Published:Updated:

8000 பேர் வாழும் ஊரில் 10 லட்சம் பயணிகள்...365 கி.மீ வரை பெட்ரோல் பங்க் கிடையாது! #HimalayanOdyssey பாகம் 3

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ஹிமாலயன் ஒடிசியின் மூன்றாவது நாள். மணாலியிலிருந்து கெலாங் பயணித்தோம்.

8000 பேர் வாழும் ஊரில் 10 லட்சம் பயணிகள்...365 கி.மீ வரை பெட்ரோல் பங்க் கிடையாது! #HimalayanOdyssey பாகம் 3

ஹிமாலயன் ஒடிசியின் மூன்றாவது நாள். மணாலியிலிருந்து கெலாங் பயணித்தோம்.

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

இந்துக்களுக்குக் காசி, முஸ்லிம்களுக்கு மெக்கா, கிறித்தவர்களுக்கு வாட்டிக்கன் சிட்டி, புத்த மதத்தினருக்குப் புத்த கயா போல பைக்கர்களுக்குப் புனித யாத்திரை என்றால் அது லடாக் பயணம்தான். பைக்குகள் போகும் அளவு இமயமலையின் உயரமான இடங்களில் ஒன்று கார்துங்லா. இந்த கார்துங்லாவுக்கு பைக்கர்களை கூட்டிப்போவதுதான் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் ஒடிசி. இந்த முறை ஹிமாலயன் ஒடிசியில் லடாக் வரை ராயல் என்ஃபீல்டோடு கலந்துகொண்ட அனுபவம்தான் இது.

ஹிமாலயன் ஒடிசியின் மூன்றாவது நாள். மணாலியிலிருந்து கெலாங்-க்குப் பயணித்தோம். மழை தூறிக்கொண்டே இருந்ததாலும், முந்தைய நாள் 300 கி.மீ பைக் ஓட்டியதாலும் கொஞ்சம் அதிகமாகவே ரெஸ்ட் எடுத்துவிட்டு காலை 8 மணிக்குப் பயணத்தை தொடங்கினோம். சண்டிகரிலிருந்து மணாலி வந்ததுபோல சாஃப்ட்டான நெடுஞ்சாலை இனி இல்லை. முழுவதும் மலைப் பாதைதான்.

மணாலி
மணாலி

அதனால், 116 கி.மீ மட்டுமே இலக்காக வைத்து ஆரம்பித்தோம். 10,105 அடி உயரத்தில் இருக்கிறது கெலாங் டவுன். வெறும் 116 கி.மீ தூரம் என்பதால் மதியமே பயணத்தை முடித்துவிடலாம் என எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். அழகிய இடங்களில் சில செல்ஃபிகள், குண்டும் குழியுமான சாலை, எதிர்த்திசையில் வந்துகொண்டே இருந்த டேங்கர் லாரிகள், அளவுக்கு அதிகமான வாகனக் கூட்டம் என எல்லாம் கடந்து கெலாங் செல்வதற்கு மாலை 5 மணி ஆகிவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஞாயிற்றுக்கிழமை பயணம் என்பதால் மணாலியைக் கடக்கவே 3 மணிநேரம் தேவைப்பட்டது.

இந்த ஆண்டு மணாலியில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகரித்துவிட்டது. இதன் விளைவு, இரண்டே மாதங்களில் 2000 டன் அளவுக்குக் குப்பைகளைக் கொட்டி மணாலியைக் குப்பைமேடாக மாற்றியிருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். கோடைகாலம் என்றால் இங்கு பயணிகள் வரத்து அதிகமாகவே இருக்கும். ஆனால், வெறும் 8,096 (2011 சென்சஸ்) மக்கள் மட்டும் வசிக்கும் இந்தச் சிறிய ஊருக்கு இம்முறை 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வந்திருப்பதாக மணாலி நகராட்சி அதிகாரி நாளிதழ்களில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

சண்டிகர்-மணாலி சாலை
சண்டிகர்-மணாலி சாலை

இமயமலையைச் சுற்றிய இடங்களில் இரவு 8 மணி வரை பளிச்சென வெளிச்சம் இருக்கும். ஆனால், இருட்ட ஆரம்பித்துவிட்டால் 5 நிமிடத்தில் மொத்த வெளிச்சமும் காணாமல் போய்விடும். இருள் வருவதற்குள் ஓரிடத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்குவது பாதுகாப்பானது என யோசித்து கீலாங்கைத் தேர்ந்தெடுத்தோம். கீலாங்கை தாண்டிவிட்டால் ஜிஸ்பாவில் தங்கலாம். அதையும் தாண்டிவிட்டால் லடாக் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இருளில் லடாக் செல்வது நரகத்தின் வாசலைத் தேடி நாமே குதிப்பதுபோல.

கெலாங் செல்லும் வழியில் 13,052 அடி உயரத்தில் ரோத்தங் பாஸ் எனும் இடம் உண்டு. மணாலியிலிருந்து வெறும் 50 கி.மீ தொலைவிலேயே இருப்பதால் டூரிஸ்ட்டுகள் இங்கே அதிகம். பனிச்சறுக்கு முதல் பாரா கிளைடிங் வரை சாகச விளையாட்டுகளுக்கு இந்த இடம் பிரபலம். ரோத்தங் பாஸை கடந்ததும் 15 அடி உயரப் பனிப்பாறைகளுக்கு நடுவே பைக் ஓட்டியது சிலிர்ப்பை ஊட்டும் ஓர் அனுபவம்.

கெலாங் மணாலி பாதை குண்டும் குழியுமானது. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிஎஸ் 4 ஹிமாலயன் ஸ்லீட் கொஞ்சம் ஸ்பெஷலானது. இதில் 20% எடைகுறைவான அதே சமயம் ஸ்டாக்கை விட வலுவான அலுமினியம் ஹேண்டில்பார், அதற்கேற்ற பார் எண்டு, அதிக நேரம் உட்கார்ந்து பயணிக்க தெர்மோ சீல் கொண்ட டூரிங் சீட்டுகள், வலுவான ஸ்டீலால் உருவாக்கப்பட்ட பேனியர் கிட் மற்றும் 26 லிட்டர் அளவு கொண்ட அலுமினியம் பேனியர்கள், 22 மிமீ தடிமனான எளிதில் துருப்பிடிக்காத இன்ஜின் கார்டு போன்றவை இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்தன. கூடுதலாக K&N பர்ஃபாமன்ஸ் ஏர் ஃபில்ட்டரும், ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பைப்பும் இருந்தன. 

8000 பேர் வாழும் ஊரில் 10 லட்சம் பயணிகள்...365 கி.மீ வரை பெட்ரோல் பங்க் கிடையாது! #HimalayanOdyssey பாகம் 3

ஃபில்ட்டர் மற்றும் எக்ஸாஸ்ட் தவிர்த்து அனைத்துப் பொருள்களும் ஹிமாலயன் GMA கிட் என்று கேட்டு வாங்கி நாமே பொருத்திக்கொள்ளலாம். இமயமலையின் கம்பீரத்துக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இந்தப் பாகங்கள் ஹிமாலயனின் தோற்றத்துக்கு வலு சேர்த்தது மட்டுமல்ல... எங்களின் பயண அனுபவத்தையும் மெருகேற்றியது.

15 அடி உயர பனிகளுக்கு நடுவில் பைக் ஓட்டினோம்
15 அடி உயர பனிகளுக்கு நடுவில் பைக் ஓட்டினோம்

இந்த பேனியர்கள் இருப்பதால் பைக்கில் ஏறி-இறங்குவது ஒரு பெரிய டாஸ்க்காகவே இருந்தது. ஒவ்வொரு முறையும் சைடு ஸ்டாண்டு போட்டுத்தான் பைக்கில் ஏறினோம். இந்த பைக் ஏற்கெனவே எடை அதிகமானது. இதோடு பேனியர்களின் எடையும் பைக்கில் சேர்ந்துவிட்டது. பைக் ஓட்டும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் பைக்கை நிறுத்தும்போது ஒரு பக்கம் எடை அதிகமாகத் தாங்கவேண்டியதாக இருந்தது. ஆஃப்ரோடில் பைக்கைத் திருப்புவது இளவட்டக்கல்லைத் தூக்குவதுபோல. 

ரோத்தங் பாஸ்
ரோத்தங் பாஸ்
8000 பேர் வாழும் ஊரில் 10 லட்சம் பயணிகள்...365 கி.மீ வரை பெட்ரோல் பங்க் கிடையாது! #HimalayanOdyssey பாகம் 3
LPG பெட்ரோல் பங்க்
LPG பெட்ரோல் பங்க்

மணாலி-கெலாங் பாதையில் சில செக்போஸ்ட் உண்டு. செக்போஸ்ட்டுகளில் ஏதாவது ஓர் அரசு ஐடி கார்டை காட்டி பைக் நம்பரையும், பெயரையும் பதிவு செய்வது அவசியம். ஒரு வேலை எங்காவது தொலைந்துவிட்டால் தேடுதலின்போது இந்த செக்போஸ்ட் என்ட்ரிகள் உதவும். இதனால், லடாக் போகிறவர்கள் எந்த செக்போஸ்ட்டையும் தவறவிடக் கூடாது. 

கெலாங் அடைவதற்கு 9 கி.மீக்கு முன் லாஹால் பொட்டேட்டோ க்ரோவர்ஸ் (LPG) என்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று உண்டு. இங்கே கட்டாயம் நின்று பைக்கின் டேங்க்கை நிரப்பிவிட வேண்டும். ஏனென்றால் அடுத்த 365 கி.மீ தூரத்துக்கு பெட்ரோல் பங்க்கே கிடையாது. மைலேஜை கணக்கிட்டு அதற்கேற்ப பெட்ரோல் வாங்கிக்கொள்ளுங்கள். அவசரத்துக்கு சார்ச்சு கேம்ப் அல்லது ரும்ஸோவில் இருக்கும் தங்கும்விடுதிகள், டீக்கடைகளில் பெட்ரோல் வாங்கலாம். ஆனால் விலை கொஞ்சம் அதிகம். நாங்கள் கெலாங்கை அடைந்தபோது நேரம் மாலை 5 மணி.

மணாலி-லே நெடுஞ்சாலை
மணாலி-லே நெடுஞ்சாலை

கெலாங் டவுனில் வெறும் 2ஜி சிக்னல் மட்டும்தான். அதுவும், BSNL, ஏர்டெல் போஸ்ட்பெய்டு மட்டும்தான் எடுபடும். தெருவிளக்குகள் எதுவும் கிடையாது. ஒரு நடை நடக்கலாம் என்றால் கூட கும்மிருட்டில் கால் வைப்பது புல் மீதா பாம்பு மீதா என்ற பயம் வந்துவிடும்.

இமயமலையின் மொத்த பசுமையும் கெலாங்கோடு முடிந்துவிடும். சார்ச்சு வரை கரடுமுரடு சாலையும், நதியும், பனியும், நீர்வீழ்ச்சிகளும் மட்டுமே.

கெலாங்கில் 16 டிகிரி குளிர். வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் பெரும்பாலும் மரங்களால் கட்டப்பட்டிருந்தன. விடிந்தபிறகு சார்ச்சுவுக்குக் கிளம்புவதுதான் திட்டம். சார்ச்சுவில் -3 டிகிரி குளிர் என கூகுளில் பார்த்தோம். காற்றும் அதிகமாக வீசுவதால் ஸ்வெட்டர்களை பைக்கில் எடுத்துவைக்க அறிவுறுத்தியது ராயல் என்ஃபீல்டு டீம். பைக்கின் எடையைக் கூட்டினாலும், இந்த பேனியர்கள் இருப்பது நல்லதுக்கே.