Published:Updated:

15,000 அடி உயரம், அஸ்ஸாம் பூகம்பம், சீனா வரை எலெக்ட்ரிக் ஆட்டோவில் பயணம் - கின்னஸ் கனவு நிறைவேறுமா?

ஜோதி விக்னேஷ்

தனது மஹிந்திரா ட்ரியோ எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவில் இந்தியா முழுக்கச் சுற்றி வருகிறார் ஜோதி விக்னேஷ். பயணம் கிளம்பி 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 17,000 கிமீ தூரமும், 19 மாநிலங்களையும் கடந்திருக்கிறார்.

15,000 அடி உயரம், அஸ்ஸாம் பூகம்பம், சீனா வரை எலெக்ட்ரிக் ஆட்டோவில் பயணம் - கின்னஸ் கனவு நிறைவேறுமா?

தனது மஹிந்திரா ட்ரியோ எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவில் இந்தியா முழுக்கச் சுற்றி வருகிறார் ஜோதி விக்னேஷ். பயணம் கிளம்பி 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 17,000 கிமீ தூரமும், 19 மாநிலங்களையும் கடந்திருக்கிறார்.

Published:Updated:
ஜோதி விக்னேஷ்
‘‘உங்களுக்கென்ன மச்சான்... நீருதான் தென்காசி போயிட்டு வர்ற மாதிரி பொசுக்கு பொசுக்குனு துபாய் போயிட்டு வர்றீரு!’’ – ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். இந்த வசனத்தை ஜோதி விக்னேஷைப் பார்த்துத் தாராளமாகச் சொல்லலாம்.

‘பொசுக்கு பொசுக்கு’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி இமயமலைக்கு வண்டியைக் கிளப்பி விடுவார் ஜோதி விக்னேஷ். இந்த முறை சத்தமே இல்லாமல்… அதாவது, எலெக்ட்ரிக் ஆட்டோ என்பதைத்தான் இப்படிச் சொல்கிறேன். வழக்கமான பெட்ரோல்/டீசல் வாகனங்களில் ஊர் சுற்றுவதற்கே பல பேர் அயற்சி ஆகிவிடுவார்கள். ஆனால், ஜோதி விக்னேஷ் – தன்னுடைய மஹிந்திரா ட்ரியோ (TREO) எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவில் ஒரு ஆல் இந்தியா ட்ரிப் கிளம்பியிருக்கிறார். இதுவரை, இந்தியா முழுக்க 2 தடவை சுற்றிவிட்டாராம்.

ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)
ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இப்படி வெட்டியா சுத்துறதுக்கு எதுனா சாதனை பண்ணலாமே’ என்று மூன்றாவது முறைதான் அவருக்கு ஒரு ஸ்பார்க் அடித்திருக்கிறது. எப்படியாவது ரெக்கார்டை முறியடித்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று. அதற்காகத்தான் இந்த மூன்றாவது பயணம். தன்னுடைய ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோவில், டிசம்பர் 5–ம் தேதி பெங்களூருவில் இருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கிவிட்டார். இதற்காக பெங்களூவில், தான் பார்த்து வந்த பணியையும் விட்டுவிட்டார் ஜோதி விக்னேஷ்.

ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)
ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)

இந்த 7 மாதங்களில் இதுவரை கர்நாடகா, தமிழ்நாடு, கோவா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், மேகாலயா, திரிபுரா, மிஸோரம், நாகலாந்து, பீஹார், அருணாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என்று சுமார் 19 மாநிலங்களையும், 15,800 கிமீ–களையும் கடந்து முடித்துவிட்டார் ஜோதி விக்னேஷ். கேட்கும்போதே கிர்ரென்று இருந்தது எனக்கு. கின்னஸ் ரெக்கார்டை முறியடிக்க இவர் அடுத்த 5 மாதங்களுக்குள்… அதாவது ஓர் ஆண்டுக்குள் தனது ஊரான பெங்களூருவுக்கு ரிட்டர்ன் வரும்போது, தனது எலெக்ட்ரிக் ஆட்டோவின் மீட்டர் 30,000 கிமீ–யைத் தொட்டிருக்க வேண்டும் என்பதுதான் ஜோதி விக்னேஷின் டார்கெட்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜோதி விக்னேஷைக் கஷ்டப்பட்டு போனில் பிடித்து… ‘‘நானு ஜோதி ஜொத்தே மதனதுத்தினேனனே’’ என்று அரைகுறைக் கன்னடத்தில் பேசினால்… ‘‘ஹலோ... நான் சுத்தத் தமிழ். சொந்த ஊர் மதுரை. கோரிப்பாளையத்தில்தான் படிச்சேன். அப்பா CISF ஆபீஸர். அதனால், அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆவாரு. கிட்டத்தட்ட இந்தியாவோட அத்தனை பாஷையும் தெரியும். இப்போ காஷ்மீர்ல இருக்கேன். செம குளிரு! ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேன். அப்புறமா கூப்பிடுறேன் பாஸ்!’’ என்றார் ஜோதி விக்னேஷ் நடுங்கிக் கொண்டே!

ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)
ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)
ஜோதி விக்னேஷுக்கு இது 3–வது ஆல் இந்தியா ட்ரிப். 2016–ல் தனது முதல் பைக் ட்ரிப்பில், 2 மாதங்களில் 8,000 கிமீ–களை கவர் செய்திருக்கிறார். இரண்டாவது ட்ரிப் – மாருதி பெலினோ காரில். 8 மாதங்களில் 40,000 கிமீ–யை கவர் செய்திருக்கிறார். IC இன்ஜின் வாகனங்களில் உலகம் முழுவதும் சுற்றலாம்; ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆல் இந்தியா ட்ரிப் என்பதெல்லாம் பக்கா ப்ளான் பண்ணிச் செய்தால்தான் உண்டு!
ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)
ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)

ரூமுக்கு வந்த உடனேயே தொடர்பு கொண்டார் ஜோதி. ‘‘ஆமா பாஸ். அதுதான் சவாலே! சவால் மட்டுமில்லை; உலகம் முழுவதும் Pollution Free ஆக சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதற்காகவும், அதிவேகமில்லாமல்/ஆபத்தில்லாமல் பயணிக்க வேண்டும் என்பதையும் சொல்லத்தான் இந்த எலெக்ட்ரிக் பயணம். அதைத் தாண்டி கின்னஸில் இடம் பிடித்தே ஆக வேண்டும்.

ஜோதி விக்னேஷ் - பயணத்தில்...
ஜோதி விக்னேஷ் - பயணத்தில்...

எலெக்ட்ரிக் ஆட்டோவுக்கு சார்ஜ் ஏற்றுவதுதான் இந்தப் பயணத்தில் பெரும் சிக்கல். அங்கங்கே நிறுத்தி நிறுத்தி சார்ஜ் ஏற்றி… சார்ஜிங் பாயின்ட்கள் தேடி… மற்றபடி இந்த ட்ரிப் செம ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கிறது!’’ என்றவரிடம் சில அனுபவங்கள் பற்றியும் கேட்டேன். த்ரில்லிங், காமெடி என்று பல அனுபவங்களைச் சொன்னார்.

‘‘நாகலாந்தில் உள்ள மோக்கோச்சங் எனும் இடத்தில், சில போராளிகளிடம் மாட்டிக் கொண்டேன். அவர்கள் என்னை ஓர் உளவாளி என்று நினைத்திருக்கிறார்கள். திடீரென ஒருவர், என் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கேட்டார். நான் ஒரு டிராவலர்தான்; இது என்சிசி துப்பாக்கி; பெட்ரோல் போடவே காசு இல்லாமல் எலெக்ட்ரிக் ஆட்டோவில் வந்திருக்கிறேன்’ என்று பல உண்மைகளைச் சொன்ன பிறகு அவர்கள் என்னை அனுப்பிவிட்டார்கள்.

ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)
ஜோதி விக்னேஷ் - மஹிந்திரா ட்ரியோ (TREO)

அருணாச்சலப் பிரதேசத்தில், 14,700 அடி உயரத்தில் உள்ள தவாங் என்னும் இடத்தில் 4வீல் டிரைவ் கார்கள் போவதே கஷ்டம். அந்த இடத்தில் பனிப் பள்ளங்களில் என் ஆட்டோவை ஓட்டுவதற்குள் படாத பாடு பட்டு விட்டேன். கஷ்டப்பட்டு ஒரு புத்த பிட்சுவின் உதவி கிடைத்தது. அவரின் சின்ன வீட்டில் தங்க இடம் கொடுத்தார். சரியான காய்ச்சல். அதோடு 20 கிமீ தாண்டியபிறகு, தவாங் காவல் நிலையத்தில் இருந்து எனக்கு போன். என்னமோ ஏதோனு பயந்து போனால்… அங்குள்ள ஆர்மி பிரிகேடியர், ‘இதற்கு முன் இந்த இடத்துக்கு எந்த எலெக்ட்ரிக் வாகனமும் வந்ததில்லை; ஒரு செல்ஃபி ப்ளீஸ்’ என்று போட்டோ எடுத்துக் கொண்டார். அப்புறம்… எனக்கு விஐபி சூட் ரூமெல்லாம் போட்டு 2 நாள்கள் ராஜமரியாதையுடன் எனக்குக் கவனிப்புதான் போங்கள். அவர்கள் உதவியுடன்தான் சீன எல்லைக்குப் பக்கத்தில் உள்ள பம்லா பாஸ் வரை என் ஆட்டோவில் போக முடிந்தது. இங்கேயும் எந்த ஆட்டோவும் வந்ததே இல்லையாம்.’’ என்றார் ஜோதி விக்னேஷ்.

இது தவிர, மிசோரம் வெள்ளத்தில் உயிர் தப்பியது… அருணாச்சலப் பிரதேச அவலாஞ்சியில் மாட்டியது… உபியில் உச்சபட்ச வெயிலில் சூட்டுக்கட்டிகள் வந்து தவித்தது… அசாமில் பூகம்பத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது.. என்று ஏகப்பட்ட அனுபவங்கள் உண்டு ஜோதி விக்னேஷிடம்.

ஆரம்பத்தில் இந்தப் பயணத்துக்காக ஸ்பான்சர் தேடி பல இடங்களுக்கும் அலைந்தவருக்கு, கடைசியில் மஹிந்திராவே உதவி செய்திருக்கிறது. ஷோரூம் சர்வீஸ் என்ற வகையில் மஹிந்திராவிடமிருந்தே பல உதவிகள் கிடைத்திருக்கின்றனவாம். அட, மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திராவே தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதியின் பயணத்தை ஃபாலோ செய்கிறாராம்.

இந்த மஹிந்திரா ட்ரியோ இவி ஆட்டோவின் ஃபுல் ரேஞ்ச் 110 கிமீ என்றாலும், 70 – 80 கிமீதான் ஃபுல் சார்ஜுக்குப் போக முடிகிறதாம். அதிலும் காஷ்மீர் போன்ற பனிப்பிரதேசங்களிலும், மலையேற்றங்களிலும் சார்ஜ் இன்னும் குறையும். அதனால், ஒவ்வொரு 40 கிமீ-க்கு ஒரு முறையும் சார்ஜ் போடுவதற்குத்தான் பெரும் பாடு படுவதாகச் சொல்கிறார். ஓப்பன் டைப் வாகனம் என்பதால், பொருள்களை வைத்து லாக் செய்வதும் இதில் சிரமம். மேலும், மஹிந்திரா ஆட்டோ லாங் ரைடுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல. அதனால், ரைடிங் பொசிஷன் மிகவும் சுமாராக இருக்கும். மாதக் கணக்கில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுவதால்… முதுகுவலிக்கு பிசியோதெரபி ட்ரீட்மென்ட்டும் எடுத்து வருகிறாராம்.

‘‘எவ்வளவு தடைகள் வந்தாலும், கின்னஸ் ரெக்கார்டோடு பெங்களூருவுக்கு வந்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்’’ என்ற ஜோதி விக்னேஷை – வாழ்த்த வயதிருப்பவர்கள் வாழ்த்துங்கள்; தகுதி இருப்பவர்கள் ஆசிர்வதியுங்களேன்!