Published:Updated:

பேருந்துப் பயணங்கள் இன்றும் அன்றும்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

நீண்டதூர பேருந்துப் பயணங்களில் நம்மோடு டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர் நம் இசைஞானி இளையராஜா.

பேருந்துப் பயணங்கள் மிக அலாதியானவை. அதுவும் மழை நேர ஜன்னலோர பயணங்கள் மனதுக்கு மிக நெருக்கமானவை. அப்பயணங்கள் நம் பால்யத்தை நினைவுபடுத்தும். கல்லூரி படிப்பு முழுவதும் பேருந்தில் பயணம் செய்தே முடித்திருந்தேன். பெரும்பாலும் தனியார் பேருந்துகள்தான். நேரம் தவறாமை, குறைந்த கட்டணம் (ரெகுலராகப் பயணிப்பவர்களுக்குக் கணிசமான அளவில் சலுகை உண்டு) போன்றவை சில காரணங்கள். அப்பேருந்துகள் கல்லூரி வாகனம்போல களைகட்டும். நண்பர்களைப்போல் பழகும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், லேட்டஸ்ட் பாடல்கள் என அதகளம் செய்வோம்.

Representational Image
Representational Image

நீண்ட தூரம் பேருந்துப் பயணங்களில் நம்மோடு டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர் நம் இசைஞானி இளையராஜா. எல்லா பேருந்துகளுக்கும் இது பொருந்தாது. சில பேருந்துகளில் சவுண்ட் சிஸ்டம் சரியாக இருக்காது. பாடலை ஹை பிட்சில் அலற விடுவார்கள்.

ரயில் பயணங்களைப்போல சில இன்ஸ்டன்ட் நட்புகள் பேருந்து பயணங்களில் மிக அரிது. அதற்கு ரயில்களில் உள்ள இருக்கை அமைப்பு காரணமாக இருக்கக் கூடும். ஒருவர் முதுகை ஒருவர் பார்த்து பயணிக்கும் பேருந்து பயணங்களில் இது சாத்தியமில்லை. அதுவும் இப்போது வரும் பேருந்துகளில் உள்ள மூன்று பேர் இருக்கைகளில் இரண்டேமுக்கால் ஆட்கள்தான் வசதியாக உட்காரமுடிகிறது.

நெருக்கியடித்து பயணிக்கும் பயணங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்திருப்பவர் கடுகடுத்துக்கொண்டு ஜன்னலோர சீட்டுக்காரரை, `கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தா என்ன?' என்பதுபோல் பார்க்கையில் கைகலப்பு ஏதும் நிகழாமல் இருந்தால் போதும் என்று தோன்றும். இதில் பேருந்து சிநேகிதம் எங்கிருந்து வாய்க்கும்?

ரயில்களைப்போல பேருந்துகள் அவ்வளவு அசுத்தமில்லை. அரசு பேருந்துகளைவிட தனியார் பேருந்துகள் மிக சுத்தம். இப்போது ஸ்லீப்பர் வசதியோடு ஏ.சி.பேருந்துகள் பயணத்தை சுகமாகவும் எளிதாகவும் ஆக்குகின்றன. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு அவசர பேருந்துப் பயணம்.

Representational Image
Representational Image

ஒரு வேலையாகத் திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. பாண்டிச்சேரியிலிருந்து திருவண்ணாமலை போகும் அரசுப் பேருந்தில் ஜன்னலோர சீட்டைப் பிடித்து அமர்ந்தேன். டவுன் பஸ்ஸுக்கும் நெடுந்தொலைவு போகும் பஸ்ஸுக்கும் வெளியே அடிக்கப்பட்டிருக்கும் நிறத்தைத் தவிர ஒரு வித்தியாசமும் இல்லை என்பதுபோல் இருந்தது.

ஒழுங்கற்ற, பழுதான இருக்கைகள், குவிந்து தொங்கும் மேற்கூரைகள், 30 கி.மீ வேகத்துக்கே பெருத்த இரைச்சலோடு கதறும் அதே பேருந்துகள்தான், பல வருடங்களாக. பெரிய முன்னேற்றம் இல்லை. அரசுப் பேருந்து ஒன்றில் மழையின்போது உள்ளே குடை பிடித்து பயணித்த பழைய ஞாபகம் வந்துபோனது.

Representational Image
Representational Image

தனியார் பேருந்துகள் தரும் பயண அனுபவத்தை அரசுப் பேருந்துகள் தருவதில்லையெனில், வசூலாகும் பணம் எங்கு, யாருக்கு செல்கிறது? மனம் நொந்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன். 10-க்கும் மேற்பட்ட வழிமுறைகளில் நம்மிடமிருந்து வரி வசூலிக்கப்படுகிறது. சாமானியனுக்கு துளி நன்மை இல்லை. அரசுப் பேருந்து பயண அனுபவம் ஒரு சோறு பதம்.

நம் ஊரில் பெரும்பாலான அரசுப் பேருந்துகளை ஒரு வரியில் இப்படிச் சொல்லலாம் - ``வெயில் காலத்தில் ஜன்னல்களை திறக்க முடியாது; குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஜன்னல்களே இருக்காது.’’

Representational Image
Representational Image

புதிதாக அரசுப் பேருந்துகள் இயங்குவதைப் பார்க்க முடிகிறது. புத்தம் புது பொலிவுடன் கம்பீரமாகச் சாலையில் பயணிக்கின்றன. பழைய பேருந்துகள் அனைத்தும் இப்படி மாறினால் என்னைப் போன்ற சாமானியர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி!

- எஸ்.கீர்த்திவர்மன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு