Published:Updated:

திருப்பதிக்கு முந்தைய திருப்பத்தில்... அருவி, சிங்கம் புலி, கரடி!

சென்னை -  வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை - வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மாருதி வேகன் ஆர் CNG | சென்னை - வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்

திருப்பதிக்கு முந்தைய திருப்பத்தில்... அருவி, சிங்கம் புலி, கரடி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மாருதி வேகன் ஆர் CNG | சென்னை - வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்

Published:Updated:
சென்னை -  வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை - வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்

வாசகர் : கிஷோர்குமார் ராமச்சந்திரன்

ஊர் : சென்னை

இடம்: வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க், ஆந்திரா.

வாகனம்: மாருதி சுஸூகி வேகன் ஆர் CNG

தூரம்: சுமார் 300 KM

பெட்ரோல் செலவு: 2,500 ரூபாய்

ஊர் சுற்றி வாண்டர்லஸ்ட்டும், மோட்டார் விகடனும் சந்தித்தால் என்ன நடக்கும்? ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் நடக்கும்!

கிஷோர்குமார் ராமச்சந்திரன், எஸ்ஆர்எம் காலேஜில் இன்டீரியர் டிசைனிங் படிக்கும் 22 வயது இளைஞர். அப்பா கார் ஓட்டுவதைப் பார்த்து பத்து வயதிலே கார் மேல் காதல் கொண்டவர். 10 வயதில் இருந்து கார்களைப் பற்றிய கற்றல், 18 வயதில் இருந்து கார் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் பயண அனுபவங்கள் என ஏகப்பட்ட அனுபவசாலி. . ``சிஎன்ஜி வேகன்-ஆர் வந்திருக்குனு கேள்விப்பட்டேன். கிரேட் எஸ்கேப் போலாமா?” என்றபடி நமது அலுவலகம் வந்தார் கிஷோர்.

``வேகன் ஆர் எப்பவுமே மிடில் கிளாஸ் மக்களுக்கானது. அதுவும் இந்த சுஸூகி வேகன் ஆர் இப்ப பெட்ரோலோட CNG ஆகவும் வருது. சிஎன்ஜியில் 320 கி.மீவரை போகலாம். சிஎன்ஜி தீர்ந்துபோனால் பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ளலாம்!” என்று வண்டிக்கு இன்ட்ரோ கொடுத்தபடி ஸ்டார்ட் செய்தார் கிஷோர்.

`எங்கே டிரிப் போகலாம்’ என்ற டிஸ்கஷனின் முடிவில் திருப்பதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க் என்று முடிவானது.

நண்பகல் வெயிலில் துவங்கியது பயணம். காரின் டிக்கியில் கேஸ் சிலிண்டர் இருப்பதால், மூன்று back bag–களுக்கு மேல் வைக்க முடியவில்லை. கார் பேஸிக் மாடல் என்பதால், ஸ்டீரியோவும் இல்லை. இதனால் மொபைல் – ரஹ்மான் மியூசிக்- ஜேபிஎல் புளூடூத் ஸ்பீக்கர் கூட்டணியோடு கார் ட்ரிப் துவங்கியது. புழல், ஊத்துக்கோட்டை, ஆந்திராவின் நாகலாபுரம் என்ற ரூட்டை ஃபிக்ஸ் செய்து பயணிக்கத் துவங்கினோம்.

பார்சல் பிரியாணி கமகமத்துக் கொண்டிருக்க, எங்கேயாவது நல்ல லேண்ட்ஸ்கேப்பாகப் பார்த்து நிறுத்து சாப்பிடலாம் என்றார் கிஷோர். ஆனால் நல்ல லேண்ட்ஸ்கேப் கிடைப்பேனா என்று அடம்பிடித்தது. அந்த ரூட் முழுவதுமே சிறிய ரோடு, அதை ஒட்டிய வயல்வெளிகள் என்றே கடக்க, காரை நிறுத்த இடமே இல்லை. கடைசியில் ஒரு அகலமான ரோடும், ஒரு மரத்தடியும் கிடைக்க... காரை நிறுத்தி பிரியாணியும், புலாவும் சாப்பிட்டோம்.

பின் அங்கிருந்து திருப்பதியை அடைந்தபோது, மாலை மணி ஐந்து. மெட்ரோ ரயில் பாலம், பொதுப் போக்குவரத்துப் பாலம் என ஏகப்பட்ட பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் ஊரே புழுதியும் புகையும் நெரிசலாக இருந்தது.

