Published:Updated:

``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”

பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
பார்வதி

`புதுப்புது அர்த்தங்கள்' என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் பார்வதி. சமீபத்தில் தனது பிறந்தநாளை காஷ்மீர் குளிரில் செலிபரேட் செய்திருக்கிறார்.

``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”

`புதுப்புது அர்த்தங்கள்' என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் பார்வதி. சமீபத்தில் தனது பிறந்தநாளை காஷ்மீர் குளிரில் செலிபரேட் செய்திருக்கிறார்.

Published:Updated:
பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
பார்வதி

`கடந்த 4 ஆண்டுகளாக ட்ரிப் போவதை வழக்கமா வச்சிருக்கேன். நான் டிராவல் ஏஜென்சி மூலமா டிரிப் போக எப்பவும் விரும்பமாட்டேன். அதற்குப் பதிலாக, நான் போக ஆசைப்படும் இடங்கள் குறித்துத் தேடித் தகவல்கள் சேகரித்து, எக்ஸ்ப்ளோர் பண்ண விரும்புவேன். டிராவல் ஏஜென்சி மூலமா போனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டியிருக்கும். நம்மோடு வந்தவங்க எல்லாரும் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியிருக்கும். அதுவே, நாமளா போகும்போது புதிதாகப் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்!' என்கிறார் சின்னத்திரை செலிபிரிட்டி பார்வதி.

விஜே, நடிகை என பன்முகம் கொண்டவர் பார்வதி. தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `புதுப்புது அர்த்தங்கள்' என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளை காஷ்மீர் குளிரில் செலிபரேட் செய்திருக்கிறார். அந்த ட்ரிப் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து...

``விஜேவாக இருக்கும்போது, வேலை நிமித்தமாகப் பல ஊர்களுக்கு டிராவல் பண்ணியிருக்கேன். கடந்த நான்கு வருடங்களாக தனியா நண்பர்களுடன் சேர்ந்து டிரிப் போறதை வழக்கமா வச்சியிருக்கேன். இந்த முறை, என்னுடைய பிறந்தநாளை காஷ்மீரில் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.

நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் மஞ்சு, திவ்யா- காஷ்மீர் போகலாம்னு முடிவு பண்ணினோம். ட்ரிப் சார்ந்த எல்லா பொறுப்பையும் என்கிட்ட கொடுத்துட்டாங்க. நானும், மஞ்சுவும் 15 வருட நண்பர்கள். எங்களுடைய வேவ் லென்த் ஒரே மாதிரியாதான் இருக்கும். இந்த முறைதான் திவ்யா எங்க கூட வந்தா. அதனால, மூன்று பேரும் செமையா என்ஜாய் பண்ணினோம்.

காஷ்மீரில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்னன்னு இங்கேயே தேடி எடுத்து வச்சிட்டேன். காஷ்மீரைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் நகரில் இருந்துதான் போகணும். அதனால, நகரில் தங்கலாம்னு முடிவு பண்ணினேன். இங்கேயே நெட்ல தேடிப் பார்த்து நல்ல ஹோட்டல் எதுன்னு ரிவ்யூ படிச்சு ஹோட்டல் புக் பண்ணிட்டேன்.

``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”
``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”
``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”

முதல் நாள் ரீநகரில் தங்கிட்டோம். ரீநகரில் ஐந்து கார்டன் முக்கியமா பார்க்க வேண்டிய டூரிஸ்ட் பிளேஸ்னு சொல்லுவாங்க. அந்த இடங்களை கவர் பண்ணினோம். பிறகு, Aro valley, Hagan Valley, Betaab Valley, chandan valley என்கிற லேக் ஏரியாவைச் சுற்றிப் பார்க்க முடிவெடுத்தோம். அங்கே ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

சில இடங்களுக்கு ஹார்ஸ் ரைடிங் மூலமாகவும், சில இடங்களுக்கு கார் மூலமாகவும் போகணும். அங்கே ரொம்ப முக்கியமான விஷயம் - உங்களுக்குப் பேரம் பேசத் தெரிஞ்சிருக்கணும். ஹார்ஸ் ரைடிங்கிற்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 வரைக்கும் சொல்லுவாங்க. பேரம் பேசினா கண்டிப்பா குறைப்பாங்க. டூரிஸ்ட் ஏஜென்சி மூலமா போகிறவங்க இதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை.. ஏன்னா, ஏஜென்சி அவங்ககிட்ட குறைச்சு பேசித்தான் ரூபாய் ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. ஆனா, தனியா எங்களை மாதிரி போகிறவங்க தாராளமா பேரம் பேசலாம். நாங்க 800 ரூபாய்க்குத்தான் ஹார்ஸ் ரைடிங் போனோம்.

காரில் போகும்போது அங்கே பேரம் பேச வேண்டியதில்லை. ஏன்னா, போர்டில் அவங்களே இவ்வளவு ரூபாய்னு எழுதியிருப்பாங்க. அங்கே போய் அந்த இடங்களை எல்லாம் செமயா என்ஜாய் பண்ணி போட்டோஸ் எடுத்தோம்.

Sonamarg என்றொரு இடத்தில், இரண்டாவது நாள் தங்குறதுக்காக இங்கே இருந்தே ஹோட்டலில் டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். ஆனா, டிக்கெட் புக் ஆகியிருக்கானு செக் பண்ணேனே தவிர, ஹோட்டலுக்கு போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணலை. இங்கே ஹோட்டலில் வந்து ரூம் செக் பண்ணும்போது, புக்கிங் கேன்சல் ஆன விஷயத்தைச் சொன்னாங்க. அடுத்த முறை, டிக்கெட் புக் பண்ணும்போது ஹோட்டலுக்கு போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கணும் என்கிற பாடத்தைக் கத்துக்கிட்டேன். ரூம் இல்லாததனால புக்கிங் ஆப்பில் பேசி பணம் ரீஃபண்ட் வாங்கிட்டு அடுத்த நாளும் நகரிலேயே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம்.

கடைசி இரண்டு நாட்கள் Pahalgam-ல் தங்கினோம். ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்கும்போது மறக்காம அங்கே பெட் ஹீட்டர், ஹாட் வாட்டர் எல்லாம் இருக்கான்னு பார்க்கிறது ரொம்பவே முக்கியம். அங்கே ரொம்ப பனிப்பொழிவு இருக்கும். குளிரைச் சமாளிக்க இதெல்லாம் கண்டிப்பா தேவை. தங்கும் இடங்களில் பைப் மாதிரி ஒரு ஹீட்டர் வச்சிருப்பாங்க; அது இல்லைன்னா ஏசி ஹீட்டர் ஆவது இருக்கணும்.

என்னோட வாழ்க்கையில் ஸ்னோ ஃபால் ஆகிறதைப் படங்களில் பார்த்துத்தான் ரசிச்சிருக்கேன். அதை முதன்முறையா நேரடியா அனுபவிக்கும்போது செம ஃபீலிங்கா இருந்துச்சு. இன்டர்நேஷனல் டிரிப் அளவிற்கு ஒர்த் ஆன டிரிப்தான் காஷ்மீர் டிரிப்னு எனக்குத் தோணுச்சு.

இன்னொரு முக்கியமான விஷயம், காஷ்மீரில் போஸ்ட் பெய்டு சிம் மட்டும் தான் ஒர்க் ஆகும். ஃப்ரீ பெய்டு சிம் ஒர்க் ஆகாது. அதை கவனமா வச்சிக்கோங்க. இல்லைன்னா நீங்க காஷ்மீரில் ஆதார் அட்டையெல்லாம் கொடுத்து புதுசா சிம் ஒன்று வாங்க வேண்டியிருக்கும். எங்க மூணு பேரில் ஒருத்தரிடம் போஸ்ட் பெய்ட் சிம் இருந்ததனால, நாங்க அதிலேயே வீட்டுக்குப் பேசிக்கிட்டோம்.

``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”
``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”

அதேமாதிரி, காஷ்மீரில் சுற்றிப் பார்க்க சில இடங்களுக்குக் காரில் போக வேண்டியிருக்கும். நாங்க நகரில் ஹவுஸ் போர்டு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அந்த ஹோட்டலிலேயே எங்களுக்கு கார் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தாங்க. காருக்கு ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் வாடகை. ஆனா, அந்தக் கார்கூட சில ஏரியாவிற்குள் நுழையாது. உதாரணத்துக்கு, நாம ஊட்டி மலைக்குப் போகணும்னு வச்சுக்கோங்க. கோயம்புத்தூரில் இருந்து ஒரு காரில் வருகிறோம். ஆனா, ஊட்டி மலை ஏற அந்தக் காருக்கு அனுமதி கிடையாதுன்னா என்ன பண்ண? அப்படி ஒரு சிச்சுவேஷன்.

வந்த காரை கீழே வெயிட் பண்ணச் சொல்லிட்டு, மலை ஏறுவதற்கென இருக்கும் கார்களை மட்டும் பயன்படுத்தணும். அப்படித்தான் இங்கேயும்! குல்மார்க் போய்ட்டு வர்றதுக்கு மூன்று பேருக்கும் சேர்த்து 1,000 ரூபாய் வாங்கினாங்க.

காஷ்மீரில் அவங்க அணியுற மாதிரியான உடைகள் வாடகைக்குக் கொடுப்பாங்க. அதைப் போட்டுட்டு ஃபோட்டோ எடுக்க 250 ரூபாய். நாங்க `போட்டோஸ் வேண்டாம்.. ஃபோனிலேயே ரீல்ஸும், ஃபோட்டோவும் எடுத்துக்கிறோம். டிரெஸ் மட்டும் கொடுங்க’னு கேட்டதால, 100 ரூபாய்க்கு காஸ்ட்யூம் மட்டும் வாடகைக்கு எடுத்தோம்.

நாங்க ஹவுஸ் போர்டில் இருந்து அடுத்த இடத்திற்குப் போக Shikara Ride பயன்படுத்தினோம். அந்த ரைடு ஃப்ரீ தான். ஹோட்டலில் இருந்தே கொடுத்திடுவாங்க. பஸ் ஸ்டாப்ல இருந்து நாம தங்கி இருக்கிற இடத்துக்கு இந்த ரைடு மூலமா வரணும்.

ஒவ்வொரு ஊரில் இருந்தும் நினைவாக ஏதாவது கொண்டு வர்றது என் வழக்கம். காஷ்மீரில் இருந்து கல் கொண்டு வந்திருக்கிறேன்! அழகான பனிப்பொழிவு, கடுமையான குளிர், அழகான இயற்கை எழில்! வாவ்! இன்னும் காஷ்மீர் குளிரும் நினைப்பும் எங்க உடம்பையும் மனசையும் விட்டுப் போகலை!'’ என்கிறார் பார்வதி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”
``காஷ்மீர் குளிர்… இன்னும் நடுங்குது!”

காஷ்மீருக்கு பட்ஜெட் எவ்வளவு ஆச்சு?

``நான் வெஜிட்டேரியன் என்பதால், அங்கே எனக்குச் சாப்பாடு ரொம்பவே நல்லா இருந்துச்சு. ஷூட்டிங் இருக்கிறதனால முன்கூட்டியே ப்ளான் பண்ணி டிக்கெட் புக் பண்ண முடியலை. கடைசி நேரத்தில் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணதால டூ-வே 20,000 ஆச்சு. ஹோட்டல் பொறுத்தவரை நான் ஹவுஸ்போர்டில் தங்க விரும்பினேன். அதற்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் ஆச்சு. அது தவிர, மற்ற இடங்களில் தங்குவதற்கும் கிட்டத்தட்ட 4,000 ரூபாய் வரைக்கும் ஆச்சு. மூன்று பேர் ஷேரிங்கிறதால பெருசா தெரியலை. என்னோட டிரிப் பொறுத்தவரைக்கும் ஐந்து நாட்கள் சுற்றிப் பார்க்க ஒருத்தருக்கு 50,000 ஆச்சு. பட்ஜெட் போட்டுப் பண்ணியிருந்தால் 30, 40-க்குள் முடிச்சிருக்கலாம்!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீருக்குப் போனா இதெல்லாம் கவனிக்கணும்!

காஷ்மீர் குளிரைத் தாங்கும் அளவுக்கு ஆடைகள் இருக்கணும். நம்ம ஊரிலேயே வின்டர் ஷாப் கடைகள் இருக்கும். அங்கே நாம டிரிப் போகும் ஊருக்கு ஏற்ற மாதிரியான ஆடைகளை வாங்கிட்டுப் போறது நல்லது. க்ளோவ்ஸ், சாக்ஸ், குளிர் தாங்கும் அளவுக்கான ஃபேண்ட், ஷர்ட் இதெல்லாம் வாங்கிட்டுப் போகணும்.

காஷ்மீரில் நகர், குல்மார்க்( Gulmarg ), பஹால்கம் ( Pahalgam), சோனாமார்க் (Sonamarg) ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய டூரிஸ்ட் ஸ்பாட்!

ஹோட்டல் பொறுத்தவரை சாதாரண ஹோட்டல்களும், ஹவுஸ் போர்டும் இருக்கு. எனக்கு பர்சனலா ஹவுஸ் போர்டு சூழல் பிடிச்சிருந்ததனால, அங்கே தங்கியிருந்தேன். மூன்று பேருக்குக் காலை உணவுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 5,000 ரூபாய். ஹீட்டர், ரூம் ஹீட்டர், பெட் ஹீட்டர் அல்லது ஏசி ஹீட்டர் இவற்றில் ஏதாவது ஒன்றாவது இருக்கா என செக் செய்துவிட்டு ரூம் புக் பண்றது அவசியம்!

ஹோட்டல் புக்கிங் பொறுத்தவரை Goibibo, MakeMyTrip, Airbnb போன்ற ஆப்களில் ரிவ்யூ படித்துவிட்டு பிடித்த ஹோட்டல்களை புக் செய்யலாம். ஃபுட் ஆப்களில் கம்ப்ளைன்ட், ரீஃபண்ட் வாங்கும் மாதிரி இந்த ஆப்களில் - ஹோட்டல்கள் குறித்து ஏதேனும் பிரச்னைகள், புக்கிங் கேன்சல் பிரச்னைகள் போன்றவை இருந்தால் புகார் அளிக்கலாம் என்பதால் இந்த வகை ஆப்களை நம்பி புக் பண்ணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism