Published:Updated:

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

குற்றாலம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றாலம்

தா.ஷீபா

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

தா.ஷீபா

Published:Updated:
குற்றாலம்
பிரீமியம் ஸ்டோரி
குற்றாலம்

குற்றாலம் என்றாலே அருவிகள்தான் சுற்றுலாப் பயணிகள் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதைத் தாண்டியும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், அணைக் கட்டுகள், கடைவீதிகள் என அங்கு பல இடங்கள் உள்ளன. அவற்றை இங்கே பகிர்கிறோம்... உங்கள் டூர் லிஸ்ட்டில் குறித்துக் கொள்ளுங்கள்!

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

குண்டாறு அணை... படகு சவாரி!

குற்றாலத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும், செங்கோட்டையிலிருந்து 5 கி.மீ தூரத் திலும் இருக்கிறது 1983-ல் கட்டிய குண்டாறு அணை. கண்ணுப்புள்ளி மெட்டு கிரா மத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் என அந்த இடமே ரம்மியம். ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் களைகட்டும். இங்குள்ள பூங்காவில் புல்வெளி, சிலைகள், விளையாட்டுச் சாதனங்கள் உள்ளன. அணை நிரம்பி அருவிபோல விழும்; கரைகளில் குளிக்கவும் படகு சவாரியும் செய்யலாம்..

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

குற்றாலநாதர் கோயிலும் தென்காசியும்!

பேரருவிக்கரையில் அமைந்துள்ளது, குற்றாலநாதர் கோயில். சிவபெருமான் நடனம் புரிந்த பஞ்ச சபைகளில் இது `சித்திர சபை' எனக் கூறப்படுகிறது. கோயிலை மேலிருந்து பார்க்கும்போது சங்கு வடிவில் இருக்கும். அழகான ஓவியங்கள், குறிப் பாக, மூலிகை ஓவியங்கள் கண்களைக் கவரும். சித்திரை மாத முழு நிலவின்போது கோயிலில் பத்து நாள்கள் நடக்கும் சிறப்புப் பிரார்த்தனை வெகு விசேஷம்.

வட இந்தியாவில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம், காசி. அதுபோல தென்னிந்தியாவில் பெருமை பெற்ற வழிபாட்டுத் தலமாக ‘தென்’காசி அழைக்கப்படுகிறது. குற்றாலம் செல்பவர்கள், தவறாமல் தரிசிக்கும் தலங்களில் முக்கியமாக இருக்கிறது இந்தத் தென்காசி.

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

வனத்துறையின் கட்டுப்பாட்டில்... செண்பகா தேவி அம்மன் கோயில்!

குற்றாலம் மெயின் அருவியில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் காட்டுக்குள் அருவிகள் நடுவில் உள்ளது செண்பகா தேவி அம்மன் கோயில். ஆலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமைப்புகளுடன் உள்ளது. லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் செண்பகா தேவி அம்மன் கருவறையில் காட்சி தருகிறாள். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் அகத்தியர் வழிபட்ட மூன்றரை அடி உயர பாலவிநாயகர் சிலை இருக்கிறது. அந்தச் சிலை இருக்கும் மலையின் அமைப்பு, சிவலிங்கம் போல இருக்கும். இந்த வனப்பகுதி வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

குற்றால கிறிஸ்துவ ஆலயம்... இரவில் கலை நிகழ்ச்சிகள்!

குற்றாலம் காவல் நிலையம் அருகில் உள்ளது குற்றால மறுரூப ஆலயம். இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் மூன்று நாள்கள் ஸ்தோத்திர பண்டிகை கொண்டா டப்படுகிறது. அப்போது பல ஊர்களில் இருந்தும் மத வேறுபாடின்றி குடும்பம் குடும்பமாக வரும் மக்கள் காலையில் அருவி யில் குளித்துவிட்டு ஆலயம் வருவார்கள். இரவில் கிறிஸ்துவப் பாடல்களுக்குக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

கடைவீதி கலகலக்க..!

மெயின் அருவிக்குச் செல்லும் பாதையில் மிட் டாய் கடைகள், விளையாட்டுப் பொருள்கள் கடைகள், வளையல் கடைகள், உணவுக் கடைகள், ஆடையகங்கள், இனிப்புக் கடைகள் என வரிசையாகப் பல கடைகள் உள்ளன. ஐந்து ரூபாயிலிருந்து ஷாப்பிங் செய்யலாம்.

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

மனமகிழ் இடங்கள்... சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்!

மெயின் அருவிக்குச் செல்லும் வழியில் இரண்டு பூங்காக்கள் உள்ளன. ஒன்று சிறுவர் பூங்கா. இங்கு ராட்டினங்கள், ஊஞ்சல்கள், 3D படங்கள், 3D விளையாட்டுகள் உள்ளன. மேலும், மீன்கள், ஆமைகள், பாம்புகள், முயல்கள், லவ் பேர்ட்ஸ் ஆகியவை கூண்டில் வளர்க்கப்படும் உயிரியல் பூங்காவும் அதே வளாகத்தில் உள்ளது. பெரியவர்களுக்கான பூங்காவில், அடர்ந்த மரங்கள், அதிக இருக்கைகள் உள்ளன. குழந்தைகளுக்கான ராட்டினங்களும் உள்ளன. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குளத்தின் நடுவே தமிழ் அன்னை சிலையும், அதைச் சுற்றி இளங்கோவடிகள், கம்பர், திருவள்ளுவர், ஔவையார், சேர, சோழ, பாண்டியர் சிலை களும் உள்ளன.

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

ராமநதி அணைக்கட்டு... ஆயிரம் படிகள்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா கடையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடியில் உள்ளது ராமநதி அணைக்கட்டு. 1963-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ராம நதி, கடனாநதி மற்றும் ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப் பட்டு, 1974-ம் ஆண்டு இந்த அணைகளை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் வாரத்தில் ஒருநாள் அணையைச் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயம் செழிக்க வேண்டி விமரிசையாக உணவு விருந்து நடத்துவார்கள். இதற்கு `அசன விருந்து' என்று பெயர். கிராம மக்கள் தங்களால் இயன்ற அரிசி, காய்கறிகள், பணத்தைக் கொடுப்பார்கள். கிராம நிர்வாகத்தினரும் பணம் செலவழித்து இந்த விருந்தை நடத்துவார்கள். சாதம், சாம் பார், ரசம், பலாக்காய்கூட்டு எனத் தேக்கு இலையில் இந்த விருந்து பரிமாறப்படும். ஊரே திரண்டு கலந்துகொள்வார்கள். அணையின் அருகேயுள்ள மலையிலிருக்கும் ஆயிரம் படிகளில் ஏறிச்சென்றால், தோரண மலை முருகனை தரிசிக்கலாம்.

இனி உங்களின் குற்றால குதூகலம் அருவியோடு முடிந்துவிடாது அல்லவா?!

****

2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!
2K kids: அருவி தவிர என்னவெல்லாம் பார்க்கலாம்?!

குற்றாலம்... ரூட் மேப்!

திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பசுமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு செல்ல, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு ஒன்றரை மணி நேரம் பயணித்து, தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குற்றாலம் செல்லலாம். மதுரையில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. மதுரை மற்றும் சென்னையிலிருந்து ரயில் போக்குவரத்து மூலம் தென்காசி சென்று, அங்கிருந்து 5 கி.மீ பயணத்தில் குற்றாலத்தை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism