Published:Updated:

கொளுத்தும் வெயில்; முட்டலுக்கு ஜில்லுனு ஒரு எட்டு போயிட்டு வாங்க!

முட்டல்

நாட்டுக் கோழி, சேவல் போன்றவற்றை நாமே தேர்ந்தெடுத்தால், கொஞ்ச நேரத்தில், சூப் – வறுவல் – குழம்பு என்று ஜமாய்த்து விடுகிறார்கள். எல்லாமே மண்பானையில், சிவப்பு மிளகாய் – மிளகு – உள்ளூர் சமையல் பொடி என்று கிராமத்து மணம் கமழக் கமழப் பரிமாறுகிறார்கள்.

கொளுத்தும் வெயில்; முட்டலுக்கு ஜில்லுனு ஒரு எட்டு போயிட்டு வாங்க!

நாட்டுக் கோழி, சேவல் போன்றவற்றை நாமே தேர்ந்தெடுத்தால், கொஞ்ச நேரத்தில், சூப் – வறுவல் – குழம்பு என்று ஜமாய்த்து விடுகிறார்கள். எல்லாமே மண்பானையில், சிவப்பு மிளகாய் – மிளகு – உள்ளூர் சமையல் பொடி என்று கிராமத்து மணம் கமழக் கமழப் பரிமாறுகிறார்கள்.

Published:Updated:
முட்டல்
‘Roland Sands’ என்றொரு மிகப் பெரிய ஆட்டோமொபைல் டிசைனர், தன் கைப்பட பெயின்ட் செய்த - ஒரு மாதிரி மஞ்சள் மற்றும் கிரே கலர் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் எனக்கு மோட்டார் விகடன் வாசகர் அஷ்வினின் சார்பாக என் கைக்குக் கிடைத்தது. கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் காத்துக் கொண்டே இருந்தது. ‘அர்ஜூன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மாதிரி ஸ்க்ராம்ப்ளரைத் தூசு தட்டிக் கிளப்ப நேரம் வந்துவிட்டது.

ஸ்க்ராம்ப்ளர் ஒரு ரெட்ரோ ஸ்டைல் க்ரூஸர் பைக் மட்டுமில்லை; ஒரு அட்வென்ச்சர் பைக்கும்தான். இரண்டு பக்கம் தடிமனான பிரலெ்லி டயர்கள், ஏபிஎஸ் கொண்ட ஸ்க்ராம்ப்ளரை வைத்துக் கொண்டு சும்மா ஹைவேஸில் பறப்பதைவிட, ஒரு கரடுமுரடான, பாதையே இல்லாத பாதையில் போவதுதான் மரியாதையான ரைடாக இருக்கும். சேலம் மாவட்டம் ஆத்தூரில், நிறைய பேருக்குத் தெரிந்திராத, பெரிதும் பிரபலம் அடையாத ஓர் அருவி மற்றும் ட்ரெக்கிங் ஏரியா இருக்கிறது. அதற்குப் பெயர், ஆனைவாரி முட்டல். இதை ஆனைமடுவு என்றும் சொல்கிறார்கள்.

ஸ்க்ராம்ப்ளர்
ஸ்க்ராம்ப்ளர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்களில் முட்டல் காட்டுப்பகுதிக்குள் போவது என்பது சாத்தியமே இல்லை. சுமார் 2.5 கிமீ தூரம் நடந்துதான் ஆக வேண்டும். இதுவே பைக்குகள் என்றால், அருவிக்கு 300 மீட்டருக்கு முன்பே பார்க் செய்துவிடலாம்.

இனி ஓவர் டு முட்டல்.

