Published:Updated:

மதுர மக்கள்: 17 நாள்கள்.... தடுப்பூசி விழிப்புணர்வுக்காக காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்!

தடுப்பூசி விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம்

"செலவுன்னு எங்களுக்கு எதுவும் இருந்ததா தெரில. தங்குறது சாப்பாடுன்னு அந்தந்த ஊருல உள்ள ஆட்கள் பார்த்துக்கிட்டாங்க. அதிகபட்சமா ஒரு ஐயாயிரம்வரை எனக்கு செலவாகிருக்கும் அதுக்கு மேல இருக்க வாய்ப்பு இல்ல."

மதுர மக்கள்: 17 நாள்கள்.... தடுப்பூசி விழிப்புணர்வுக்காக காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்!

"செலவுன்னு எங்களுக்கு எதுவும் இருந்ததா தெரில. தங்குறது சாப்பாடுன்னு அந்தந்த ஊருல உள்ள ஆட்கள் பார்த்துக்கிட்டாங்க. அதிகபட்சமா ஒரு ஐயாயிரம்வரை எனக்கு செலவாகிருக்கும் அதுக்கு மேல இருக்க வாய்ப்பு இல்ல."

Published:Updated:
தடுப்பூசி விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம்

"சின்ன வயசுல இருந்தே லீவு நாள்களிலே சாதாரண சைக்கிளிலேயே குறைஞ்சது நூறு கிலோமீட்டராச்சும் பயணம் போயிடுவேன். எனக்கு வேலையே சைக்கிள்னு ஆன பிறகு இந்த கொரோனாவோட தாக்கமும் அதுக்காக விழிப்புணார்வு பயணமுமா ஒரு ரவுண்டு போகலாம்னு கிளம்புனதுதான் இந்த காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம். ஏதாவது செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா போதாது ஒரு முயற்சி பண்ணிப் பார்ப்போமேன்னுதான் கிளம்பினேன். நிஜமாவே நிறைய அனுபவங்கள்!" பேசும்போதே சிலிர்க்கத் தொடங்குகிறது கோகுல்ராஜுக்கு.

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணத்தை 17 நாள்களில் நிறைவு செய்திருக்கிறார். மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த இவர், கோவையைச் சேர்ந்த தன் நண்பர் ரகுநாத்துடன் இணைந்து இந்தப் பயணத்தைச் செய்திருக்கிறார்.
காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்
காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எம்பிஏ முடிச்சுருக்கேன். நான் இப்போ மதுரைல சின்ன சொக்கிகுளத்துல சொந்தமாக சைக்கிள் ஸ்டுடியோ வச்சுருக்கேன். சைக்கிள் பத்தின அடிப்படைப் புரிதல்கள் தனியார் கம்பெனியில வேலை பார்த்தப்போ இருந்தே பழக்கமாக இருந்தது. அதுபோக சைக்கிள் பயணமே எனக்கு விருப்பமான ஒன்றும் கூட! இவ்வளாவு விஷயங்கள் இருந்தும் இந்த கொரோனா செய்திகள் ரொம்பவே மன உளைச்சலை கொடுத்துச்சு. இதுக்கு ஒரே தீர்வு தடுப்பூசியாகத்தான் இருக்க முடியும். ஆனாலும் இந்தத் தடுப்பூசி பத்தின விழிப்புணர்வை உண்டு பண்ண இந்தப் பயணத்தைத் தொடங்கினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொழி தெரியாது, உணவுப் பழக்கமுறை, காலநிலைன்னு எல்லாமே அவ்வளவு பழக்கம் இல்லை. ஆனாலும் மனிதர்களை மட்டுமே நம்பி ஒரு பயணத்தைத் தொடங்குனோம். பஞ்சாப், ஹரியானா, டெல்லின்னு எல்லா மாநிலத்திலையும் அங்கே உள்ள சைக்கிளிஸ்டுகளோட சேர்ந்து பயணிச்சோம். அவுங்க உதவியோட அந்தந்த லோக்கல் பகுதி மக்கள்கிட்ட சமூக இடைவெளி, தடுப்பூசி விழிப்புணார்வுன்னு பிரசாரம் பண்ண ஆரம்பிச்சோம். ரொம்பவே நல்ல வரவேற்பு இருந்தது.

காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்
காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்

இந்த 17 நாள்களுமே வாழ்க்கையின் மறக்க முடியாத நாள்களாகத்தான் எனக்கு இருந்தது. முதல் முதலில் காஷ்மீர்ல இருந்து ஆரம்பிச்சப்போ அங்க உள்ள பெரும்பாலான மக்கள் வீட்டுல டிவி வசதியே கிடையாது அவுங்களோட பொழுதுபோக்கு எல்லாமே அவுங்க தெருவாசிகளோடதான் இருக்கும். ஆண் பெண் பேதமில்லாம சமையல் வேலை பண்ணிக்கிறாங்க. அதுவும் இந்த கொரோனா வந்ததுல இருந்து ரொம்பவே கவனமா தான் பழகுறாங்க. மனிதனுக்கன இடைவெளிய இந்த கொரோனா குறைச்சுடுச்சேன்னு வருத்தம் இருந்துச்சு. எந்த மாநிலத்திலயுமே எங்கள வெளி ஆளு அப்படிங்கிற உணர்வோடவே எங்களைப் பார்க்கல. அவுங்களோட சொந்தகாரங்கள்ல ஒருத்தனா நினைச்சுதான் வீட்டுல தங்க வச்சுக்கிட்டாங்க. சாப்பாடு போட்டங்க.

அப்படியே பஞ்சாப் பக்கம் வந்தா நிலைமை ரொம்ப மோசமா இருந்துச்சு. எல்லாருமே தினக்கூலிகளாக இருந்தாங்க. அவுங்க இந்த கொரோனா கால ஊரடங்குல எல்லாம் எப்படி சரிபண்ணி வாழ்வாதரத்த காப்பாத்திக்க போறாங்கன்னு தெரில.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீர் டெல்லி பஞ்சாப் உ.பி, மஹாராஷ்டிரா, தெலுங்கானா கர்நாடகான்னு தான் எங்க வழித்தடம் இருந்தது. ஒரு நாளைக்கு 250ல இருந்து 300 கிலோமீட்டர் வரைக்கும் சைக்கிள் அழுத்துவோம். சைக்கிள்ல சின்ன சின்ன பிரச்னைகள் வரும். சைக்கிள் பத்தின பராமரிப்பு வேலைகள் எல்லாம் தெரியுங்கிறதால அது எங்களுக்கு பெரிய விஷயமா தெரில. ஒரு இடத்துல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி, போற இடத்துல ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா இன்ஸ்டாகிராமிலோ அல்லது ஃபேஸ்புக்கிலயோ போஸ்ட் போட்டு தகவல் தெரிவிச்சுருவோம். அதைப்பார்த்துட்டு அந்த ஊருல உள்ள யாரவது ஒருநபர் எங்கள அவுங்க விருந்தினரா அழைச்சுட்டுப்போவாங்க. இப்படித்தான் இந்த 17 நாட்களும் இருந்தன.

காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்
காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்

செலவுன்னு எங்களுக்கு எதுவும் இருந்ததா தெரில. தங்குறது சாப்பாடுன்னு அந்தந்த ஊருல உள்ள ஆட்கள் பார்த்துக்கிட்டாங்க. அதிகபட்சமா ஒரு ஐயாயிரம்வரை எனக்கு செலவாகிருக்கும் அதுக்கு மேல இருக்க வாய்ப்பு இல்ல. 17 நாள் பயணமுமே இன்னும் சீக்கிரத்துல முடிஞ்சுருக்க வேண்டிய ஒண்ணுதான். தினம் எப்படியும் ஒரு ரெண்டு பஞ்சராச்சும் ஆகிரும். அடிப்படையில் சைக்கிள் டெக்னீசியன் அப்டிங்கிறதால இதை சரி பண்றதுல பிரச்னை இல்லைன்னாலும் அதுக்கான நேரம் அதிகம் எடுத்துக்கிச்சு.

இந்தியா முழுவதும் தடுப்புசிக்கு விழிப்புணர்வுக்காக போயாச்சு. இப்போ என்னோட தடுப்பூசி முறைக்காக காத்திருக்கேன். சீக்கிரம் தடுப்பூசி போடணும்."

பயன்படுத்திய சைக்கிள் விவரம்:

MONTRA HYBRID ALUMINUM FRAME

21 SPEED GEAR

POWER BREAK

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism