Published:Updated:

வெள்ளைக்காரங்களுக்கு வேட்டி - சேலை!

சங்கீதா ராமசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கீதா ராமசாமி

‘`தமிழ்நாட்டை இந்தியாவின் கலாசார மையம்னு சொல்றோம். வெளிநாட்டுலேருந்து இங்க வரும் டூரிஸ்ட்டுகள் இதை ரொம்ப நல்லா புரிஞ்சுவெச்சிருக்காங்க.

யணங்களின் முக்கிய நோக்கமே அந்தந்த இடங்களின் மனிதர்கள், கலாசாரம், உணவு வகைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதும், முடிந்தால் கொஞ்ச நாள்கள் அதன்படி வாழ்ந்துபார்ப்பதும்தான். எண்ணற்ற கலாசாரங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இந்தியாவிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவதன் காரணமும் இதுவே. பயணிகளின் அந்த ஆர்வத்தையே தனது பிசினஸ் ஐடியாவாக மாற்றியிருக்கிறார் சங்கீதா ராமசாமி. சென்னையில் ‘எத்னிக் எக்ஸ்பீரியன்சஸ்’ என்ற பெயரில் இவர் நடத்தும் ஸ்டூடியோ, கலாசாரப் பரிமாற்றங்களுக்கானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`தமிழ்நாட்டை இந்தியாவின் கலாசார மையம்னு சொல்றோம். வெளிநாட்டுலேருந்து இங்க வரும் டூரிஸ்ட்டுகள் இதை ரொம்ப நல்லா புரிஞ்சுவெச்சிருக்காங்க. ஏன் பொட்டு வைக்கிறோம், ஏன் பூச்சூடறோம், காலில் மெட்டியும் கைகளில் வளையலும் ஏன் போடறோம்... இப்படிப் பல கேள்விகளுக்கு பதில்கள் தெரிஞ்சுக்கிறதுல நம்மைவிடவும் வெளிநாட்டவர்கள் ஆர்வம் காட்டறாங்க. அவங்களுடைய அந்த ஆர்வம்தான் என் ஐடியாவின் முதல் புள்ளி...’’ எனச் சொல்லும் சங்கீதாவின் ஸ்டூடியோவில் மதராசப்பட்டி னத்தின் நாஸ்டால்ஜியாவை ஃபீல் பண்ண முடிகிறது.

வெள்ளைக்காரங்களுக்கு வேட்டி - சேலை!

‘`ஜப்பான் போயிருந்தபோது அவங்களுடைய பாரம்பர்ய உடையான கிமோனோவை வாங்கிப் போட்டுக்கிட்டு அவங்களைப் போலவே மேக்கப் பண்ணிக்கிட்டு போட்டோஸ் எடுத்துக்கிட்டேன்.அந்த அனுபவம் ரொம்பவே பிடிச்சுப்போனதால அடுத்தடுத்து நான் டிராவல் பண்ணின எல்லா இடங்களிலும் இதைச் செய்ய ஆரம்பிச்சேன்.சென்னைக்கு வரும் வெளிநாட்டுக்காரங்களுக்கும் இப்படியொரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸைக் கொடுக்கணும்னு நினைச்சுதான் எத்னிக் எக்ஸ்பீரியன்சஸ் ஆரம்பிச்சேன்...’’ என இன்ட்ரோ கொடுப்பவர் சென்னைக்கு வரும் வெளிநாட்டவருக்கு உடை முதல் உணவுவரை தமிழ்க் கலாசாரத்தைப் பற்றி அனுபவப் பாடமெடுத்து அனுப்புகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரிடம் வரும் வெளிநாட்டவருக்கு நம் பாரம்பர்ய உடைகளைப் பரிசளித்து அழகுபார்த்து போட்டோ ஷூட்டும் செய்து கொடுக்கிறார்.

‘ஃபாரீனரா இந்தியா வரும்போது பார்த்த பல விஷயங்கள் அவங்களுக்குள்ளே நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கும். ஏன் பொட்டு வைக்கிறீங்க, பூ வைக்கிறீங்க, வீட்டு வாசல்ல ஏன் கோலம் போடறீங்க, கோயிலுக்குப் போனா ஏன் தீபாராதனை காட்டறாங்க, தீர்த்தமும் விபூதி குங்குமமும் கொடுப்பதன் பின்னணி என்ன... இப்படி எக்கச்சக்கமான கேள்விகளைக் கேட்பாங்க. நான் இங்கேயே பிறந்து வளர்ந்ததால கிட்டத்தட்ட அவங்க கேட்குற எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் தெரியும். அப்படி ஒருவேளை என் கிளையன்ட்ஸ் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தெரியலைன்னாலும் உடனடியா தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு விளக்கிடுவேன். இதை வெறும் உடையலங்காரம், மேக்கப் சம்பந்தப்பட்ட விஷயமா மட்டும் நான் பார்க்கலை. அவங்களுடைய கலாசாரங்களைப் பற்றி நான் தெரிஞ்சுக்கவும் நம்முடைய கலாசாரத்தை அவங்களுக்குப் புரியவைக்கவும் மிகப்பெரிய வாய்ப்பா பார்க்கறேன்’’ எனப் பெருமையாகச் சொல்லும் இந்தக் கலாசாரக் காதலிக்கு ஜப்பான், கொரியா, அமெரிக்கா, தைவான், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் டூரிஸ்ட்டுகள் வந்தபடி இருக்கிறார்கள்.

உடை, மேக்கப், போட்டோ ஷூட் ஆகியவற்றோடு சமையல் மற்றும் ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸையும் பரிசளிக்கிறார் சங்கீதா.

வெள்ளைக்காரங்களுக்கு வேட்டி - சேலை!

‘`நம்முடைய உணவுகளைப் பற்றித் தெரிஞ்சுக்கிறதுல ஃபாரினர்ஸுக்கு அலாதி ஆர்வம் இருக்கிறதைப் பார்க்கலாம். பேக்கேஜ் புக் பண்ணினதும் நான் அவங்களுக்கு மெனு அனுப்பிடுவேன். அதுலேருந்து அவங்க தேர்ந்தெடுக்கும் அயிட்டங்களை அவங்க இங்கே வந்ததும் சமைக்கச் சொல்லிக் கொடுப்பேன். எங்கேயோ அவங்க ரசிச்சுச் சாப்பிட்ட மசால்தோசையையும் உளுந்து வடையையும் அவங்க கையாலேயே செய்து சாப்பிடற அனுபவம் அவங்களை செம ஹேப்பியாக்கும்.

வெளிநாட்டுக்காரங்களுக்கு நம்மூர்ல ஷாப்பிங் பண்றது ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனா, மொழிப்பிரச்னை, அதிக விலை சொல்லி ஏமாத்திடுவாங்களோன்னு எல்லாம் யோசிச்சு ஷாப்பிங் போகத் தயங்குவாங்க. அதனால அவங்க இந்தியா வரும்போதே அவங்களுடைய ஷாப்பிங் தேவைகளைக் கேட்டுப்பேன். சென்னையில சரியான இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் பேரம் பேசி வாங்கித் தருவேன். இத்தனை அனுபவங்களையும் பார்த்தவங்க சென்னையை வாழ்க்கையில் மறக்கவே மாட்டாங்க’’ எனச் சிரிக்கிறார் சங்கீதா.