Published:Updated:

'பைக்'-கில் லட்சுமி... பாலக்காடு to லடாக்; காரில் மீனாட்சி... கோவை to ரஷ்யா!

லட்சுமி
லட்சுமி

தினமும் ஒரு சிட்டியிலிருந்து இன்னொரு சிட்டிக்குப் போயிடுவேன். அங்கு ஏதாவது நல்ல ஹோட்டல்ல ரூம் போடுவேன். மாலையானதும் வேலை பார்க்க ஆரம்பிச்சிடுவேன்...

"ஒருமுறை கோவாவுக்குப் போனேன். அடுத்ததா வாகமன் ட்ரிப். அதை வீடியோ எடுத்து டிக்டாக்ல போட்டப்ப, 'இதுக்கு ஏன் இவ்வளவு சீன்? நாங்க எல்லாம் லடாக் வரைக்கும் பைக்லேயே தனியாளா பயணிச்சிருக்கோம்'னு சில ஆண்கள் கமென்ட் போட்டாங்க. அப்பதான், 'நம்ம ஏன் லடாக் போகக் கூடாது'ன்னு நெனச்சி, அப்படி அங்கே போயிட்டு வந்த ஒருவரைச் சந்திச்சேன்.

'ரோடெல்லாம் கரடுமுரடா இருக்கும். ஆபத்தான பாதை, மக்கள் நடமாட்டமே பல இடங்கள்ல இருக்காது'ன்னு சொன்னார் அவர். அப்பவே லடாக் போகணும்னு முடிவு செய்தேன். காசு முக்கியம் என்கிறதால, வேலை பார்த்துட்டே பயணம் செய்ய திட்டமிட்டேன். இதை என் ஆபீஸ் மேனேஜர்கிட்ட சொன்னதும் கிரீன் சிக்னல் கொடுத்தார்'' என்கிறவர், தன் பைக் பயண நாள்கள் பற்றிச் சொல்கிறார்.

'பைக்'-கில் லட்சுமி... பாலக்காடு to லடாக்; காரில் மீனாட்சி... கோவை to ரஷ்யா!

''தேவைக்கு உடை, பணம், லேப்டாப், செல்போன், சார்ஜர், டென்ட், தண்ணீர் பாட்டில், பைக் டேங்க் முழுக்க பெட்ரோல், பாதுகாப்புக்கு ஒரு பெப்பர் ஸ்பிரே... இவ்வளவுதான் என் லக்கேஜ். 'காஷ்மீர் போறேன், வர்றதுக்கு 45 நாள்கள் ஆகும்'னு அப்பாக்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

வீட்லேருந்து கிளம்பி மங்களூர் போகிற வரைக்கும் டிக்டாக்ல தொடர்ந்து வீடியோ போட்டுட்டே இருந்தேன். மங்களூர்ல என்னை வரவேற்க என் டிக்டாக் ஃபாலோயர்ஸ் காத்திருந்தது பெரிய சர்ப்ரைஸா இருந்தது. தினமும் ஒரு சிட்டியிலிருந்து இன்னொரு சிட்டிக்குப் போயிடுவேன். அங்கு ஏதாவது நல்ல ஹோட்டல்ல ரூம் போடுவேன். மாலையானதும் வேலை பார்க்க ஆரம்பிச்சிடுவேன்..."

- கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி, தனியாளாக பாலக்காட்டிலிருந்து தனது பைக்கில் 11,000 கி.மீ பயணித்து இமயம் தொட்டுத் திரும்பியிருக்கிறார். சாதாரண நாள்களிலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்வது எளிதான காரியமில்லை. பெருமழை, வெள்ளம், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் போன்ற சம்பவங்கள் பல நிறைந்த பரபரப்பான, பதற்றமான சூழ்நிலையில் ஓர் அசாத்திய பயணத்தை முடித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் லட்சுமி. ஒரு முன்பகல் நேரத்தில் லட்சுமியைச் சந்தித்தோம். அவரது அபார அனுபவங்களை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 11,000 கி.மீ... தனியே தன்னந்தனியே பயணம்! - லட்சுமி https://www.vikatan.com/lifestyle/women/lakshmi-travel-from-kerala-to-everest

70 நாடுகளின் மண்ணை மிதித்திருக்கும் மீனாட்சி!

''70 நாடுகளுக்குப் பயணப்பட்ட அனுபவத்தில் சொல்றேன். பயணங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்கிற எண்ணமே தவறு. முறையான திட்டமிடலோடு சென்றால் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்னையும் வராது. மனுஷங்களை நம்புங்க... எல்லா இடத்துலயும் நல்லதே நடக்கும். மொழி ஒரு பிரச்னையே இல்லைனு, நான் சந்திச்ச மனுஷங்கள் உணரவெச்சாங்க. அடிப்படை ஆங்கிலம்கூடத் தெரியாத எத்தனையோ ஊர்களுக்கு நான் பயணப்பட்டிருக்கேன். டீ, காபி வேணும்னாகூட எப்படிக் கேட்கிறதுன்னு தெரியாது. ஆனா, மொழியைத் தாண்டி மனுஷனுக்கு மனுஷன் ஒரு கனெக்ட் இருக்கு. அதுக்கு, நாம மனுஷங்களை முதல்ல நம்பணும்’’ என்று நம்பிக்கை அளிக்கிறார் மீனாட்சி.

'பைக்'-கில் லட்சுமி... பாலக்காடு to லடாக்; காரில் மீனாட்சி... கோவை to ரஷ்யா!

கோயம்புத்தூரைச் சேர்ந்த மீனாட்சிக்கு 47 வயது. இதுவரை 70 நாடுகளின் மண்ணை மிதித்திருக்கும் மீனாட்சி, சமீபத்தில் கோயம்புத்தூரிலிருந்து ரஷ்யாவரை காரிலேயே பயணப்பட்டிருக்கிறார்.

"நல்லா கார் ஓட்டுவேன் என்பதால் அடிக்கடி தனியா பயணம் செய்வேன். ஒருகட்டத்தில், சமூக வலைதளம் மூலமா குழு அமைச்சு, ட்ரிப் ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சோம். அப்படி நான் முதன்முறையா ஒருங்கிணைத்த ட்ரிப், 2016-ல் இந்தியாவிலிருந்து தாய்லாந்து வரையிலான ரோடு ட்ரிப். ஏறத்தாழ 3,000 கி.மீ பயணம். அடுத்து, 2017-ல் கோயம்புத்தூர் முதல் லண்டன் வரை ரோடு ட்ரிப் போனோம். 2017-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 70-வது வருடங்கள் ஆகியிருந்தது. அதனால், சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் கழித்தும், அடிப்படைக் கல்வி கிடைக்காமல் இருக்கும் கிராமப்புறங்களில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை எங்கள் பயணத்தின் இலக்காக்கினோம்..."

- மீனாட்சியின் முழுமையான அனுபவப் பகிர்வை அவள் விகடன் இதழில் வாசிக்க > உலகப் புத்தகத்தைப் புரட்டுவோம், வாருங்கள்! - மீனாட்சி https://www.vikatan.com/lifestyle/women/travelling-experience-by-meenatchi

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு