Published:Updated:

"சுற்றுலா செல்லும்போது எதையெல்லாம் கவனிக்கணும்?"- விகடன் நடத்தும் இலவச வெபினார் #WorldTourismDay

எங்கே போகலாம்? எப்படிப் போகலாம்? பயணங்களில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழிகாட்ட ஆனந்த விகடன் ஒர் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது.

கொரோனாவால் வீட்டுக்குள்ளேயே இருந்து, எப்படா ஒரு லாங் ட்ரிப் போகலாம்னு நினைக்கும் தேசாந்திரிகளே, வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த ஊருக்குப் போயிடனும் என்று கல்லூரி காலத்திலிருந்து ப்ளான் போட்டு வரும் இளைஞர்களே... கண்டிப்பா இது உங்களுக்குத்தான்.

ஊர் சுத்தனும், நமக்கு பிடிச்சவங்களோட லாங் ட்ரிப் போகணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதைத் தாண்டி பயணம் நமக்கு எப்போதும் அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத்தரும்.

'ஓடையா ஓடினால்

சேரலாம் கடலையே

யாதுமாய் வாழ்வதால்

நீங்கலாம் உடலையே'

'இந்த கோவிட் பிரச்னை இருக்கும்போது எங்கபாஸ் வெளிய போறது' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கிவிட்டனர். சுற்றுலா தளங்களைத் திறக்க ஆரம்பித்துவிட்டார்கள். பாதுகாப்புடன் நம்மை நாம் எல்லாச் சூழல்களிலும் பழக்கப்படுத்திக் கொள்வதே நியூ நார்மல்.

உலகம் சுற்றலாம் வாங்க | விகடன்
உலகம் சுற்றலாம் வாங்க | விகடன்

எங்கே போகலாம்? எப்படிப் போகலாம்? பயணங்களில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழிகாட்ட ஆனந்த விகடன் ஒர் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது.

ஆனந்த விகடன் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் இணைந்து 'உலகம் சுற்றலாம் வாங்க' என்ற இலவச ஆன்லைன் வெபினாரை 27.09.2020 (ஞாயிற்றுக்கிழமை), காலை 11.30 மணி முதல் 1.00 மணிவரை நடத்துகிறது. அனுமதி இலவசம்தான், ஆனால் முன்பதிவு அவசியம்!

கீழ்காணும் லிங்கில் பதிவு செய்துகொள்ளுங்கள்: https://bit.ly/3iPYDRD திரும்பவும் சொல்றேன் நம்ம முயற்சியே நமக்கு இந்த உலகத்தை சுத்திக் காட்டும்.

படிக்கலாம்; ரசிக்கலாம்... பயணிக்கலாம், பண்படலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு