Published:Updated:

திகில் டனல்... நீளமான நதி... பச்சைப்பசேல் மணாலி... செம பைக் ரைடு! #HimalayanOdyssey பாகம் 2

குளு

முதல் 150 கி.மீ சாதாரண நெடுஞ்சாலைதான். பிலாஸ்பூர் டவுனை தாண்டிவிட்டால் சூப்பரான மலைப்பாதை... மணாலியின் ஸ்பெஷல்.

திகில் டனல்... நீளமான நதி... பச்சைப்பசேல் மணாலி... செம பைக் ரைடு! #HimalayanOdyssey பாகம் 2

முதல் 150 கி.மீ சாதாரண நெடுஞ்சாலைதான். பிலாஸ்பூர் டவுனை தாண்டிவிட்டால் சூப்பரான மலைப்பாதை... மணாலியின் ஸ்பெஷல்.

Published:Updated:
குளு

ஹிமாலயன் ஒடிசியில் இது மூன்றாம் நாள். ஆனால் ரைடர்களுக்கு இதுதான் முதல் ஜாலி-டே. சண்டிகரிலிருந்து மணாலி வரை 306 கி.மீ தூரம் பயணம் தொடங்கியது. கடல் மட்டத்திலிருந்து 6,726 அடி உயரத்தில் இருக்கிறது மணாலி. மணாலிக்குச் செல்ல ரோபர்-கிர்தாபுர் சாஹிப்-ஸ்வர்காட்-பிளாஸ்புர்-சுந்தர்நகர்-மண்டி மற்றும் குளு வழியைத் தேர்ந்தெடுத்தோம்.

ஹிமாலயன் ஒடிசி
ஹிமாலயன் ஒடிசி

முதல் 150 கி.மீ வரை சாதாரண நெடுஞ்சாலைதான். அங்கங்கு இரும்புப் பாலங்களும், கொஞ்சம் மலையேற்றங்களும் வந்தன. பிலாஸ்பூர் டவுனைத் தாண்டியவுடன் சூப்பரான மலைப்பாதை ஆரம்பமானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பைக்கை எப்போது நிறுத்தினாலும், சாலையின் இடதுபக்கம் நிறுத்தவேண்டும்.

இமயமலையிலிருந்து வரும் முதல் நதியை பிளாஸ்பூரை தாண்டியவுடன் பார்த்தோம். சண்டிகரிலிருந்து ஆரம்பித்தது முதல் எங்களுடனேயே பயணித்த இந்த நதியை பிளாஸ்பூர் நகரை கடந்த உடன் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

சத்லஜ் நதி
சத்லஜ் நதி
இந்த ஆற்றுக்கு பல பெயர்கள் உண்டு. சண்டிகரில் இதை சத்லஜ் நதி என்று சொல்கிறார்கள். பஞ்சாப் என்றால் '5 நதிகளின் நிலம்' என்று அர்த்தமாம்.

பஞ்சாபின் 5 நதிகளில் பெரியது இந்த சத்லஜ் ஆறு. ஹிமாச்சல பிரதேசத்தில் உருவாகி பஞ்சாபை பசுமையாக மாற்றிவிட்டு சிந்து நதியின் ஓட்டத்தைக் கூட்ட, வேகமாக பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த சத்லஜை, கேமராவுக்குள் அடைத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தோம்.

AUT Tunnel Entrance
AUT Tunnel Entrance
dangerousroads.org

வழியில் நிறைய பாலங்கள் உள்ளன. ஒரே ஆற்றை குறைந்தபட்சம் மூன்று முறையாவது கடப்பீர்கள். சாலைகள் சுமார்தான். பல இடங்களில் இப்போதுதான் சாலை போட ஆரம்பித்துள்ளார்கள். சண்டிகரிலிருந்து 217 கி.மீ தொலைவில் சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் மண்டி என்ற இடத்தைக் கடந்தவுடன் AUT டனல் வருகிறது.

இந்தியாவின் நீளமான டனல் இது. 2.8 கி.மீ தொலைவு கொண்ட இந்த டனல் பியாஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. இதில் பயணிப்பது ஒரு திகில் எக்ஸ்பீரியின்ஸ்.

நல்ல வெளிச்சமும், அகலமான பாதையும், நல்ல காற்றோட்டமும் கொண்ட டனல். ஆனால், டனலுக்கு வெளியே சாலை கட்டமைப்பு வேலை நடைபெறுவதால் டனலில் ஒன்றுமே தெரியவில்லை. குத்துமதிப்பாக 2 வெளிச்சம் தெரிந்தால் கார், கொஞ்சம் ஹெவியான வெளிச்சம் என்றால் டிரக், ஒரே லைட் தெரிந்தால் பைக் என்ற மனக்கணக்கில்தான் கடந்தோம்.

Hot air balloon ride
Hot air balloon ride

மணாலி, குளு எனும் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம். இங்கே குளு டவுன் என்ற இடமும் உள்ளது. குளு டவுனுக்கும் மணாலிக்கும் இடையே சுமார் 50 கி.மீ இடைவெளி இருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான இந்த டூரிஸ்ட் ஸ்பாட்டில் ரிவர் ராஃப்ட்டிங், பாரா கிளைடிங், பாராசூட் ஃபிளையிங் போன்ற சாகச விளையாட்டுகள் ரொம்பவே பிரபலம்.

ஹாட் ஏர் பலூனில் ஏறிப்பறந்தால் குளு டவுனே தெரியுமாம்!
மணாலியை நெருங்க நெருங்க பெயர் பலகைகளில் இருந்த ஆங்கிலமும் அழிந்துகொண்டிருந்தது. இந்தி மட்டுமே!
மணாலியை நெருங்க நெருங்க பெயர் பலகைகளில் இருந்த ஆங்கிலமும் அழிந்துகொண்டிருந்தது. இந்தி மட்டுமே!

நாங்கள், குளு டவுனைத் தொடாமல் பைபாஸ் வழியாகவே மாணாலிக்குச் சென்றோம். மணாலிக்கு முன்பு இருக்கும் 30 கி.மீ சாலை ரைடர்களின் சொர்க்கம். அதுவும் 16 டிகிரி எனும் மிதமான குளிரில் இந்தச் சாலை கொஞ்சம் கூலான ஐஸ்கிரீமும், சூடான குளாப்ஜாமும் கலந்து சாப்பிடும் அனுபவம். சொல்லும்போதே இனிக்கிறது.

மணாலியை நெருங்க நெருங்க காணும் இடமெல்லாம் நதிகளும், பசுமையும்தான். ''ஊருக்கு வெளியவே இப்படினா, ப்ப்பா ஊர்... செமையா இருக்கும் போலயே'' என எதிர்பார்த்துச் சென்றோம். கடைசியில், இந்த மணாலிக்கு நம்ம ஊர் மணலியே பரவாயில்லை போல என்றாகிவிட்டது. அளவுக்கு அதிகமான மக்கள் நடமாட்டம், ஊருக்குள் நுழையும்போதே பெரிய குப்பை மேடு, குண்டும், குழியுமாக இருந்த சிறிய சாலைகளில் கார்கள், பேருந்துகள், பைக் வாகனக் கூட்டம் எனத் திமிறிக் கொண்டிருந்தது மணாலி!

Himalayan Odyssey
Himalayan Odyssey

ஆனால், ஒரு பக்கம் கட்டடம் என்றால் இன்னொருபக்கம் மரங்கள் எனப் பசுமையான நகரம். எப்படியோ சாலையில் மேலும் கீழுமாக ஏறி இறங்கி பளீர் வெளிச்சத்தில் ஹோட்டலை அடைந்தோம். மணி 4 இருக்கும் போலயே என காபி கேட்டால் டின்னர் ரெடி என்றார்கள். நேரம்... இரவு 7.30.

View this post on Instagram

பியாஸ் நதி ஓரம் 4 கிராமங்கள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலா தளம் - குலு, இமாச்சல் பிரதேசம். இந்த புகைப்படம் இரவு 8 மணிக்கு எடுக்கப்பட்டது. அதுவரை சூரியன் மறையவில்லை. இன்னும் பல சுவாரஸ்யமான அனுபவங்களுடன் எங்கள் பயணம் தொடர்கிறது... #himalayanodyssey #ho2019 #leaveeveryplacebetter #MotorVikatan #RoyalEnfield @theroyalenfieldhimalayan @royalenfield @motorvikatan #himalayapayanam

A post shared by Motor Vikatan (@motorvikatan) on

பயணத்தை கடவுளோடு கொண்டாட நினைப்பவர்கள் மணாலியில் ஹிடிம்பா தேவி கோயிலுக்குப் போகலாம். காட்டுக்கு நடுவே முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட கோயில் இது. 1553 AD-யில் பஹதூர் சிங் என்ற மன்னர் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

கோயில் வேண்டாம் கொண்டாட்டம் மட்டும்போதும் என்பவர்களுக்கு இங்கு நிறைய பப் மற்றும் ரிசார்ட்டுகள் உண்டு. இயற்கையோடு நேரத்தைக் கழிக்க மணாலி சரணாலயம், ஹம்ப்டா பாஸ், பியாஸ் நதி, ப்ரிகு லேக், பின்பார்வதி பாஸ் என ஏகப்பட்ட இடங்கள். மணாலி சின்னச் சின்ன ட்ரெக்கிங்குகளுக்கு சிறந்த இடம்.

பல இடங்களில் இப்போதுதான் சாலை அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பல இடங்களில் இப்போதுதான் சாலை அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

மணாலியில் இருந்து கிளம்பி மறுநாள் கிலாங் நோக்கிச் செல்கிறோம். தொலைவு வெறும் 116 கி.மீதான். ஆனால், 10,105 அடி உயரம் வரை ஏறப்போகிறோம். ரோத்தங் பாஸ் எனும் இடத்தைக் கடக்கும்போது பனி இருந்தால் இமயமலை பயணம் கொஞ்சம் இம்சையான பயணமாக இருக்கும் என்று செக்போஸ்ட் சேட்டாக்கள் கூறியுள்ளார்கள். நாளை பார்ப்போம்!