கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

லாக்டெளனில் லடாக்! - - சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!

கோவை to லடாக்
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை to லடாக்

செலிபிரிட்டி பயணம்: கோவை to லடாக்

சின்னத்திரை நடிகையாக நமக்கு நன்கு பரிச்சயமானவர், ஸ்ருதி சண்முகப்பிரியா. டிராவல் பிரியரான இவர் சோலோவாகப் பல இடங்களுக்குப் பயணித்து வருகிறார். சமீபத்தில் லடாக் போய் வந்திருக்கிறார். அந்த டிரிப் அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

``கொரோனா லாக்டவுன் சமயத்தில் ரொம்பவே இறுக்கமான மனநிலையில் எல்லாரும் இருந்தது உண்மை. நானும் அதே மனநிலையில்தான் இருந்தேன். அப்போதான் எங்கேயாவது டிராவல் பண்ணனும்னு நினைச்சேன். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே லடாக் டிரிப் போய்ட்டு வந்திடணும்னு ரொம்பவே ஆசைப்பட்டுட்டு இருந்தேன். இந்த தடவை எப்படியாவது பக்கெட் லிஸ்ட்ல இருக்கிற லடாக்கைச் சுற்றிப் பார்த்துட்டு வந்திடணும்னு முடிவெடுத்துட்டேன். தமிழ்நாட்டில் இரண்டாவது லாக்டவுன் போட்டிருந்த சமயம் தனியார் டிராவல் ஏஜென்சி மூலமா லடாக் ட்ரிப் பிளான் பண்ணினேன்.

கோவிட் டெஸ்ட்டுக்குப் பிறகு விமான நிலையத்தில் டிராவல் பண்ண அனுமதி கொடுத்தாங்க. கோயம்புத்தூரில் நான் இருக்கிறதனால கோயம்புத்தூரிலிருந்து சென்னை வந்தேன். பிறகு, சென்னை to டெல்லி ; டெல்லி to லே டிராவல் பண்ணினேன். ஏர்போர்ட்டில் மேலே சொன்ன அதே ப்ரொஸிஜரைத்தான் ஃபாலோ பண்ணினாங்க. உலகமே லாக்டவுனில் முடங்கியிருந்தப்போ நான் மட்டும் உலகத்தை ரசிக்கக் கிளம்பினேன்.

முதல் தடவை சோலோ டிரிப்பா மணாலிக்குப் போயிருந்தேன். நம்மைச் சார்ந்தவங்ககூட டிரிப் போகும்போது ஒருவிதமான கம்ஃபர்ட் ஸோன் இருக்கும். அந்த கம்பர்ட் ஸோனைத் தவிர்த்துட்டு தனியா பயணிக்கும்போது பர்சனலா நிறைய விஷயம் கத்துக்க முடிஞ்சது, அதே மாதிரி செம எக்ஸ்பீரியன்ஸாவும் இருந்தது. எங்க டிராவல்ஸ் மூலமா மொத்தமா 25 பேர் போயிருந்தோம். அதில் நான் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொண்ணு. மத்தவங்களுடைய லாங்வேஜ் தெரியலைன்னாலும் இங்கிலீஷ்ல அவங்க கூடலாம் பேச ஆரம்பிச்சேன். இப்ப அந்த டிரிப்ல வந்திருந்தவங்களில் பெரும்பாலானோர் என் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க!” என்றவர், லடாக் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

லாக்டெளனில் லடாக்! - - சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!


``தங்குறதுக்கும், பைக் ரென்ட்டுக்கும், சாப்பாட்டுக்கும் சேர்த்து முதலிலேயே டிராவல் ஏஜென்ஸியிடம் கொடுத்துட்டேன். ஃபிளைட்டுக்கு மட்டும் நாமளே பணம் செலவு பண்ணிக்கணும். மத்த செலவை டிராவல் ஏஜென்ஸி பார்த்துப்பாங்க. லடாக் போனதும் பைக் ரென்ட்டுக்கு எடுத்தோம். ஒரு நாளைக்கு 2000-லிருந்து 3000 வரை சொன்னாங்க. நான் பைக் ரைடரெல்லாம் கிடையாதுங்க. சும்மா கொஞ்ச தூரம் ஓட்டுவேன்; அவ்வளவுதான்! அதனால பின்னாடி உட்கார்ந்துதான் டிராவல் பண்ணினேன். ஹிமாலயன், ராயல் என்ஃபீல்டு போன்ற வண்டிகள் வாடகைக்கு எடுத்தோம். நான் போனது ராயல் என்ஃபீல்டு 500சிசியில்! கிட்டத்தட்ட 6 மணி நேரம் பைக்ல டிராவல் பண்ணி பல இடங்களுக்குப் போனோம். மூச்சுக்கூட விட முடியல. ஆனாலும், அந்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்ததும் பயணக் களைப்பெல்லாம் காணாமப் போயிடுச்சிங்க!

லடாக் பற்றி நாம யூடியூபில் பார்த்த வீடியோக்களில் அந்த ஊரோட நிஜ அழகை 5%தான் பார்த்திருக்கிறோம். நிஜத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு அழகான ஓர் இடம்னா அது லடாக்தாங்க!

டர்டக்(Turtuk)ன்னு ஒரு இடம்.. இளையராஜா பாடல்கள் கேட்டுட்டே நீண்ட பாதையில் நடந்து போய்ட்டு இருந்தேன். ஒரு பக்கம் ஏரி.. மறு பக்கம் பாலைவனம்... திரும்புற பக்கமெல்லாம் பனி... அப்படியே பாதை வழி இறங்கி வர்றப்போ பச்சை போர்த்திய மாதிரியான புல்வெளிகள்.. இப்படித்தான் அங்க பெரும்பாலான இடங்கள் இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு என்ஜாய் பண்ணி ரசிச்சேன்.

பாங்கோங் லேக் போயிருந்தேன். நான்கு நிற வண்ணங்களில் அந்த ஏரி ஜொலிக்கும்னு சொல்லுவாங்க. சூரிய ஒளியோட தன்மைக்கேற்ப தண்ணீரோட நிறம் மாறும். அந்த இடமும் ரொம்பவே அழகா இருந்துச்சு.

கார்துங்லா சிகரம் உலகத்திலேயே உயரமான சிகரம்னு சொல்லுவாங்க. அங்க போனது செம அனுபவமா இருந்துச்சி. பனி அதிகமா இருந்தாலும் அது ஒருவித ரிலாக்‌ஸேஷான மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்துச்சி.

லாக்டெளனில் லடாக்! - - சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!
லாக்டெளனில் லடாக்! - - சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!
லாக்டெளனில் லடாக்! - - சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!ஆறு நாள் டிரிப்.. இந்த மாதிரி லடாக்கில் சுற்றின பல இடங்களைப் பார்த்து வியந்து ரசிச்சேன். அந்த டிரிப் முடிஞ்சதும், சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ஆனா, என்கூட டிராவல் பண்ணின சில ஃப்ரெண்ட்ஸ் அங்கிருந்து நகர், காஷ்மீர் போயிருக்காங்க. அதையும் சேர்த்து பிளான் பண்ணியிருந்தா அங்கேயும் போயிருக்கலாம்.. அதை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரு பக்கம் ஃபீல் பண்ணினாலும், அடுத்த டிரிப் போகும்போது இது மாதிரி என்னென்ன விஷயங்களையெல்லாம் முக்கியமா கவனிக்கணும் என்கிற பாடத்தையும் கத்துக்கிட்டேன்.

ஒவ்வொரு டிரிப்பும் ஒவ்வொரு வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும்.. அதோடு பலதரப்பட்ட மக்களோட வாழ்க்கையைத் தெரிஞ்சிக்கவும் உதவியா இருக்கும்!” என்றவரிடம், அடுத்த சோலோ டிரிப் என்னன்னு கேட்கவும், ``இந்த வாரமே ஜெய்ப்பூர் கிளம்புறேங்க..” எனப் புன்னகைக்கிறார் ஸ்ருதி!``லாக்டவுனில் லடாக்!’’

- சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!

லாக்டெளனில் லடாக்! - - சின்னத்திரை செலிபிரிட்டியின் ஜிலீர் அனுபவம்!