தன் துணையை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். அதன் காரணமாக Out of the box யோசித்து புதுப்புது பரிசுகளை வாங்கிக் கொடுப்பார்கள். அந்த வகையில் தன் திருமணத்துக்கு மணமகளுக்கு மணமகன் ஒருவர் வாங்கிக் கொடுத்த பரிசு இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் விலங்குகள்நல ஆர்வலருமான அஸ்லான் ஷா என்பவர், சோஷியல் மீடியா பிரபலமும், பல் மருத்துவருமான வாரிஷா ஜாவத் கானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமண ரிசப்ஷனுக்கு, தன் மனைவிக்கு அழகிய கழுதைக்குட்டி ஒன்றைப் பரிசளித்துள்ளார் அஸ்லான். பரிசளித்த வீடியோ இணையத்தில் செம வைரலானது. பரிசளித்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அஸ்லான் ஷா, ``வாரிஷாவுக்கு கழுதைக்குட்டிகளை மிகவும் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.

அதனால்தான் திருமணத்துக்கு அழகிய கழுதைக்குட்டி ஒன்றைப் பரிசளிக்கத் திட்டமிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், கழுதைக்குட்டி என்பதால் அதைத் தாயிடமிருந்து பிரிக்கவில்லை என்றும் தாயுடன் சேர்த்தே குட்டியையும் கொண்டு வந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
மணமகன், மணமகள் இருவரும் கழுதைக்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.