Published:Updated:

``இது போகட்டும், அடுத்த ரயில்லுக்குப் போங்கப்பா..." - ரயில் பெட்டிக் கதைகள்! 

ரயில் பெட்டிக் கதைகள்
ரயில் பெட்டிக் கதைகள் ( பெ. ராகேஷ் )

"நீ மாப்பிள்ளையைக் கூட்டிகிட்டு அடுத்த வாரம் ஊருக்கு வா" என்று மகளைச் சமாதானப்படுத்தி, முதல் நாள் பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்வதுபோல, திரும்பித் திரும்பி பார்த்தவாறே கண்ணீருடன் ரயிலில் ஏறினார்.

வெள்ளிக்கிழமை இரவு 7 மணி. மனிதர்கள் நடமாட்டத்தில் திருவிழாவாகக் காட்சியளித்தது, சென்னை எழும்பூர் ரயில் நிலையம். அறிவிப்புப் பலகைகளில் பச்சை, சிவப்பு, நீல நிறங்களில் விளம்பரங்கள் ஓடியபோது, பிளாட்ஃபார்ம் எண்னை கண்டுபிடிக்க முடியாமல் பயணிகள் தவித்துக்கொண்டிருந்தனர். இதனால், ரயில் நிலையம் கூடுதல் பரப்பரப்பானது. சில நிமிட காத்திருப்புக்குப் பின், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 8-ம் நடைமேடையில் இருப்பதாக வந்த அறிவிப்பைக் கேட்டு, எஸ்கலேட்டரை நோக்கி நடந்தேன்.

ரயில் பெட்டிக் கதைகள்
ரயில் பெட்டிக் கதைகள்
சு.சூர்யா கோமதி
"கையெல்லாம் காப்புக் காச்சி கிடக்கு. ஆனா, நான் சொந்தக்கால்ல நிக்குறேன்!" உழைக்கும் பெண்களின் கதைகள்

``இந்த எஸ்கலேட்டரு என்னிக்குத்தான் வேலை செய்யும்னு தெரியல'' - கடுகடுத்த முகத்துடன் 60 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவர், புலம்பிக்கொண்டே மூட்டை முடிச்சுகளுடன் படியேறினார்.

பத்துத் துண்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டு, கால் கிலோ தோற்றத்துக்கு உயிர்கொடுக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டைக் கையில் ஸ்டைலாக ஏந்தி, அதைக் காலி செய்தவாறே மூச்சிறைக்க படியேறி இறங்கினேன். என் பெட்டியைத் தேடி நடக்கத் தொடங்கினேன்.

"லைட்டைச் சீக்கிரமா போட்டுவிட்டாதான் என்னவாம்? இவனுங்க தாத்தா சொத்தா போகுது''னு ரயில் அன்ரிசர்வேஷன் பெட்டியில் விளக்குகள் போடும் முன்பே ஏறி அமர்ந்திருந்த பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன்.

ரயில் பெட்டிக் கதைகள்
ரயில் பெட்டிக் கதைகள்
தே. அசோக் குமார்

முகத்துக்கு நேராக செல்போன் டார்ச்சை ஆன்செய்து, முகத்தைப் பளீரென்று காட்டிய அந்தப் பெண்ணின் முகம் சிறிது நேரத்தில் இருட்டுக்குள் சென்றதைப் பார்த்ததும், சிறுவயதில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளைப் பயமுறுத்தியது நினைவுக்கு வந்தது. இருக்கைக்கான சலசலப்புகள் தள்ளுமுள்ளாக மாற, முகம் தெரியவில்லை என்றாலும், சண்டையிட்டுக்கொள்ளும் குரல்களே, அவர்களின் கம்பீரமான தோற்றத்தைக் கண்முன் நிறுத்தியது.

தோள்பட்டையில் மாட்டியிருந்த பை அழுத்ததைக் கொடுக்க, தோளைக் குலுக்கி தற்காலிக நிவாரணம் தேடிக்கொண்டேன். அப்பாவின் தோளில் சாய்ந்தபடி வந்த ஒரு குட்டித் தேவதை, கண்களைச் சுருக்கி, டாட்டா காட்டினாள். அவளின் புன்னகை என் முதுகிலும் கையிலும் இருந்த சுமைகளின் கனத்தை மறக்கச் செய்தது. அவளின் கன்னக்குழி அழகை ரசித்தபடியே S7 கோச்சுக்கு வெளியே வந்து நின்றேன்.

ரயில் பெட்டிக் கதைகள்
ரயில் பெட்டிக் கதைகள்
தே. அசோக் குமார்

சில நிமிடங்களில் மின்விளக்குகளை ஒளிரச் செய்து, உட்புறமாகப் பூட்டியிருந்த கதவுகளைத் திறந்துவிட்டுச் சென்றார் ரயில் ஊழியர் ஒருவர். என்னுடைய கோச்சில் முதல் ஆளாய் ஏறி இருக்கையில் அமர்ந்துகொண்டேன். கடையிலிருந்து வாங்கி வந்த சப்பாத்திப் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிடத் தொடங்கிய சில நிமிடங்களில், 50 வயது மதிக்கத்தக்க தம்பதி கலர்கலரான பைகளுடன் எனக்கு அருகில் வந்தனர்.

