Published:Updated:

சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!

 கிரேட் எஸ்கேப்
பிரீமியம் ஸ்டோரி
கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்: நிஸான் மேக்னைட் (பெட்ரோல்/ஆட்டோமேட்டிக்)

சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!

கிரேட் எஸ்கேப்: நிஸான் மேக்னைட் (பெட்ரோல்/ஆட்டோமேட்டிக்)

Published:Updated:
 கிரேட் எஸ்கேப்
பிரீமியம் ஸ்டோரி
கிரேட் எஸ்கேப்
சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!

சென்னை – ஜலகாம்பாறை அருவி

பயண தூரம்: 480 கிமீ

பெட்ரோல் செலவு: ரூ.5,000

மைலேஜ்: ஆவரேஜாக 10.5 கிமீ

பொதுவாக, சென்னையில் இருந்து ஏதாவது வீக் எண்ட் ஸ்பாட் தேடினால்… கீழே பெசன்ட் நகர், முட்டுக்காடு, மகாபலிபுரம், பாண்டிச்சேரி… இந்தப் பக்கம் அப்படியே மேலே போனால் திருப்பதி – சித்தூர்– தடா அருவிகள், பழவேற்காடு ஏரி… அதையும் தாண்டி தெற்குப் பக்கம் போனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை… பூந்தமல்லி வழியாகப் போனால் வேலூரில் அம்ரிதி பூங்கா, ஒகேனக்கல் என்று பல இடங்கள் கண்களின் முன்பு விரியும். எங்களுக்கும் அப்படி விரிந்தது. ஆனால், அதுவும் இன்ப இம்சையாகத்தான் இருந்தது. இதற்குக் காரணம் நிஸான் மேக்னைட்.

நிஸான் மேக்னைட்டின் டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார் ஒன்று ஒரு வீக் எண்டில் நமது அலுவலகம் தேடி வந்தால்… சும்மாவா விட முடியும். மேலே சொன்ன எல்லா வீக் எண்ட் ஸ்பாட்களையும் டிக் அடித்து… மறுபடியும் X போட்டு விட்டோம். தூறல் வேறு பெய்ததால், சட்டென ஒரு ஐடியா தோன்றியது. ‘ஏலகிரி போய்த் தங்கிட்டு அப்படியே ஜலகாம்பாறை வாட்டர் ஃபால்ஸ் போலாமே. இதுதான் சரியான சீஸன். அருவியில நிச்சயம் தண்ணி விழும்’ என்று ஐடியா சொன்னார்கள், நமது வாசகர்கள் சங்கரலிங்கம் மற்றும் ஹரீஷ். புகைப்பட நிபுணருக்குத் திட்டத்தைச் சொல்லிவிட்டு, நால்வரும் ஜலகாம்பாறை நோக்கி ‘ஜல புல ஜங்’ என்று பாடியபடி ஜாலியாகக் கிளம்பினோம்.

ஏலகிரி போய்த் தங்கிவிட்டு, அங்கிருந்து மலையில் கீழே இறங்கி மறுபடியும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாம்பாறை போவதுதான் திட்டம். பூந்தமல்லி பைபாஸில் அஞ்சப்பர் ரெஸ்டாரன்ட்டில் பிரியாணியை விழுங்கிவிட்டுக் கிளம்பினோம். ‘அஞ்சப்பர்ல இப்போதெல்லாம் சீரக சம்பா பிரியாணி போடுறதில்லை’ என்கிற அப்டேட் அப்போதுதான் எங்களுக்கு அப்டேட் ஆனது. ஆம்பூரை நினைத்த போதுதான் ஆசுவாசமாக இருந்தது.

நாங்கள் போனது டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக். மேக்னைட், சிட்டிக்குள் ஓட்டுவதற்கு பெப்பியாக இருந்தது. CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் அற்புதம். ஆட்டோமேட்டிக் என்பதால், டெட்பெடல் கொடுத்திருந்தார்கள். ஹைவேஸில் ஓட்டவும் ஜாலியாக இருந்தது. ஆனால், ஹை ஸ்பீடு போகும்போது அலறியது மேக்னைட். ‘‘நான் செலெரியோ வெச்சிருக்கேன். இது டபுள் செலெரியோ ஓட்டுற மாதிரி இருக்கு!’’ என்றார் ஹரீஷ்.

மேக்னைட்டில் நாங்கள் குழம்பிய ஒரு முக்கியமான விஷயம் – லோ வார்னிங் ஃப்யூல் அலெர்ட். மஞ்சள் நிற ஃப்யூல் வார்னிங் தெரிந்தாலும், ஃப்யூல் மீட்டர் பாயின்ட் ப்ளிங்க் ஆவது, அலார்ம் கொடுப்பது, எச்சரிப்பது போன்ற ஏதாவது ஒரு விஷயம் இருந்தால்… ஓட்டுநர்கள் உஷாராக இருப்பார்கள். ‘இன்னும் ஒரு பாயின்ட் இருக்குல்ல; அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்’ என்று டகால்ட்டி கொடுக்கும் என் போன்ற சோம்பேறிகளுக்கு இது ஆபத்தே! காரை பிரேக்டவுன் வரை சென்று நிறுத்திவிட்டு, வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி நிரப்பும் நிலைமை ஏற்படலாம்.

ஏலகிரி வரை செல்பவர்களுக்கு 3 டோல்கேட்கள் வருகின்றன. ‘ஃபாஸ்ட்டேக்’ இல்லையென்றால், டபுள் சார்ஜ் இரக்கமில்லாமல் கட்டணம் வசூலிப்பார்கள். பர்ஸ் பழுத்துவிடும். அதிலும் ஒரு சுங்கச்சாவடியில் 110 ரூபாய் கட்டணம். டபுள் என்றால், 220 ரூபாய் ஆகும்.

பூந்தமல்லியில் அஞ்சப்பரில் நிறைவேறாதது ஆம்பூர் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டில் நிறைவேறியது. ஏலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் உணவுப் பிரியர்கள் திருப்தியடைய மாட்டார்கள். அதனால், ஆம்பூரில் பார்சல் வாங்கிக் கொண்டோம். ‘அண்ணே, சீரக சம்பாவை மறந்துடாதீங்க!’ என்று பெருமையாகப் பார்த்தார் சங்கரலிங்கம்.

ஏலகிரிக்கு, கிருஷ்ணகிரிக்குப் போகும்முன் திரும்பிவிட வேண்டும். அதாவது, வாணியம்பாடி தாண்டியதும் இடதுபுறம் சர்வீஸ் லேனை எடுத்தால் வருகிறது ஒரு மெயின் ரோடு. அதில் ஏலகிரிக்கு மறுபடியும் இடதுபுறம் திரும்ப வேண்டும்.

ஹேர்பின் பெண்டுகளில்… அதுவும் இரவு நேரங்களில் போவது அழகாய் இருந்தது. அழகாய் இருப்பதற்குக் காரணம், மலைச்சாலை அமைந்த விதம் மட்டுமில்லை; ஒவ்வொரு வளைவுகளுக்கும் தூய சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள், அரசர்களின் பெயர்களை வைத்தால்… அழகாகத்தானே இருக்கும்! மேக்னைட் போன்ற சிவிடி கியர்பாக்ஸ்கள், மலைச்சாலைகளில் ஏற நன்றாகவே இருந்தது. மேனுவலாக இருந்தால் டர்போ லேக், கியர்ஷிஃப்ட்டிங் என்று மலைச்சாலைகளை ரசிக்க விடாது. மேக்னைட்டில் 14 கொண்டை ஊசிகளைத் தாண்டி ஏலகிரிக்குப் போவதற்கு வெறும் 17 நிமிடங்கள்தான் ஆனது.

ஏலகிரிக்கு கார்/பைக்குகளில் வருபவர்களுக்கு ஒரு முக்கியமான டிப்ஸ் – இங்கே பெட்ரோல் பங்க்குகள் ரொம்ப அரிது என்பதால், கீழேயே பெட்ரோல் நிரப்பி விடுவது உத்தமம்.

ஏலகிரியில் தங்கும் ஆப்ஷன்கள் வெரைட்டியாக உண்டு. பட்ஜெட் பார்ட்டிகளுக்கு 750 ரூபாயில் இருந்தும் ரூம்கள் கிடைக்கின்றன; காஸ்ட்லி பார்ட்டிகளுக்கும் 2,500 ரூபாய்க்கு மேல் காட்டேஜ்கள் உண்டு. ‘அருவி’ என்றொரு ரெஸார்ட்டில் புக் செய்திருந்தோம். இந்த ஓட்டல் ஓனரின் பெயரும் அருவி. மோ.வி வாசகர்; வாகன வெறியர். அந்த நேரத்திலும் தனது பழைய வின்டேஜ் ப்ரியா ஸ்கூட்டருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். குடும்பத்தினருடன் ஏலகிரி வருபவர்களுக்கு, அருவி நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!

ஏலகிரி க்ளைமேட் நீலகிரி அளவுக்குப் பயங்கரக் குளிரும் இல்லை; வேலூர் அளவுக்கு வெக்கையும் தெரியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீட்டர் உயரத்தில் இருப்பது, ஒரு மாதிரியாக நன்றாக இருந்தது.

ஏலகிரியை ஏழைகளின் நீலகிரி என்று சொல்வது சரிதான். இங்கே 30 ரூபாய்க்கு மீன் வறுவல் கிடைக்கிறது; 50 ரூபாய்க்கு படகுச் சவாரி பண்ணலாம்; 20 ரூபாய் என்ட்ரி ஃபீஸ் கட்டி மலர்க் கண்காட்சி பார்க்கலாம்; 70 ரூபாய்க்குத் தட்டு நிறைய சிக்கன் நூடுல்ஸ் தருகிறார்கள்; 15 ரூபாய்க்குச் சுவையான மண்பாண்ட தந்தூரி டீ குடிக்கலாம்.

பொன்னேரி கிராமத்தில் இருந்து 14 கிமீ தொலைவிலும், 14 கொண்டை ஊசி வளைவுகளும், 14 கிராமங்களும் கொண்ட ஏலகிரி, சென்னையில் இருப்பவர்களுக்கு வீக் எண்டுக்குச் சரியான ஸ்பாட். குழந்தைகளுடன் வந்தால், போகோ சேனலில் வருவது மாதிரி கேம்களும் உண்டு. மேலும் ஏடிவி வெஹிக்கிள்களும் ஓட்டும் ஆப்ஷனும் ஏலகிரியில் இருக்கிறது. சில ரெஸார்ட்டுகளே இந்த விளையாட்டுகளைக் கவனித்துக் கொள்கின்றன. விசாரித்து விட்டுச் செல்லுங்கள். தனியாக வருபவர்கள், கரடிப்பாறை எனும் இடத்தில் ட்ரெக்கிங் உண்டா என்பதையும் விசாரித்துக் கொள்ளுங்கள். வார இறுதி நாட்களில்தான் இங்கே ரூம்கள் கிடைக்க அல்லாட வேண்டும். மற்றபடி வார நாட்களில் ஹாயாகவே இருக்கிறது ஏலகிரி.

ஏலகிரியில் ஒரே ஒரு குறை – அருவிகள் என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாததுதான். மலைவாசஸ்தலம் என்றால், அருவிகள் இல்லாமலா! ஆனால், அந்தக் குறையைத்தான் ஜலகாம்பாறை போக்குகிறது. அதேநேரம், இது ஏலகிரியில் இல்லை. மலை இறங்கி, திருப்பத்தூர் வழியாகப் போய்,

35 கிமீ–க்கு மேல் பயணிக்க வேண்டும். ஏலகிரியில் உள்ள நிலவூர் என்ற கிராமம் வழியாக 5 கிமீ மலைப்பாதை வழியாக ட்ரெக்கிங் போனாலும், ஜலகாம்பாறை வரும் என்றார்கள்.

மேக்னைட், ஏலகிரி மலை இறங்கியது. இறங்கியதும் இடதுபுறம் திரும்பினால், திருப்பத்தூர். திருப்பத்தூரில், லட்சுமி கஃபே என்றொரு இடம்தான் காலை உணவுக்கு ஏலகிரியிலேயே ரெக்கமண்ட் செய்கிறார்கள். சூப்பரும் இல்லை; சுமாரும் இல்லை. நன்றாகவே இருந்தது காலை டிபன்.

முடித்துவிட்டு, திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு முன்பாக, இடதுபுறம் ஜலகாம்பாறை என்றொரு ஒரு சைன்போர்டு தென்படும் இடத்தில் திரும்ப வேண்டும். அதுவரை மொக்கையாக இருந்த சாலை, அதற்கப்புறம் ஜிவ்வென்று இருந்தது. பசுமை விகடன் அட்டைப் படத்துக்குக் கொடுக்கலாம். கிராமத்து மண்வாசத்துடன் சுற்றிலும் வயல்கள், பச்சைப் பசேலென செல்ஃபி எடுக்கத் தூண்டின. ஏதோ ஒரு ஏரி மாதிரி இருந்த இடத்தில் போட்டோ ஷூட். தண்ணீரைப் பார்த்ததும் டைவ் அடிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால், குளிக்க அனுமதி இல்லை.

திரும்பிய இடத்தில் இருந்து 10 கிமீ தூரம்தான். ஆனால், காரை விரட்ட மனசே இல்லை. அங்கங்கே இறங்கி, தொட்டாச்சிணுங்கிச் செடிகளைச் செல்லமாகச் சீண்டியபடி, செல்ஃபி எடுத்து, ஸ்டேட்டஸ் வைத்தபடியே ஜலகாம்பாறை போனோம்.

முன்பொரு முறை இங்கே வந்திருந்தபோது – பணியாரம், வடை போன்ற ஸ்நாக்ஸ்களை கம்மி விலைக்கு வாங்கி குரங்குகளுக்குத் தெரியாமல் தின்றது மெடுல்லா ஆப்லேங்கேட்டாவில் அசை போட்டது ஞாபகம் வந்தது. இப்போது, பணியாரக் கடை காலியாக இருந்தது. ஆனால், அதே குரங்குகள் இருந்தன.

அருவி நுழைவு வாயிலில், கக்கத்தில் பை வைத்தபடி வழக்கம்போல் என்ட்ரன்ஸுக்குக் காசு வாங்கினார்கள். காருக்கு 50 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்ட ரசீது கொடுத்தார்கள். ஜலகாம்பாறைக்கு எப்போது வேண்டுமானாலும் விசிட் அடிக்கலாம் போல! ஒருவேளை – இரவு நேரம் வந்தால் பார்க்கிங் இலவசமாக இருக்கலாம்.. ஒரு பணியாரப் பாட்டியைப் பார்த்தேன். ‘அப்பாடா!’ நிம்மதியாக இருந்தது.

பார்க்கிங்கே ‘பொன்னியில் செல்வன்’ லொக்கேஷன் மாதிரி பிரமாதமாக இருந்தது. ஒரு கோவில், நம்மை ரம்மியமாக வரவேற்றது. பெரிய சிவலிங்கமு நாகமும் அற்புதம்! தைப்பூசம் அன்று கூட்டம் கும்மியடிக்குமாம் ஜலகாம்பாறையில்.

கோவிலுக்குக் கீழேயே அருவி நீர் சிம்பொனி மீட்டியபடி பாறை முழுதும் வழிந்தோடியது செமயாக இருந்தது. வழுக்கும் இடங்களில் பார்த்து நடந்தோம். அருவிக்கு வலதுபுறமாகப் போய் இடதுபுறம் திரும்ப வேண்டும். அங்கேயும் கக்கத்தில் பை வைத்தபடி இரண்டு பேர் வசூலித்தார்கள். ஆளுக்கு 10 ரூபாய் கட்டணம்.

சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!

சில அருவிகளுக்கு நடையோ நடை என நடக்க வேண்டும். ஜலகாம்பாறை அப்படி இல்லை. நறுக்கென எட்டிப் பார்த்து விடுகிறது. சில படிகள்தான். நான் முன்பு வந்திருந்தபோது படிகள் இல்லை. இப்போது வசதியாகவே இருந்தது.

டயட் இருந்ததுபோல், ஸ்லிம்மாக… ஆனால், கிண்ணென விழுந்து கொண்டிருந்தது அருவி. கிட்டத்தட்ட 35 அடி உயரம் இருக்கும். அத்தனை உயத்திலிருந்து விழும் அருவி நீரின் அடியைத் தாங்க உடம்பில் தெம்பு இருந்தால் மட்டும்தான் முடியும் போல! ‘‘ஆஹா… மசாஜ் பண்ற மாதிரியே இருக்கு!’’ என்று ஜாலியாகக் குளித்தார்கள் ஹரீஷும் சங்கரலிங்கமும்.

மூலிகைகளை அடித்துக் கொண்டு விழுவதால், இதில் குளித்தால் நோய்கள் தீரும் என்றார்கள். பொய்யில்லை; நிஜமாகவே மூலிகை வாசம் அடித்தது. நாம் போனது சரியான சீஸன். இதற்கு ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை சீஸன் என்றார்கள். அதேநேரம் செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் இன்னும் அதகளம் பண்ணுமாம் ஜலகாம்பாறை. போன ஆண்டு ஒரு செப்டம்பர் மாதம், ஜலகாம்பாறையில் இமாச்சலப் பிரதேச வெள்ளப் பெருக்கு கணக்காக தண்ணீர் அடித்தோடியதை கூகுளில் சர்ச் செய்து பார்த்தேன். த்ரில்லிங்காக இருந்தது.

என்ன, அருவிகள் என்றால் கீழே விழுந்து புரண்டு நீச்சல் அடித்துக் குளிக்க இங்கே கெட்டிக் கிடக்கும் தண்ணீர் இல்லை. நீச்சல் பார்ட்டிகள் நிச்சயம் ‘உச்’ கொட்டுவார்கள்.

அதேநேரம், அருவிக் குளியலை அனுபவிக்க விடாமல் சில சிங்கிள் பசங்க செய்த அட்டூழியமும் தாங்கவில்லை. சரக்கு பாட்டில்களை உடைத்து ஆங்காங்கே வீசி, ரம்மியமான இடத்தை டம்மியாக்கி இருந்தார்கள். இது வருத்தமாகவே இருந்தது. குழந்தைகளை வெறுங்காலோடு நடக்க வைக்க வேண்டாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

ஆனாலும், ஜலகாம்பாறையில் அதகளம் செய்துவிட்டு ரிட்டர்ன் போகும்போது, உடலும் மனமும் ஏதோ ஒரு உற்சாக நிலையை அடைந்து கொண்டிருந்தது. மேக்னைட்டின் பெட்ரோலும் காலியாகிக் கொண்டிருந்தது.

சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜலகாம்பாறைக்குப் போகும்போது…

சென்னையில் இருந்து சுமார் 460 கிமீ வரை ரவுண்ட் த் ட்ரிப்பாக இக்கும் ஜலகாம்பாறையை ஒன்டே ஸ்பாட் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்; ரிலாக்ஸ்டு ஸ்பாட் ஆகவும் என்ஜாய் பண்ணலாம். வேலூர் வழியாக வாணியாம்பாடி தாண்டி ஏலகிரியில் தங்கிவிட்டு, மறுநாள் காலை போகலாம். ஏலகிரிக்குக் காரில் செல்பவர்கள், கீழே பெட்ரோல்/டீசல் நிரப்பிக் கொள்வது நல்லது. மேலே பெட்ரோல் பங்க்குகள் அவ்வளவாகக் கிடையாது என்பதைக் கவனிக்க வேண்டும். ஏலகிரியில் குறைவான விலையில், அருவி ரெஸார்ட் குடும்பத்தினருக்கும் சரி; சிங்கிள்ஸுக்கும் சரி – நல்ல ஆப்ஷன். அங்கிருந்து கீழே இறங்கி திருப்பத்தூர் வழியாகப் போனால்.. ஜலகாம்பாறைக்குப் போகலாம். ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை ஜலகாம்பாறைக்குச் சரியான சீஸன். செப்டம்பர், நவம்பரில் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம். கவனம்!