முட்டல் ட்ரெக்கிங்கில் பாதையில் கவனம்
முட்டல் ட்ரெக்கிங்கில் பாதையில் கவனம்

சேலம்தான் முட்டலுக்கு ஒரு நாள் டூரிஸ்ட் ஸ்பாட். எனவே, முட்டலில் இருந்துதான் டுகாட்டியைக் கிளப்பினேன். ‘அதிகாலையே கிளம்பிடணும்’ என்று வழக்கம்போல் திட்டம் மட்டும்தான் போட முடிந்தது. வெயில் உறைத்த பிறகுதான் சீக்கிரம் கிளம்பணுமே என்று உறைத்தது. ஆனால், லேட்டாகக் கிளம்பியது நல்லதாகப் போயிற்று. பள்ளிப்பாளையம் சிக்கன், மாம்பழம்போல், சேலத்துக்கு இன்னொரு ஸ்பெஷல் உண்டு. அது, அம்மாபேட்டை ஸ்பெஷல். அவல் சுண்டல். காலை ஸ்நாக்ஸாக அவல் சுண்டலைக் கொறித்துவிட்டுக் கிளம்பினோம். பிறகு காரிப்பட்டியில் காலை உணவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி தாண்டித்தான் போக வேண்டும். டுகாட்டி பைக்கில் க்ளோவ்ஸ், ரைடிங் கியர் சகிதமாக என்னைப் பார்த்தவர்கள், ‘‘பெரிய பைக் ரைடரா இருப்பாரு போல…’’ என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். நினைத்ததுபோலவே ஒருவர், ‘‘எந்த ஊருக்கு சார்… இமயமலையா’’ என்று நமது ரசிகராகவே மாறிவிட்டார்.

முட்டல் பற்றிச் சொன்னதும், ‘‘அட, நானும் ஆத்தூருதான்… போங்க, சம்மர்லயும் தண்ணி விழுகும்ல’’ என்று வழி சொல்ல ஆரம்பித்தார். வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம் வழியாக ஆத்தூர் - சென்னை பைபாஸில் இடதுபுறம் திரும்ப வேண்டும். அதாவது, சென்னையில் இருந்து வருபவர்களுக்கு வலதுபுறம் திரும்ப வேண்டும். கூகுள் மேப்பெல்லாம் தேவைப்படவில்லை.

மலேசியாவுக்கு அடுத்த பெரிய முருகர் சிலை
மலேசியாவுக்கு அடுத்த பெரிய முருகர் சிலை

ஆத்தூர் போகும் வழியில் வாழப்பாடியில் முருக பக்தர்களுக்கு ஒரு சரியான ஸ்பாட் இருக்கிறது. உலகின் மிக உயரமான முருகர் சிலை இங்கேதான் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. 2 லட்சம் செங்கற்களும், ஆயிரக்கணக்கில் சிமெண்ட் மூட்டைகளும் கொண்டு 25,000 பேர் ரெடி செய்யும் இந்த முருகர் சிலையின் உயரம் 146 அடியாம். அதாவது, மலேசியாவில் உள்ள 140 அடியைவிட 6 அடி உயரமானது இது. இனி தைப்பூசத் திருவிழாவுக்கு சேலத்தில் ஜெகஜாலமாக இருக்கலாம். இந்த அக்டோபரில் இது ரெடியாகி விடுமாம்.

முருகர் சிலையில் போட்டோ எடுத்துவிட்டு, ஆத்தூருக்குப் பறந்தது டுகாட்டி. நமது ரசிகர் சொன்னபடி ஆத்தூர் பாலம் தாண்டி இடதுபுறம் கீழே இறங்கினால், ஆனைவாரி முட்டலுக்கு ஆயிரம் பேர் வழி சொல்கிறார்கள். ஆத்தூர் அருகே கல்லாநத்தம் எனும் கிராமத்தில் வடக்குப் பக்கம் 4 கிமீ தூரத்தில் ஆனைவாரி எனும் ஏரி உண்டு.ஏரியில் இருந்து 2 கிமீ தொலைவில் முட்டல்.

முட்டல் பூங்கா
முட்டல் பூங்கா

கிராமத்துப் பக்கம், இரண்டு பக்கம் பச்சைப் பசேல் வயற்காடுகளுக்கு நடுவில், டுகாட்டியின் பீட் சத்தம், க்ளாஸிக் மாடர்னாகக் கலந்துகட்டி இருந்தது. 50 ப்ளஸ்ஸுக்கு மேலே இருப்பவர்கள் என்றால், 1960, 1970–கள் ஞாபகம் வந்துவிடும். மாட்டுக் கொட்டகைகளும், சாண வாசமும், ஆட்டுப் புழுக்கை உரமும் சேர்ந்து இந்த மில்லியனிலும் இப்படி ஒரு கிராமமா என்று நமது நாஸ்டால்ஜியாவைக் கிளப்பி விட்டு விடுகிறது.

முட்டல் ஜங்ஷன் ஓரமாக ஒரு மினி பஸ் நின்று கொண்டிருந்தது. முட்டலுக்கு ஆத்தூரில் இருந்து பேருந்து வசதி உண்டுபோல! என்ட்ரன்ஸிலேயே குரங்கார்கள் சேட்டை பண்ண ஆரம்பித்திருந்தார்கள்.

முட்டலுக்கு வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ். இங்கே அதிகாலை வந்துவிட்டால், வெயிலில் இருந்து தப்பிக்கலாம். பருவமழை நேரம்தான் முட்டலுக்கு சீஸன். மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தண்ணீர் வரத்து குறைந்து விடுகிறது. நாம் போனபோது, சுமாராக விழுந்தாலும் ஜில்லென்று இருந்தது அருவி நீர். ஆனால், இதுதான் குறைவான நீர் வரத்தாம். சில நேரங்களில் ஜூலை மாதம் சின்ன மழை பெய்தால்கூட அருவியில் தொப தொபவெனக் குளிக்கலாம் என்றார்கள்.

ஆத்தூர் ஏரி மீன் வறுவல்
ஆத்தூர் ஏரி மீன் வறுவல்

குளித்துவிட்டு வந்தால், மீன் வறுவல்கள், காரக் குழிப்பணியாரம், அப்பள பஜ்ஜி என்று ஸ்நாக்ஸ்களை லவட்டலாம். நாம் போனபோது வெறிச்சென்று இருந்த ஜங்ஷனில், குளித்து விட்டுத் திரும்ப வரும்போது, ஓர் அக்கா – கட்லா, ஜிலேபி மீன் வறுவல்களைக் காட்டி, மதிய உணவு நேரத்தில் ஆசை காட்டினார். பணியாரக் கடை பாட்டியும் எக்ஸ்ட்ராவாக இருந்தார்.

நுழைவு வாயில் செக்போஸ்ட்டில் ஆளுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள். பைக்குக்குத் தனியாக 20 ரூபாய். பிளாஸ்டிக் சாமான்கள் போன்றவற்றுக்காக சோதனை போடுவார்கள் என்று நினைத்தேன். இல்லை.

வனச்சோதனையாளர்கள்கூட டுகாட்டியைப் பற்றி விசாரிக்கத் தவறவில்லை. வலது பக்கம் போட்டிங் ஏரியா இருந்தது. ஊரடங்குக்குப் பிறகு இப்போதுதான் திறந்திருப்பதாகச் சொன்னார்கள். ஓர் ஆளுக்கு 50 ரூபாய் கட்டணம். பெடல் போட்டிங் இருந்தது. பரந்து விரிந்த ஏரியில் பாதுகாப்பாக படகுச்சவாரி கூட்டிப் போகிறார்கள். மொட்டை வெயிலில் மொட்டையான படகில் ஏரியில் படகுச்சவாரி போய்க்கொண்டிருந்தார்கள் சிலர். குளித்துவிட்டு வரலாம் என்று போட்டிங்கை போஸ்ட்போன்டு செய்தோம்.

போட்டிங் ஏரியாவிலேயே பூங்காவும் இருந்தது. யானை, காட்டெருமை, மான் படமெல்லாம் வரைந்து வைத்து காடு எஃபெக்ட் காண்பிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், நிஜமாகவே இங்கு கரடி, காட்டு மாடுகளெல்லாம் உலா வரும் என்றார் பூங்கா ஊழியர் ராணியம்மாள்.

பரந்து விரிந்த முட்டல் ஏரி
பரந்து விரிந்த முட்டல் ஏரி

போட்டிங் முடித்துவிட்டும் குளிக்கலாம். இதற்கு மேல் கார்கள் போக முடியாது எனும் ஓர் இடத்தில்தான், டுகாட்டிக்கு வேலையே ஆரம்பித்தது. வலது புறம் திரும்பினால், அருவி. சரியான ஆஃப்ரோடு போங்கள்! சிற்றோடை சலசலக்க, சறுக்கி எடுக்கும் குட்டிக் குட்டிப் பாறைகள் மீதும், மணல்மேட்டின் மீதும் பைக்குகள் வ்வ்ர்ர்ரூமிக் கொண்டிருந்தன.

முட்டல் அருவிக்குப் போகும் ட்ரெக்கிங் வழியில் நல்லவேளையாக – அங்கங்கே சைன் போர்டு வைத்திருந்தார்கள். கொஞ்சம் பிசகினாலும், மலை உச்சிக்குப் போய்விட வேண்டியதுதான். அருவியைத் தேடி வெள்ளிமலை, கல்வராயன் மலை உச்சிக்குப் போய்த் திரும்பி வந்தவர்களும் இருக்கிறார்களாம்.

இதற்கு மேல் பைக்குகளாலும் போக முடியாது எனும் ஓர் இடத்தில்தான், நடக்கத் தொடங்கினோம். சரியான ட்ரெக்கிங். வெயிலில் சரியாக எண்ணவில்லை. சுமார் 50 படிகள் இருக்கும். ஸ்க்ராம்ப்ளர் போன்ற பைக்குகளைப் படிகளில்கூட ஏற்றலாம்தான். ஆனால், மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள் என்பதற்காக, ஒரு ஓரமாக பார்க் செய்துவிட்டேன் டுகாட்டியை.

முட்டல் ஏரி போட்டிங்
முட்டல் ஏரி போட்டிங்

மூச்சு முட்ட 50 படிகள் ஏறி... வலப்பக்கம் பார்த்தால்... வாவ்! முட்டல் அருவியின் டெட் எண்ட். சுட்டெரித்த வெயிலுக்கு இதமாய், எப்போடா அருவியில் கால் நனைப்போம் என்று இருந்தது. நம்மைப்போல் அவசரக் குடுக்கைகள் சிலர், அருவியில் இறங்கி விட்டிருந்தார்கள். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் – குரங்குகளிடம் நமது உடைமைகளைப்பறி கொடுத்து விடக் கூடாது என்பதுதான். எனவே, நண்பர்களுடன் வருவதுதான் இங்கே பெஸ்ட்.

மொட்டை வெயிலில் ட்ரெக்கிங் போவதுதான் கொடுமை. ஆனால், அதே வெயிலில் அருவியில் தலை நனைத்தால்... அதைவிட இனிமை வேறில்லை என்று தோன்றியது. 12 மணி வெயிலிலேயே குளிரெடுத்தது வித்தியாசமான அனுபவம். முறையான டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால், பெண்களுக்குத் தனியாகத் துணி மாற்றும் அறை எல்லாம் கொடுத்துப் பராமரித்திருந்தார்கள். ஆனால், தனிக் குளியல் ஏரியா இல்லை.

அருவிக்கு மேலே ட்ரெக்கிங் ஆபத்து
அருவிக்கு மேலே ட்ரெக்கிங் ஆபத்து

நீச்சல் விரும்பிகளுக்கும் முட்டலில் இடவசதி உண்டு. அருவிக்குக் கீழே அகழி போன்றதோர் இடத்தில் ஒரு குரூப் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது. விசாரித்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுர்கம், சேலம் என்று அக்கம் பக்கத்து ஏரியாவினர். அவர்களின் வீக் எண்ட் ஸ்பாட், முட்டல்தானாம்... ஆழமே இல்லாத அகழியில் ஜாலியாகக் குளிக்கலாம். சிலர் இங்கேயே உணவைச் சமைத்து எடுத்து வந்து, குரங்குகளுக்குக் கல்தா கொடுத்துவிட்டு, சாப்பிட்டுக் கிளம்புகிறார்கள்.

முட்டலில் சாப்பிடுவதெற்கென்று ஒரே ஒரே ஹோட்டல் உண்டு. அசைவம், சைவம் என்று மீடியம் ரகம்தான். ஆன் தி ஸ்பாட் சமையலுக்கும் முட்டல் அருவியில் ஆப்ஷன் உண்டு. ராணியம்மாளிடம் சொன்னால் (9626774207) சமைத்துச் சாப்பிடவும் வழி உண்டு. மீன், கறி போன்றவற்றை மட்டும் நாம் வெளியில் இருந்தே வாங்கிக் கொண்டு போனால் போதும். அருவிக் குளியலை முடித்துவிட்டு, பூங்காவில் மூங்கில் கூரைக்கடியே அசைவ உணவைச் சாப்பிடுவதைவிட வேறென்ன அனுபவம் வேண்டும். நமக்கு அப்போதுதான் விஷயம் தெரிந்ததால், உச் கொட்டினோம். நாங்கள் அதைவிடச் சிறப்பான ஓர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருந்தோம்.

காரில் போனால் இந்தப் பாதையில் நடந்துதான் போகவேண்டும்.
காரில் போனால் இந்தப் பாதையில் நடந்துதான் போகவேண்டும்.

