார்க்கும் முறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. குறைந்தபட்சம் பஞ்சர் போடவாவது கற்றுக் கொள்ளுங்கள். பஞ்சர் கிட், டூல்ஸ் அவசியம்.

மாலை 6 மணிக்கு மேல் பயணிப்பதைத் தவிர்க்கவும். ஒருவேளை டென்ட் அமைப்பதாக இருந்தால், நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கேட்டு அமைத்துக் கொள்ளலாம். அங்குதான் CCTV, கழிவறை, பாதுகாப்பு இருக்கும். விடுதிகளில் தங்குவதென்றால், நகரத்தின் உள்ளே சென்று தேடுங்கள். நல்ல விலையில், நல்ல ரூம் கிடைக்கும்.