Published:Updated:

கோவை சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதி! செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. முக்கியமாக, தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காரமடை வனச்சரகத்தில் உள்ள பூச்சமரத்தூர் மற்றும் போலாம்பட்டி வனச்சரகத்தில் உள்ள கோவை குற்றாலம் ஆகிய சூழல் சுற்றுலா பகுதிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்
கேரள மாணவர்கள் தினசரி வந்து செல்வதற்குத் தடை!-கோவை மாவட்டத்துக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு 50 சதவிகித எண்ணிக்கையில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி பூச்சமரத்தூர் பகுதியில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில், விடுதிக்கு 4 நபர்கள் வீதம் ஒரு நாளுக்கு மொத்தம் 12 நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு 94899 68481 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்லலாம். அதேபோல கோவை குற்றாலம் பகுதிக்கு 78260 70883 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலா பயணிகள் அனுமதி
சுற்றுலா பயணிகள் அனுமதி
காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை 150 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த சுற்றுலா பகுதிகள் செயல்படாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் பரிசோதனை முடிவு, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் காண்பிக்க வேண்டும். 'ஆரோக்கிய சேது' செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். 2 மீட்டர் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்

மேலும் விபரங்களுக்கு http://coimbatorewilderness.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். நேற்று மட்டும் 246 பெரியவர்கள், 13 குழந்தைகள் என்று மொத்தம் 159 பேர் கோவை குற்றாலத்துக்குச் சென்றுள்ளனர்.

அதேபோல ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப், வால்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வால்பாறையில் உள்ள பூச்சோலை காட்சிமுனை, நீராறு அணை, சின்ன கல்லாறு நீர் வீழ்ச்சி, ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். யானை சவாரி செய்வதற்கு தடை நீடிக்கிறது. கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து 50 சதவிகிதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆனைமலை புலிகள் காப்பகம்

ஆனைமலை புலிகள் காப்பகம் சுற்றுலா தொடர்பாக, மக்கள் கடைபிடிக்க வேண்டிய 30 விதிகளை வெளியிட்டுள்ளனர். விதிகளை மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் விபரங்களுக்கு https://atrpollachi.com/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு