ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!

ஆல் இந்தியா ட்ரிப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆல் இந்தியா ட்ரிப்

பைக் ரைடு: ஆல் இந்தியா ட்ரிப்

ஒரு கணவன் – மனைவி கல்யாணம் முடித்துவிட்டு, ஹனிமூனுக்காக எங்கேயாவது குளுகுளு மலைவாசஸ்தலங்களுக்குப் பொட்டியைக் கட்டுவதைப் பார்த்திருப்போம். ஆனால், லோகேஸ்வரி–ப்ரேம் தம்பதியினர் வேற மாதிரி! ஹனிமூன்தான்; ஆனால், இது வேற மாதிரியான ஒரு பயணம். நண்பர்கள் இருவர் சேர்ந்து ஒரு பைக்கில் ரைடு கிளம்புவது மாதிரி, இந்தியா முழுக்க ரவுண்ட் அடித்து விட்டு வந்திருக்கிறார்கள் கணவனும் மனைவியும். அதுவும் சும்மா இல்லை; சேர்த்து வைத்த மொத்தப் பணத்தையும்… இல்லை இதற்காகவேதான் பணத்தைச் சேமித்து… இந்தியா முழுக்க ட்ரிப் அடித்திருக்கிறார்கள். ஒரு வாரம்… இரண்டு வாரம் இல்லை.. சுமார் 4 மாதங்கள்… அதாவது 120 நாட்கள்… தங்கள் ஜாலி ரைடை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார்கள்.

ஜூலை மாத இறுதியில் சென்னையில் இருந்து கோவா, மும்பை வழியாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர், ராஜஸ்தான், ஜெய்சால்மர் என்று லே – லடாக் வழியாக டெல்லி போயிட்டு… ‘பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வர்றது மாதிரி’ அப்படியே தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஜாலியாக சென்னை வந்திருக்கிறார்கள். பயணம் என்றாலே அனுபவம்தான். 120 நாட்கள், 21 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என்றால் சும்மாவா! சென்னை வந்தவுடனேயே லோகேஸ்வரி – ப்ரேம் தம்பதியரைச் சந்தித்தேன். மாறி மாறிப் பேசினார்கள்.

ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!

‘‘எப்படி இந்த ஐடியா வந்துச்சு?’’

‘‘கல்யாணம் முடிஞ்ச உடனேயே இப்படி ஒரு ரைடு போகலாம்னு ப்ளான் பண்ணிட்டிருந்தோம். சொல்லப் போனால், இது எங்களுக்கு லேட் ரைடு. நாங்கள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் புக் பண்ணிருந்தோம். அதோட வெயிட்டிங் பீரியட்தான் படுத்தி எடுத்துடுச்சு. பைக் வந்தவுடனேயே பயணம் கிளம்பிட்டோம். நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போய் சேர்த்து வெச்சிருந்த மொத்தப் பணத்தையும் இதுக்காகவே செலவழிக்கணும்னு முடிவு பண்ணோம். சேர்த்து வெச்ச 5.5 லட்ச ரூபாயையும் எடுத்துட்டுக் கிளம்பலாம்னு முடிவு பண்ணோம்!’’ என்றார் ஆரம்பித்தார் லோகேஸ்வரி.

‘‘உங்க பைக் பற்றிச் சொல்லுங்கள்!’’

‘‘நாங்க வாங்கினது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக். வெயிட்டிங் பீரியட்தான் கஷ்டமா இருக்கு. இந்த 18,200 கிமீ ஒட்டுமொத்தப் பயணத்தில் எந்த இடத்திலும் ஹிமாயலயன் சொதப்பவே இல்லை. டூயல் சேனல் ஏபிஎஸ் என்பதால், எந்த இடத்திலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவே இல்லை. ஹிமாலயனில் ஒரே ஒரு பிரச்னை – ட்யூப் டயர் என்பதுதான். ட்யூப்லெஸ் டயர் கொடுத்திருந்தா நல்லாருந்திருக்கும். பஞ்சர் ஆனப்போதான் தள்ளிட்டுப் போய் பஞ்சர் போடுறது கஷ்டமா இருந்துச்சு! முக்கியமா, எங்களுக்கு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் அடிக்கடி பஞ்சர் ஆச்சு. ஆனா ஒரு ஆச்சரியம் – பஞ்சர் ஆன அடுத்த 500 அடியில் ஒரு பஞ்சர் கடை இருக்கும். இது எதேச்சையா நடந்த மாதிரி தெரியலை. அங்கங்கே ஆணி போட்டு வேணும்னே பஞ்சர் பண்ண மாதிரி இருந்துச்சு! மத்தபடி இந்தியாவோட மத்த எந்த மாநிலங்கள்லேயும் எங்களுக்குப் பஞ்சர் பிரச்னைனு எதுவுமே இல்லை!’’

‘‘என்னென்ன எடுத்துட்டுப் போனீங்க பயணத்தில்? தங்குவதற்கு, சாப்பாடெல்லாம் எப்படி?’’

‘‘பைக்கை ஒரு கேரவன் மாதிரி மொத்தமா மாத்திட்டோம். என்ன நாங்க, கேஸ் அடுப்பு மாதிரியான சமாச்சாரங்கள் மட்டும் எடுத்துட்டுப் போகலை. ஏன்னா, நாங்க போறது ஃபேமிலிங்கிறதால… கிடைச்ச இடத்தில் தங்கிக்கலாம்னு ஆப்ஷன் முடியாது. இதுவே நான் மட்டுமா இருந்தா லாட்ஜெல்லாம் தேட மாட்டேன். போலீஸ் ஸ்டேஷன், பெட்ரோல் பங்க், கோயில்னு அங்கங்கே டென்ட் அடிச்சோ… அப்படியே தங்கிப்பேன். (ப்ரேமைப் பார்த்துச் செல்லமாக முறைக்கிறார் லோகேஸ்வரி!) இன்னொண்ணு எங்ககிட்ட நிறைய கேட்ஜெட்ஸ் இருந்துச்சு. அதைப் பாதுகாப்பா வெச்சிருக்கணும்னா ரூம் போட்டுத் தங்கினால்தான் சேஃப். மத்தபடி ஆளுக்கொரு ரைடிங் கியர், க்ளோவ்ஸ், கேமரா, பஞ்சர் கிட், இன்ஃப்ளேட்டர், சின்னச் சின்ன பைக் உதிரி பாகங்கள், பனியைத் தாங்குறதுக்கு ஷூ, ட்ரைபாடு, லேப்டாப்னு ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டு போனோம். அதேபோல் சமைக்கிறதுக்கும் எங்களுக்கு ஆப்ஷன் இல்லை. அப்படிங்கிறதால அடுப்பு, நூடுல்ஸ் பாக்கெட், அரிசி, பருப்புக்குலாம் வேலை இல்லை! மத்தபடி ஒரு பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே, கத்தினு சில உபகரணங்களையும் எடுத்துக்கிட்டோம். ஆனா எங்கேயும் கத்திக்கும் பெப்பர் ஸ்ப்ரேவுக்கும் வேலை வரலை!’’

‘‘இந்தப் பயணத்தில் பயந்த சம்பவம்?’’

‘‘லே பனிப்பகுதிக்கு நகரிலிருந்து கிளம்பினோம். சிக்கிம் பகுதியில்… அதாவது கிட்டத்தட்ட சைனா பார்டரில் Gurudongmar Lake அப்படினு ஓர் இடம். அங்கே ஆக்ஸிஜன் லெவல் ரொம்பக் கம்மி. ட்ரைபாடை எடுத்து போனை வைக்கக் கூடிய முடியவில்லை. எனக்குப் பயங்கர நெஞ்சு வலி. பிரேம்க்குச் சரியான தலைவலி. என்னால், எழுந்திருக்கக்கூட முடியலை. அங்கே ஆஸ்பத்திரியும் ரொம்பக் கம்மினு சொன்னாங்க. எனக்கு ஹார்ட் அட்டாக்கோனு எல்லாம் பயந்துட்டேன். கிடைச்ச ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்ஸ் எல்லாம் அப்படித்தான் பயமுறுத்தினாங்க. பல்ஸ் குறையுது; ஆக்சிஜன் கம்மியா இருக்குனு மிரட்டிட்டாங்க. அப்புறம்தான் தெரியுது; ரிவ்யூஸ் படிச்சப்புறம். நீங்க எந்த ஆஸ்பத்திரி போனாலும் இப்படித்தான் பயமுறுத்துவாங்கனு! அப்புறம், ஒரு லோக்கல் மெடிக்கல் ஷாப்பில் பல்ஸ் செக் பண்ணி… பிபி செக் பண்ணாங்க. நார்மலா ஏதோ மாத்திரை கொடுத்து, ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாங்க! நிஜமாவே எங்களுக்கு அப்போதான் உயிரே வந்துச்சு!’’

ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!

‘‘இந்த 21 மாநிலப் பயணத்தில் பிடிச்ச இடம்? மறக்க முடியாத அனுபவம்?’’

‘‘இந்த ட்ரிப்பில் ரொம்பப் பிடிச்சதுனா உதய்ப்பூர் சொல்லலாம். அப்படி ஒரு இடம். ஜெய்சால்மரில் 2 விதமான டூரிஸம் இருக்கு. டூரிஸம் – நான் டூரிஸம் என்று இரண்டு வகை இருக்கு. ஜெய்சால்மரில் ஒட்டக ரைடு செமயா இருந்துச்சு. அந்த ஒட்டுமொத்தப் பாலைவனத்தில் ட்ரோன் வெச்சுப் பார்த்தால்… எங்க ஒட்டகத்தையும், அவங்களையும் தவிர, நாங்க ரெண்டே ரெண்டு பேரு மட்டும்தான். இரவு ‘தார்’ பாலைவனத்தில் தங்கினது சூப்பர் அனுபவம். அது டென்ட் இல்லை; ஆனால், கீழே படுதா என்றொரு அம்சம் வைத்து ஓப்பனாகவே தங்க வைக்கிறார்கள். பாலைவனம் என்பதால் தேள், வைப்பர் பாம்பு மாதிரியான ஜந்துக்கள் ஏறாமல் இருப்பதற்காக! நாம் நினைப்பதுபோல், மணலில் இருக்கும் சேண்ட் வைப்பர் பாம்புகளால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார்கள். இரவு நேரம் சூரிய அஸ்தமனம்… அடடா! திரும்பி வரும்போது ஜெய்சால்மரில் மக்களோடு மக்களாகக் கலந்து பேசியதும் நல்ல அனுபவம். ஒட்டுமொத்தமாக ராஜஸ்தான் பிடித்திருந்தது! அப்புறம் சிக்கிம். கிழக்கிந்தியப் பயணம் சூப்பர்!’’

ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!
ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!

‘‘இந்தப் பயணத்தில் கிடைத்த மறக்க முடியாத நண்பர்?’’

‘‘நாங்கள் ஆக்ரா போயிருந்தபோது, தாஜ்மஹாலுக்குப் பக்கத்திலேயே ஓர் இடத்தில் ரூம் எடுத்துத் தங்கினோம். அதை நடத்துபவர் ஒரு மதுரைக்காரர். அவருடன் எங்களுக்கு நல்ல நட்பு. தாஜ்மஹால் போன்ற உலக அதிசயத்துக்குப் பக்கத்தில் ‘ஜோய்ஸ் ஹாஸ்டல்’ போன்ற விலை மலிவான லாட்ஜ்கள், நம் போன்ற டூரிஸ்ட்களுக்கு வரம். இங்கே தங்குவதற்கு 800 ரூபாய்தான் வசூலிக்கிறார். டெல்லி, ஆக்ரா, ரிஷிகேஷ்னு 3 இடங்களில் இந்த ஹாஸ்டல் இருக்கு. அப்புறம் டெல்லியில் என் தோழி சுசித்ரா எனக்கு ரொம்ப தோஸ்த். உதய்ப்பூரில் ஒரு நண்பர் கிடைத்தார். பிளாஸ்டிக் பிசினஸ் செய்கிறார். அவர் வீட்டில் தங்கிவிட்டு அப்படியே சண்டிகருக்குப் போக வசதியாக இருந்தது. இது தவிர ராணுவ வீரர்கள், சாதாரண பொதுமக்கள்னு ஏகப்பட்ட நண்பர்கள். யாரையும் மறக்க முடியாது!’’

‘‘எவ்வளவு அதிகமான ஆல்டிட்யூட் பயணம் செய்தீர்கள்?’’

‘‘உம்லிங் லா. 19,000 அடி கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடம். நிறைய பேர் கார்துங்லா போய்விட்டு, நாம்தான் உயரமான ஆல்டிட்யூடுக்குப் போயிட்டு வந்துட்டோம்னு அச்சீவ் பண்ண திருப்தியில வந்துடுவாங்க. ஆனால், அதற்கு மேல ஒண்ணு இருக்கு. அதுதான் உம்லிங் லா பாஸ். (Umling La Pass). Highest Motorable Pass இதுதான். கார்துங்லா தாண்டி கொஞ்சம் கீழே இறங்கி சீன பார்டர் வரை போகணும். சூப்பர் இடம் இது. கின்னஸ் ரெக்கார்டுக்கு ஏற்ற இடம்.

‘‘இது மாதிரி இமயமலைப் பயணத்துக்கு முக்கியமான டிப்ஸ்!’’

‘‘பொதுவாக, கார்துங்லா பயணம் செல்பவர்கள் ஒரு தப்பு செய்கிறார்கள். லே பயணத்தை முடித்துவிட்டு உடனேயே கார்துங்லா கிளம்புகிறார்கள். இது மிகவும் தப்பு. ஆல்டிட்யூட் ஆக்சிஜன் லெவல் காரணமாக பலர் மூச்சுப் பிரச்னைக்கு ஆளாவது இதனால்தான். லே–வின் ஆல்டிட்யூடுக்கு முதலில் அடாப்ட் ஆகி விட்டு, 2 நாட்கள் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு கார்துங்லா போய்ப் பாருங்கள். பெரிய பிரச்னை இருக்காது. அதேபோல், மூச்சுப் பிரச்னை ஏற்பட்டால்… பயப்பட வேண்டாம். நல்ல மெடிக்கல் ஷாப்பை அணுகுங்கள். இந்த நாட்களில் தம் அடிப்பது, டிரிங்ஸ் அடிப்பதைத் தவிர்க்கவும்! மூச்சுப் பயிற்சி நல்ல பலன் தரும்!’’

வெறித்தனமான பயணத்துக்கு வெறித்தனமான வாழ்த்துகள் லோகேஸ்வரி – ப்ரேம்!

ஹிமாலயன் பைக்கில் 18,200 கிமீ இமயமலைக்கு ஹனிமூன் ரைடு!