மாலை 5 மணியோடு வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்கின் பார்வையாளர் நேரம் முடிந்துவிடும் என்பதால், காலையில் முதல் ஆளாகப் போவது என்று முடிவெடுத்தோம். 9 மணிக்கு பார்க் திறப்பார்கள் என்பதால், 8.45க்கு அங்கே இருக்க வேண்டும் என்று திட்டம்.

இரவு ரமி கெஸ்ட் லைன் என்ற ஹோட்டலில் ஸ்டே. பழைமை மாறாமல் இருந்தது ஹோட்டல். பொடி ரோஸ்ட், கீ ரோஸ்ட் என வெரைட்டி தோசைகளால் டின்னரை முடித்து சீக்கிரமே உறங்கி, அதிகாலையில் சுறுசுறுப்பாகக் கிளம்பினோம்.

ஜாகுவாருக்கும், சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்?
ஜாகுவாருக்கும், சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்?
 கபாலீஸ்வர ஸ்வாமி கோவில் ரவுண்டானாவில் பேக்ரவுண்டிலேயே அருவி தென்படுவது அழகு.
 கபாலீஸ்வர ஸ்வாமி கோவில் ரவுண்டானாவில் பேக்ரவுண்டிலேயே அருவி தென்படுவது அழகு.
கோங்ரா துவையலுடன் செமத்தியான ஆந்திரா மீல்ஸ்...
கோங்ரா துவையலுடன் செமத்தியான ஆந்திரா மீல்ஸ்...

மறுநாள் காலை டிபனை முடித்துவிட்டு, சரியாக எட்டு மணிக்கு காரை எடுத்தோம். திருப்பதி கபாலீஸ்வர ஸ்வாமி கோவில் ரவுண்டானாவுக்கு வந்தால், மலைப் பின்னணியில் இரண்டு அருவிகளும், திருப்பதி தேவஸ்தானத்திற்குச் செல்லும் மலைப்பாதையும் மனதை மயக்கும். அங்கிருந்து பூங்கா பத்து கிலோ மீட்டர் பக்கம்தான்.

வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க் என்பது திருப்பதி தேவஸ்தான மலையை உள்ளடக்கி 353 சதுர கிலோ மீட்டர் பரந்து விரிந்த ஒரு பூங்கா. சித்தூர் மற்றும் கடப்பா என்ற இரண்டு மாவட்டங்களையும் தொடுகிறது. எளிமையாகச் சொன்னால், வண்டலூர் மிருகக்காட்சி சாலையைவிட கிட்டத்தட்ட 60 மடங்கு பெரியது. திருப்பதி தேவஸ்தானத்தோடு சேர்ந்து தலக்கோணம், குஞ்சானா, குணடலக்கோணம் என்று மூன்று பெரும் அருவிகளை உள்ளடக்கியது. இதனால் ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று.

மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்பதால், நாம் செல்லும் காரிலேயே ரவுண்ட் அடித்து சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்கள். அதற்கென்று வாகனக் கட்டணம் உண்டு. ஒரு வாகனத்தில் எத்தனை பேர் செல்கிறோமோ, அவர்களுக்கு என்று தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் தனி வாகனத்தில் டிரைவருக்குக் கட்டணம் கிடையாது.

தனி வாகனம் இல்லையென்றால், பேட்டரி காரில் கட்டணம் செலுத்தி சுற்றிப் பார்க்கலாம. அதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது சைக்கிள் ரைடு. ஏற்ற இறக்கங்களில் பெடலிங் செய்து நமது கால் வலிமையைப் பரிசோதித்து கொள்ளலாம்.. `இல்லை; நான் நடந்துதான் சுற்றிப் பார்ப்பேன்’ என்று நடந்தால், கால்கள் வீங்கி விடும். ஒவ்வொரு விலங்கு ஏரியாவுக்கும் அவ்வளவு இடைவெளி இருக்கிறது.

திருப்பதிக்கு முந்தைய திருப்பத்தில்... அருவி, சிங்கம் புலி, கரடி!
பூங்காவின் நுழைவு வாயில் டிக்கெட் கவுன்ட்டர்...
பூங்காவின் நுழைவு வாயில் டிக்கெட் கவுன்ட்டர்...
குகை போலவே என்ட்ரன்ஸ்..
குகை போலவே என்ட்ரன்ஸ்..
இந்தக் கொம்புதான் இந்த மான்களுக்கு பாதுகாப்பும்; ஆபத்தும்!
இந்தக் கொம்புதான் இந்த மான்களுக்கு பாதுகாப்பும்; ஆபத்தும்!
சிங்கங்களுக்கு இங்கே வாழ்நாள் அதிகம்...
சிங்கங்களுக்கு இங்கே வாழ்நாள் அதிகம்...

உயிரியல் பூங்காவின் துவக்கத்திலேயே ‘பீஜம் மாம் சர்வபூதானாம்’ என்று எழுதியிருக்கிறார்கள். அதாவது அனைத்து உயிர்களிலும் கடவுள் வாழ்கிறார் என்று அர்த்தமாம்.

பூங்காவின் சுவர்களில் நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் வரும் விலங்குகள், ஜீவ காருண்யம் பற்றி சிமெண்ட் சிற்பங்கள் செதுக்கியிருக்கிறார்கள். திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அருகிலேயே உள்ள உயிரியல் பூங்கா என்பதால், கூட்டத்துக்குக் குறைவில்லை. வருமானத்துக் கும் குறைவில்லை.

விலங்குகள் வாழும் பகுதிகளை அவற்றின் கேரக்டர்களை அடிப்படையாக வைத்துப் பெயரிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, தாவர உண்ணி விலங்குகள் வாழும் பகுதி ம்ருகவாணி என்றால்... சிங்கம், புலி போன்ற ஊன் உண்ணிகள் வசிக்கும் பகுதிக்கு வ்ருகவிஹார் என்று பெயர்.

இந்த தேசியப் பூங்காவில் 32 வகையான பாலூட்டிகள், 49 வகையான பறவைகள், 7 வகை ஊர்வன என ஆயிரத்திற்கும் மேற்ப்பட விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன.

கடமான்கள், புள்ளி மான்கள், எலி மான்கள், குரைக்கும் மான்கள் என மான் பகுதிகளைக் கடந்தால், குரங்குகளின் ஏரியா வருகிறது. பபூன் ஒன்று தனியே அமர்ந்து மர உச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது (அங்கே என்ன தெரிகிறது?) கரடி ஒன்று கூண்டைத் திறக்கச் சொல்லி குழந்தையைப் போல முன்னங்கால்களால் குதித்து அடம் பிடித்துக் கொண்டிருந்தது. நாய்க்கு வேலை இல்லை. ஆனால் நிற்க நேரமில்லை என்பார்களே... அதுபோல செந்நாய்கள் படு பிஸியாக குழியைச் சுற்றிக் கொண்டே இருந்தன. அதன் இயல்பு அப்படி!

பேந்தர், லெபர்ட் என சிறுத்தை வகைகளை அருகருகே வைத்து, அவற்றுக்கான வித்தியாசங்களைப் பட்டியலிட்டு இருந்தார்கள். பேந்தரைவிட லெபர்ட் எடை குறைவு என்பதால், லெபர்ட்டின் வேகம் அதிகம் என்றது அறிவிப்புப் பலகை. வெள்ளைப் புலிகளுக்குச் சற்றுத் தள்ளி பெங்கால் புலிகள் உலவிக் கொண்டிருந்தன. அக்டோபர் மாதம் என்றாலும், ஆந்திராவில் வெயிலுக்குக் குறைவில்லை. இதனால் பல விலங்குகள் மரத்தடி நிழலில், புல்வெளியில் செட்டில் ஆகியிருந்தன.

லயன் சபாரி என்ற அறிவிப்புப் பலகை நம் கண்களில் பட்டது. `சிங்கத்தை போட்டோல பார்த்திருக்கோம். சினிமாவா பார்த்திருக்கோம். ஏன் டிவில பார்த்திருக்கோம். கூண்டுல இல்லாம சபாரில சந்தோஷமா பார்க்கலாம்’ என்று முடிவெடுத்தோம். தனியாக ஒரு வேனை புக்கிங் செய்தால், கூடுதலாக இருபது நிமிடங்கள் சிங்கங்களை மிக அருகில் பார்க்கலாம் என்றார்கள். அதற்குக் கட்டணம் 900 ரூபாய். சிங்கத்தை சிங்கிளாய் மீட் பண்ணுவது என்று முடிவு செய்து 900 கட்டி, சபாரி சென்றோம்.

மீனாட்சி சிங்கம் சமர்த்துப் பெண்...
மீனாட்சி சிங்கம் சமர்த்துப் பெண்...
திருப்பதிக்கு முந்தைய திருப்பத்தில்... அருவி, சிங்கம் புலி, கரடி!

