Published:Updated:

ராமநாதபுரம் போறீங்களா? இந்த 5 கடற்கரைகளை மிஸ் பண்ணீடாதீங்க!

ராமநாதபுரம் கடற்கரைகள்

இராமநாதபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழக்கரையில் உள்ளது கலங்கரை விளக்கம் பீச். இங்கு உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடலையும் கடற்கரையையும் ரசிப்பதே ஒரு சுகம்.

ராமநாதபுரம் போறீங்களா? இந்த 5 கடற்கரைகளை மிஸ் பண்ணீடாதீங்க!

இராமநாதபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழக்கரையில் உள்ளது கலங்கரை விளக்கம் பீச். இங்கு உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடலையும் கடற்கரையையும் ரசிப்பதே ஒரு சுகம்.

Published:Updated:
ராமநாதபுரம் கடற்கரைகள்
கடலோரப் பகுதியான இராமநாதபுரத்தில் கடற்கரைகளுக்குப் பஞ்சமே இல்லை. இங்கு இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பீச்சுகள் உள்ளன. அவற்றில் டாப் ஐந்து கடற்கரைகள் பற்றிய தகவல்கள் இதோ...

அரியமான் கடற்கரை

நம்பர் ஒன் இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமான அரியமான் பீச். இராமநாதபுரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அரியமான் கடற்கரை. ’வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு’ பாடலிலிருந்து பல பாடல்கள் மற்றும் பல திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சவுக்கு மரங்கள்தான் இந்தக் கடற்கரைக்குத் தனி அழகே. சுடச்சுட சுவையான மீன் வருவல் நம்மைச் சுண்டி இழுக்கும். இங்கு சுற்றுலா செல்லும்பொழுது பாத்திரங்களையும் கொண்டுபோய் கடற்கரையில் நாமே சமைத்து, சுவைத்து மகிழலாம். அதுமட்டுமன்றி இங்கு தனியார் ரிசார்ட்களும் உண்டு. மொத்தத்தில் செம டாப்புடக்கரு பீச்சுப்பா!

ஆற்றாங்கரை கடற்கரை

இது வெறும் சாதாரணமான பீச் இல்லை... ஓர் அதிசயமான பீச். ஏன் தெரியுமா? இங்கு கடலும் நதியும் ஒன்றுசேர்கின்றன.

மதுரை வைகை நதியும் இந்தியப் பெருங்கடலும் ஒன்றுசேரும் இடம் இது. இந்த அதிசயத்தை ஆற்றாங்கரை முகத்துவாரத்தில் நாம் காணலாம். இந்த ரம்மியமான காட்சியைக் காண இராமநாதபுரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் சென்றால் போதும்.

கீழக்கரைக் கலங்கரை விளக்கம்:

கீழக்கரைக் கலங்கரை விளக்கம்
கீழக்கரைக் கலங்கரை விளக்கம்

கடற்கரையுடன் சேர்த்து ஒரு கலங்கரை விளக்கம் இருப்பது இதன் தனிச்சிறப்பு. இராமநாதபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழக்கரையில் உள்ளது இந்தக் கலங்கரை விளக்கம் பீச். இங்கு உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடலையும் கடற்கரையையும் ரசிப்பதே ஒரு சுகம். பீச் ப்ளஸ் கலங்கரை விளக்கம் என டபுள் ஆஃபர் இங்கு இருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பக்கிரப்பா கடற்கரை

இராமநாதபுரத்து மக்களின் ரீசன்ட் ஃபேவரைட் பக்கிரப்பா பீச்தான். இராமநாதபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காஞ்சிரங்குடி என்னும் இடத்தில் உள்ளது பக்கிரப்பா தர்கா கடற்கரை. சமீபத்தில்தான் இங்கு ஒரு தனியார் பூங்கா அமைத்தார்கள்.

அங்கு டீ, காபியில் ஆரம்பித்து பீட்சா, மில்க் ஷேக் எனப் பலவகையான உணவு வகைகள் கிடைக்கும். சுட்டிகளுக்கு விளையாட ஏற்ற பல விளையாட்டுப் பொருள்களும் இங்கு இருக்கின்றன. இராமநாதபுரத்து மக்களின் ரீசன்ட் ஃபேவரைட் பக்கிரப்பா தர்ஹா பீச்தான்.

சேதுக்கரைக் கடற்கரை

புனிதத் தலமான சேதுக்கரை பீச்சிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் வருகிறார்கள். இந்தக் கடற்கரையில்தான் ராமபிரான் இலங்கை செல்லப் பாலம் அமைத்த இடம் உள்ளது. அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள்.

சேதுக்கரைக் கடற்கரை
சேதுக்கரைக் கடற்கரை

நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திதி, தர்ப்பணம் செய்ய வந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு கடற்கரையில் சுத்தம் என்பதே கிடையாது. எங்கும் பூஜை செய்யப்பட்ட பொருள்களால் குப்பை நிறைந்திருக்கிறது. இராமநாதபுரத்தில் உள்ள திருப்புலாணியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சேதுக்கரை.

- மு.சங்கமித்ரா

மாணவப் பத்திரிகையாளர்