"உங்களுக்கு லோயர் பெர்த்தா?''னு கேட்ட என் முகத்தை நிமிர்ந்துகூடப் பார்க்காமல், பையை சீட்டின் அடியில் அடுக்கிவிட்டு, ரயிலிலிருந்து கீழே இறங்கினார் கணவர். விறுவிறுவென நடந்து பிளாட்பாரத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டார். அந்த அம்மாவும் எதுவும் பேசுவதாகத் தெரியவில்லை. ஜன்னல் கதவுகளைத் திறந்து, தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ரயில் பெட்டிக் கதைகள்
ரயில் பெட்டிக் கதைகள்
சு.சூர்யா கோமதி

வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரின் உடலில் எந்த அசைவும் இல்லை. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வடிந்துகொண்டே இருந்தது. யாருடைய அழைப்பையோ எதிர்பார்ப்பது போன்று, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, தன் சட்டைப் பையில் வைத்திருந்த மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தார். என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியாமல், "எதுவும் உதவி வேணுமாம்மா''னு நான் கேட்க, அதற்கும் அந்த அம்மாவிடம் எந்தப் பதிலும் இல்லை. அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவருக்கும் கண்கள் கலங்கத் தொடங்கின.

கைகளைக் கழுவிவிட்டு, ரயில் பெட்டியிலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று அமர்ந்துகொண்டேன். சில நிமிடங்களில் அவர் எதிர்பார்த்த அந்த அழைப்பு வந்தது. மொபைலை அவசரமாக எடுத்து பேசியவர், "நீ வீட்டுக்குப் போ நான் பார்த்துக்கிறேன்''னு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். ரயில் கிளம்ப அரை மணி நேரம் இருந்தபோது, மீண்டும் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது, கண்ணீரைத் துடைத்துவிட்டு பேசியவர், "வேண்டாம்னு சொன்னேன்ல, சரி வா, S7''னு சொல்லிவிட்டு போனை வைத்தார். அவரின் கண்களைப் போலவே வரப்போகும் அந்த நபரை, என் கண்களும் ஆவலுடன் தேட ஆரம்பித்தது.

ரயில் பெட்டிக்கதைகள்
ரயில் பெட்டிக்கதைகள்
பெ. ராகேஷ்
`தாத்தா இத சாப்பிடுங்க...' அன்பு கசிந்த நிமிடம்! - ரயில்பெட்டிக் கதைகள்

சில நிமிடங்களில், புதிதாய் கல்யாணம் முடித்த கிராமத்துப் பெண் சாயலில் ஒரு பெண் ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்துக்கொண்டாள். "மாப்பிள்ளை எங்கேம்மா?''னு அவர் கேட்க, "வண்டியை நிப்பாட்டிட்டு வர்றேன். நீ எட்டாவது பிளாட்ஃபார்முக்கு போனு சொல்லிட்டு போயிட்டாங்கப்பா. நம்ம ஊரு ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு ரயிலுதான் நிக்கும். அங்கேயே சீட் கண்டுபிடிக்க திணறுவேன். எனக்கு பிளாட்ஃபார்ம்ங்கிற வார்த்தையே புதுசா இருந்துச்சுப்பா. ஆனாலும் உங்கள பார்க்கணுங்கிற வேகத்துல விசாரிச்சு விசாரிச்சு வந்துட்டேன்''னு கண்ணீர் வடிய வெள்ளந்தியாய் சொல்லிய அவளைக் கட்டியணைத்து உடைந்து அழ ஆரம்பித்தார் அந்த அப்பா.

"நான் வழியனுப்ப வந்தா எப்படியும் அழுவேன். நீங்களும் அழுவீங்கனுதான், வீட்டுல இருந்து வழியனுப்பு போதும்ன்னு அத்தை சொன்னாங்களாம்'' என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே, "புகுந்த வீட்டை விட்டுக்கொடுக்காம பேசுறடா. நீ மட்டும் இன்னைக்கு வழியனுப்ப வரலைன்னா அப்பா செத்தே போயிருப்பேன்டா. உனக்குக் கல்யாணமானாலும் எப்பவும் என்னோட செல்ல மவதான். வேற ஒருத்தருக்குக் கட்டிக்கொடுத்துட்டா, நமக்குள்ள இடைவெளி வந்துருமா என்ன?" என்று சொல்லி மகளைக் கட்டியணைத்து அவர் அழுத அழுகையில், என்னை அறியாமலேயே என் கண்களும் கண்ணீர் சிந்தத் தொடங்கியிருந்தன.

ரயில் பெட்டிக்கதைகள்
ரயில் பெட்டிக்கதைகள்
பெ.ராகேஷ் (For Representation Only)

ரயிலின் உள்ளே இருந்து அம்மா கீழே இறங்கி, ``சிக்னல் போட்டுட்டாங்க'' என்று சொல்ல, ``சரிம்மா நீ கிளம்பு, மாப்பிள்ளைகிட்ட சொல்லிரு'' என்று ரயிலில் ஏற முயன்ற தன் தந்தையின் சட்டையை இறுகப் பிடித்து, ``அடுத்த ரயிலுக்கு போங்கப்பா'' என மகள் அழுத அழுகை அங்கிருந்த எல்லோரையும் உலுக்கியது.``இந்த ரயிலுக்குதான்டா ரிசர்வேஷன் பண்ணியிருக்கோம். அடுத்த ரயிலு கூட்டமா இருக்கும். நிறைய லக்கேஜ் வேற இருக்குல. அப்பா இப்போ போறேன். நீ மாப்பிள்ளையைக் கூடிகிட்டு அடுத்த வாரம் ஊருக்கு வா'' என்று மகளைச் சமாதானப்படுத்தி, முதல் நாள் பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்வதுபோல, திரும்பி திரும்பி பார்த்தவாறே கண்ணீருடன் ரயிலில் ஏறியவரைப் பார்த்தபோது, என் அப்பாவின் சாயல் தெரிந்தது.

மகள்கள்
மகள்கள்

மகள்களைப் பெற்றவர்களுக்கு பிரிவு தவிர்க்க முடியாதது என்றாலும், அப்பாக்களுக்கு எந்த வயதிலும் மகள்கள் செல்ல தேவதைகள்தாம்.

அடுத்த கட்டுரைக்கு