வேன் டிரைவர் சிங்கத்திற்கு இரண்டு அடிகள் முன்னால் நிறுத்தி எங்களைப் பரசவப்படுத்தினார். சர்க்கஸில் கூண்டிலேயே அடைந்து கிடந்த இரண்டு சிங்கங்களை மீட்டு இங்கே உலவ விட்டிருக்கிறார்கள். மனிதர்களைத் தொடர்ந்து பார்த்துப் பழகியதாலோ என்னவோ, அந்த இரண்டு ஆண் சிங்கங்களும் எங்களை எந்தச் சுவாரஸ்யமும் இன்றி பார்த்தன. பெண் சிங்கங்கள் அத்தனை தேஜஸாக, கண்கள் மினுங்கப் பார்த்தன.

கேர் டேக்கர் ஒருவர் இரண்டு உரித்த கோழிகளை கூண்டுக்குள் போட, ஒரு பெண் சிங்கம் அதைக் கவனித்து கவ்விக் கொண்டு சாப்பிட ஆயத்தமானது. இன்னொரு உரித்த கோழியைக் கவனிக்காத வேறொரு பெண் சிங்கம் முதல் சிங்கத்தோடு மல்லுக்கட்ட, கேர் டேக்கர் கூப்பிட்டு. ‘அடியே மீனாட்சி.. இந்தா போட்ருக்கேன்ல.. உன் கண்ணு என்ன பின்னாலயா இருக்கு’ என்று தெலுங்கில் செல்லமாகத் திட்ட, அவர் கைகாட்டிய திசையில் துள்ளிக் குதித்துச் சென்று கோழியைக் கவ்வியது.

‘பொதுவா ஆண் சிங்கம் காட்டுல 10 வருஷமும், பெண் சிங்கம் 15 வருஷமும் உயிர் வாழும். பாம்புக்கடி, வேட்டைக் காயம், விலங்குகளின் எதிர்த் தாக்குதல்ன்னு பல காரணங்களைத் தாண்டி சிங்கங்கள் அதோட முழு ஆயுசுக்கும் வாழ்ந்தாலே பெரிய விஷயம்தான். இங்க அப்படி சிங்கங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால ஆண் சிங்கங்கள் 15 வயசு வரைக்கும், பெண் சிங்கங்கள் 20 வயசு தாண்டியும் வாழ்ந்துட்டு இருக்குங்க’’ என்றார் வேன் டிரைவர் பெருமையான குரலில்.

‘இது நாலு வயசு பெண் குட்டி!’ என்று ஒரு சிங்கத்தைக் காட்டினார். அதுவே நன்கு உயரமாக வளர்ந்திருந்தது.

சஃபாரி முடித்துவிட்டு தேசியப் பூங்காவில் உள்ள கேன்ட்டீனில் பன் பட்டரும் சாமோசாவும் சாப்பிட்டாலும் பசி அடங்கவில்லை. மதியம் நல்லதொரு ஆந்திரா மீல்ஸ் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தோம். தேசியப் பூங்காவில் இருந்து வெளியே வந்து பருப்புப் பொடி, நெய், முட்டைகோஸ் ஃப்ரை, கோங்ரா சட்னி என்று காரமும், சாரமுமாக ஆந்திரா மீல்ஸை ரசித்தோம்.

தலக்கோணம் பால்ஸ் போய் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, சென்னை திரும்புவதாக ப்ளான். நாம் ஒன்று நினைத்தால் கொரோனா ஒன்று நடத்தும் அல்லவா? கொரோனா காரணமாக அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என்றார்கள். ‘கிருமியால அருவி குளியல் போச்சே!’ என்று கிஷோருக்கு வருத்தமாக இருந்தது. .

சென்னைக்குத் திரும்பும் வழியில் அருமையான கும்பகோணம் ஃபில்டர் காபிக் கடை இருந்தது. அங்கே ஃபேமஸான கராச்சி பிஸ்கெட் வித் காபி குடித்தோம். அந்த காம்போ அத்தனை அட்டகாசம். காபி தந்த உற்சாகத்தில் சென்னை நோக்கி, சந்தோஷமாக சுஸூகி வேகன் ஆரைச் செலுத்தினார் கிஷோர்.

திருப்பதிக்கு முந்தைய திருப்பத்தில்... அருவி, சிங்கம் புலி, கரடி!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பார்க்க வேண்டியவை...

கபில தீர்த்தம் (கபாலீஸ்வர ஸ்வாமி கோவில்)

தலக்கோணம் அருவி

கைலாசகோனா அருவி

கபாலீஸ்வரர் கோயில் அருவி

சிலதோரணம்

ஷ்ரிவாரி மெட்டு

இஸ்கான் திருப்பதி