சேலம் வரை போய்விட்டு, மண்பானைச் சமையல் சாப்பிடவில்லையென்றால் எப்படி? சேலம் பைபாஸ் வாழப்பாடியில் ‘ராயல் ஃபுட்ஸ்’ என்றோர் இடம், மதியச் சாப்பாட்டுக்கு சூப்பர் ஆப்ஷன். அருவியில் நனைந்துவிட்டு, வெயிலில் காய்ந்தபடி டுகாட்டியில் செக்போஸ்ட்டில் ரிட்டர்ன் ஆனால்... நான் ஏற்கெனவே சொன்னதுபோல் மீன் வறுவல்கள் பணியாரங்கள் வேறு எச்சிலை ஊற வைத்தன.

ராயல் ஃபுட்ஸில்தான் அடுத்து டுகாட்டியை பார்க் செய்தேன். நாட்டுக் கோழி, சேவல் போன்றவற்றை நாமே தேர்ந்தெடுத்தால், கொஞ்ச நேரத்தில், சூப் – வறுவல் – குழம்பு என்று ஜமாய்த்து விடுகிறார்கள். எல்லாமே மண்பானையில், சிவப்பு மிளகாய் – மிளகு – உள்ளூர் சமையல் பொடி என்று கிராமத்து மணம் கமழக் கமழப் பரிமாறுகிறார்கள். பாக்கு மட்டைத் தட்டில் சாப்பாடு – நாட்டுச் சேவல் வறுவல் – சின்ன வெங்காயத் தயிர் என்று சாப்பாட்டு வெறியர்கள் வெறித்தனம் காட்டலாம். நாட்டுக் கோழியை வெறித்தனமாக மேய்ந்த பிறகு, மறுபடியும் மூளையிலும் வயிற்றிலும் மணி அடித்தது. ‘‘திரும்பவும் டுகாட்டியை முட்டலுக்கு விட்டா என்ன!’’

நாட்டுக்கோழி ஆன் தி ஸ்பாட் சமையல்
நாட்டுக்கோழி ஆன் தி ஸ்பாட் சமையல்
ஆன் தி ஸ்பாட் சமையல்
ஆன் தி ஸ்பாட் சமையல்

முட்டலுக்குப் போறீங்களா... நோட் பண்ணுங்க!

சேலம் இப்போது ஓர் அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட் ஆகி வருவதற்குக் காரணம், இந்த முட்டல் அருவிதான். ஆத்தூர் அருகே கல்லாநத்தம் எனும் கிராமத்தில் வடக்கில் இருந்து 4 கிமீ தொலைவில் இருக்கிறது ஆணைவாரி ஏரி. இந்த ஏரியில் 2 கிமீ தூரம் போனால் முட்டல். சென்னையில் இருந்து வருபவர்கள், ஆத்தூர் பைபாஸில் வலதுபுறம் திரும்ப வேண்டும். சேலத்தில் இருந்து வருபவர்கள் என்றால், இடதுபுறம். முட்டல் அருவிக்கு சீஸன் – என்பது பருவமழை நேரம்தான்.

முட்டல்
முட்டல்
முட்டல் செக் போஸ்ட்
முட்டல் செக் போஸ்ட்

செப்டம்பரில் இருந்து ஜனவரி வரை சரியான சீஸன் என்றார்கள். சில நேரங்களில் ஜூலை மாத சின்ன மழையில்கூட அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் என்கிறார்கள். வெயில் நேரம் என்றால் அதிகாலை முட்டல் என்ட்ரன்ஸில் இருப்பதுபோல் பார்த்துக் கொண்டால் நலம். பட்ஜெட் மீன் வறுவல், பணியாரக் கடைகள், ஒரே ஒரு ஹோட்டல் என்று அற்புதமான கிராமத்து டூராக இருக்கும் முட்டல். படகுச்சவாரி, குழந்தைகள் விளையாட பூங்கா என்று ஃபேமிலி டூராகவும் என்ஜாய் பண்ணலாம். இங்கே இரவு நேரங்களில் மட்டும் கரடி, காட்டு மாடுகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் உண்டு என்றும் சொல்கிறார்கள். சமைத்துச் சாப்பிடவும் முட்டலில் ஆப்ஷன் உண்டு. சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, கோவைக்கு டூர் அடிப்பவர்கள் – முட்டலையும் ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து வரலாம்.