கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!

வித்யாநஞ்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யாநஞ்சன்

அட்டைப் பூச்சி... தனியார் அருவி... குறிஞ்சிப்பூக்கள்... சின்னத்திரை செலிபிரிட்டி டிராவல் அனுபவம்!

``பனிப்பொழிவுக்கிடையே மலை உச்சியில் என் கணவரின் கரம் பற்றி தனியா ஒரு டென்ட்டில் இந்த உலகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்!’' என தன் டிராவல் அனுபவம் குறித்துப் பேசத் தொடங்கினார், வித்யாநஞ்சன். இவர் தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `சத்யா' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கணவர் அர்ஜூனன் கார்த்திக். டிராவல் பிரியர்களான இவர்கள் புதுப்புது இடங்களைத் தேடி, அதை ரசித்து வாழ்க்கையைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

``நாங்க எப்பவும் ப்ளான் பண்ணி எல்லாம் டிராவல் பண்ணமாட்டோம். முக்கியமான டூரிஸ்ட் இடங்களுக்கெல்லாம் போக மாட்டோம். அதேமாதிரி, அதிக அளவில் பட்ஜெட்டும் செலவழிக்க மாட்டோம். ஒரு ஸ்பாட் எடுத்துக்கிட்டா அதில் யாருக்கும் தெரியாத சில அட்டகாசமான இடங்கள் எல்லாம் இருக்கும். அந்த இடங்களைத் தேடிக் கண்டுபிடிச்சுப் பார்த்து ரசிச்சுட்டு வருவோம். அதே மாதிரி, எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என் கணவர் சில இடங்களுக்கு என்னைக் கூட்டிட்டுப் போவார். அவருக்கு நான் சர்ப்ரைஸ் பண்ணணும்னு நினைச்சாலும் இதே வழிதான்!

பொதுவா நாங்க டிராவல் பண்ணும்போது, பெரும்பாலும் காரிலேயே டிராவல் பண்ண முடிவெடுப்போம். ரயில், விமானம் பயன்படுத்திப் போனோம்னா நம்ம ஊருக்கும், நாம போகிற ஊருக்கும் இடைப்பட்ட நல்ல இடங்களைக்கூட நாம பார்க்க முடியாம மிஸ் பண்ண வேண்டியிருக்கும். இதுவே, ரோடு வழியா டிராவல் பண்ணும்போது பல புதுப்புது விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ண முடியும். அதெல்லாம் வேற லெவல் ஃபீல்ங்க!

சமீபத்தில் கூர்க் போயிருந்தோம். என்னோட பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக என் கணவர் கூட்டிட்டுப் போயிருந்தார். போகிற வழியில் மடிக்கேரியில் டென்ட் அடிச்சு ஸ்டே பண்ணியிருந்தோம். டென்ட் ஸ்டே பொறுத்தவரை அங்கேயே தனித்தனி வகையில் டென்ட் வெச்சிருப்பாங்க. நான்கு பேருக்கு ஏத்த மாதிரியான டென்ட், பத்து பேர் போனா அவங்களுக்கு ஏத்த டென்ட்னு பல வகைகள் இருக்கும். மலை உச்சியில் அந்த இடத்தில் அவ்வளவு அமைதியான சூழலில் நானும் என் கணவரும் மட்டும் இருந்தது செம அனுபவமா இருந்துச்சு.

மடிக்கேரி டு மங்களூர் போகிற வழியில் ட்ரெக்கிங்கிற்கான ஓர் இடம் இருக்கு. அங்கே ட்ரெக்கிங் போயிருந்தோம். அதுக்கு முன்னாடி நான் மலையெல்லாம் ஏறினதில்லை. என் கணவருக்காக ட்ரெக்கிங் வரச் சம்மதிச்சேன். அங்கேதான் புது நண்பர்கள் கிடைச்சாங்க. அவங்ககிட்ட ஜாலியா பேசிட்டே நடக்க ஆரம்பிச்சோம். வழி காட்டுவதற்காக அந்த மலை பற்றி நல்லா தெரிஞ்சவங்க எங்ககூட வந்தாங்க. அவங்க காட்டின வழியில் நடந்தோம். அங்கே நிறைய அட்டைப்பூச்சி இருந்துச்சு. அட்டைப் பூச்சின்னா எனக்கு ரொம்ப பயம். லெமனைக் காலில் தேய்ச்சிட்டு நடந்தோம்னா அட்டை காலில் ஒட்டாம வழுக்கி விழுந்திடும். இதுவே அந்த ட்ரெக்கிங்லதான் தெரிஞ்சுகிட்டேன். அதேமாதிரி, ஒருத்தர் டெட்டால் கையில் வெச்சி இருந்தார். அதைத் தேய்த்ததும் அந்த வாடைக்கும் அட்டை காலில் ஏறலை. அவர்கிட்ட பிரசாதம் மாதிரி டெட்டால் வாங்கி எல்லாரும் தடவிக்கிட்டு நடந்தோம். அந்த ட்ரெக்கிங் அனுபவம் அவ்வளவு சூப்பரா இருந்துச்சு.

குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!
குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!
குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!

அங்கே ஒரு தனியார் நீர்வீழ்ச்சியும் இருந்துச்சு. அது மட்டுமில்லாமல், அந்த மலையில் 7, 8 வருஷத்துக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சிப்பூ இருந்தது. குறிஞ்சிப்பூவிலேயே பல வெரைட்டி இருக்குங்குற விஷயமும் அப்போதான் எனக்குத் தெரிஞ்சது. எல்லாரும் கண்டிப்பா போய் பார்க்க வேண்டிய இடம். என் கணவருக்கு டிரைவிங் பிடிக்கும். டிரைவிங் பிரியர்களா இருந்தீங்கன்னா நீங்களும் மிஸ் பண்ணாம அந்த இடங்களுக்குப் போய் பாருங்க!

மூன்று நாள் ட்ரிப் ப்ளான் பண்ணிட்டுப் போனோம். ஆனா, அங்கேயே ஐந்து நாட்கள் ஆகிடுச்சு. வழியில் இந்த இடங்களை எக்ஸ்ப்ளோர் பண்ணினதால கூர்க் போய்ட்டு எங்கேயும் சுற்றிப் பார்க்கலை. காரில் டிராவல் பண்ணினதால ரெஸ்ட் எடுக்கிற இடமா மட்டும்தான் கூர்க்கைப் பயன்படுத்திக்கிட்டோம். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடி சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிட்டோம்.

என்னோட கணவர் இன்ஸ்டாகிராமில் நிறைய புதுப்புது இடங்களைப் பற்றித் தேடித் தேடித் தெரிஞ்சுப்பார். அதேமாதிரி, டிராவலில் சந்திக்கிற நண்பர்கள் சில புது இடங்களை அறிமுகப்படுத்துவாங்க. ரோட்டுல டிராவல் பண்ணும்போது அந்ததந்த ஊர் மக்கள்கிட்ட பேசினோம்னா அவங்களே அவங்க ஊர்ல கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி நம்மகிட்ட ஷேர் பண்ணிப்பாங்க. அப்படி தேடித் தேடி தான் நாங்க இடங்களை எக்ஸ்ப்ளோர் பண்றோம். டிராவல் ஏஜென்சி மூலமா டிராவல் பண்றதோ, ஏற்கனவே டூரிஸ்ட் ஸ்பார்ட்னு எல்லாரும் பார்த்துட்டு வர்ற இடங்களுக்கோ நாங்க போக மாட்டோம். அந்த இடங்கள் குறித்தெல்லாம் நாம அங்க போகிறதுக்கு முன்னாடியே இடம் மனசில் பதிஞ்சிடும். பார்க்காத முன் பின் தெரியாத இடங்களுக்குப் போகிறப்போ வர்ற ஃபீல் வேற லெவலில் இருக்கும்தானே!” என்றார்கள் கோரஸாக.டென்ட் அடிச்சுத் தங்குங்க!

அடிக்கடி டிராவல் பண்ணுவோம் என்பவர்கள் சொந்தமாகவே டென்ட் வாங்கிக் கொள்ளலாம். குறைந்த விலையிலேயே டென்ட் கிடைக்கும். அதை வாங்கிக் கொண்டால் மலைப்பிரதேசங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் வாகமன் போயிருந்தோம். அங்கே, ஒரு ஹோட்டல் மேனேஜரிடம் அனுமதி வாங்கி மலை உச்சியிலுள்ள அந்த ஹோட்டல் பக்கத்தில் உள்ள இடத்திலேயே டென்ட் பயன்படுத்தித் தங்கினோம்.

குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!
குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!
குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!

டென்ட் வாடகை:

ஒரு நாளைக்கு

2,000 ரூபாய் (காலை, மதியம் உணவு சேர்த்து)

ஹோட்டல் வாடகை:

ஒரு நாளைக்கு -

3,500 ரூபாய்

மொத்த பட்ஜெட்:

25,000 ரூபாய் - 5 நாள்

(பெட்ரோல், டோல்கேட், தங்குமிடம், உணவு எல்லாம் சேர்த்து!)

குடகுமலைக் காட்டுக்குள்ளே... ஓர் அற்புத ட்ரெக்கிங்!

டென்ட் அடிச்சுத் தங்குங்க!

அடிக்கடி டிராவல் பண்ணுவோம் என்பவர்கள் சொந்தமாகவே டென்ட் வாங்கிக் கொள்ளலாம். குறைந்த விலையிலேயே டென்ட் கிடைக்கும். அதை வாங்கிக் கொண்டால் மலைப்பிரதேசங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் வாகமன் போயிருந்தோம். அங்கே, ஒரு ஹோட்டல் மேனேஜரிடம் அனுமதி வாங்கி மலை உச்சியிலுள்ள அந்த ஹோட்டல் பக்கத்தில் உள்ள இடத்திலேயே டென்ட் பயன்படுத்தித் தங்கினோம்.

கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்கள்:

இருப்பு அருவி (லட்சுமண தீர்த்தம் அருவி)

துபேர் யானைகள் முகாம்

அப்பே அருவி

செலவரா அருவி

பிரம்மகிரி மலைமுகடு

புஷ்பகிரி வனவிலங்குச் சரணாலயம்

தேவரகண்டி அருவி

மடிக்கேரி கோட்டை

சிக்லிஹோலே ரிஸர்வாயர்

தலக்காவேரி